Thursday, 1 October 2015

பாசிசம் என்றால் என்ன

பாசிசம் என்றால் என்ன என்று இதுவரை இருந்து வரும் அர்த்தத்திற்கு நேர்மாறான ஒரு அர்த்தத்தை தரும் கட்டுரையை எழுதி உள்ளது வியப்பை தருகிறது
1930 களில் யார் யாருக்கு வோட்டுரிமை இருந்தது,வோட்டுரிமை பெற அடிப்படை தகுதிகள் எவை ,வோட்டு போடும் உரிமை பெற்றவர்கள் எத்தனை சதவீதம் என்பதை விளக்கி இருந்தால் பல உண்மைகள் விளங்குமே.மக்கள் தொகையில் மிக குறைந்த மக்களுக்கே வோட்டுரிமை இருந்த காலகட்டம் அது. உலகெங்கும் வோட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு.வோட்டுரிமைக்கு தகுதி இல்லாதவர்கள் தான் மிக பெரும்பான்மை.பெண் என்பதால்,சொத்து இல்லாததால்,குறிப்பிட்ட பகுதி,கூட்டத்தை சார்ந்தவர்கள்,குற்ற பரம்பரையினர்,பழங்குடிகள் என்று வோட்டுரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
வோட்டுரிமையை பெரும்பான்மை மக்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை திரித்து அன்று இருந்த சிறுபான்மை மக்களுக்கு மட்டுமான வோட்டுரிமையை உண்மையான மக்கள் ஆட்சி,அனைத்து மக்களுக்குமான ஒன்று போல எழுதுவது நியாயமான செயலா.அனைவருக்கும் வோட்டுரிமை இருப்பது போலவும் அதை மாற்ற வேண்டும் என்று பெரியார் கூறியதற்கு வெள்ளைகார துரை நியாயமற்ற கோரிக்கை என்று மறுத்தார் என்று எழுதுவது நல்ல நகைச்சுவை
பெரியார் பெரும்பான்மை மக்கள் நம்பிய பல விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்.இன்றும் சாதி கடந்த திருமணம்,பெண்களுக்கு சொத்துரிமை ,ஒரே கோத்திர திருமணம் ,ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம்,எளிதான மணவிலக்கு மதம் மாறும் உரிமை வேண்டுமா வேண்டாமா என்றால் பெரும்பான்மையினர் வேண்டாம் என்று தான் முடிவு எடுப்பார். அப்படி அவர்கள் முடிவு எடுத்தால் அது சரி என்று ஆகி விடுமா
இன தூய்மைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தவருக்கு எதிராக எவ்வளவு வன்மம்.இதை அவர் சொன்னவற்றிற்கு எதிரானவன் என்பவர் செய்தால் புரிந்து கொள்ளலாம்.ஆனால் இட ஒதுக்கீடு,பெண் விடுதலை,மதம் மாறும் உரிமை,சாதி கடந்த திருமணங்கள் ,மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்று சொல்லி கொள்ளும் கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவர் செய்வதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரியார் வெள்ளையர்களிடம் இருந்து ஆட்சி மத வெறியர்களிடம் செல்வது பெரும்பான்மையான ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் என்று நம்பினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார் . நீங்களும் பெரியார் வழியில் தமிழ் தேசியம்,தனி தமிழ்நாடு என்பது ஏழை எளிய மக்களுக்கு தீங்காக தான் இருக்கும் என்று நம்புவது போல.
பெரும்பான்மையான நாக இன மக்களோ,கஷ்மீரிகளோ ,தமிழர்களோ தங்கள் இன தூய்மையை பாதுகாக்க வெளியாட்களை வெளியேற்ற வேண்டும் எனு பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தீர்மானம் இயற்றினால் அதை எதிர்ப்பவர்கள் மக்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் ,பாசிஸ்ட்கள் என்பீர்களா . நீங்கள் இன்று இந்தியாவோடு இருப்பது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள,ஏற்று கொள்ள முடிகிறது.அதே தான் மத வெறியர்களின் கையில் ஆட்சி சிக்குவதை விட neutral umpire வெள்ளையன் மேல் என்று பெரியார் எண்ணியதன் பின் உள்ள நியாயமும் என்பதை உங்களால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை
தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று எழுதிய பாரதியை உலகையே அழிக்க எண்ணிய கொலைக்காரன், ஒரு வேலை உணவு கிடைக்கவில்லை என்பதற்காக அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பாடியவன் என்று வசைபாடுவதற்கும் நீங்கள் பெரியார் மீது பொழியும் வசைகளுக்கும் வித்தியாசம் கிடையாது.
Ananthakrishnan Pakshirajan
சொல்வனம் கட்டுரை. பிடித்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
http://solvanam.com/?p=41831

Beef Eating Is My Birthright

1911, சூன் 17 ஆம் நாள் ,15 அக்டோபர் 2002 ,04 ஆகஸ்ட் 2015 ,28 செப்டம்பர் 2015
கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய
ஒரு மிலேச்சனாகிய ------
1911, சூன் 17 ஆம் நாள் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் என்ற வெள்ளை அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு,
தன்னையும் சுட்டுக் கொண்டு வாஞ்சிநாதன் இறந்தான். அவனது சட்டைப் பையில் தமிழில் எழுதப்பட்ட பின்வரும் கடிதம் இருந்தது (ரகுநாதன், 1982: 403): “ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vandhi Aiyar of Shencotta
A very disturbing aspect is the involvement of communal forces like the Vishwa Hindu Parishad, Bajrang Dal, etc., who have been continuously active in spreading the virus of communal hatred in the area. They often spread the false rumour of cow slaughter in order to inflame the sentiments of the people against Muslims of the adjoining area of Mewat. Even in this incident a rumour of cow slaughter was used to inflame the crowd. The crime was perpetrated by the frenzied mob armed with irons, rods, spears etc led by these communal forces who controlled the mob and directed their ire against the dalits. The intensity of the communal frenzy can be gauged by an attempt to erase the name of the SSP Jhajjar from the board at chowkie because the concerned officer happens to be a Muslim.
On Sunday morning, 20-year-old Raziya was waiting for her husband to accompany her to a wedding when she received a phone call, informing her about his death. Cradling her two-month-old daughter, Raziya extends a henna-dyed hand and says, “We were supposed to attend a family wedding. The last time I spoke to him, I had been applying henna and I had asked him to reach home on time. I was preparing for the wedding when I received the news of his death.” In the early hours of Sunday, three men — Arif, Anas and Nazim — were beaten to death by villagers in Dadri district, - See more at: http://indianexpress.com/…/suspected-cattle-thieves-beate…/…
இரண்டு நாட்களுக்கு முன் 28 செப்டம்பர் 2011இல் உத்தர்ப்ரதேசத்தில் தாத்ரி எனும் ஊரில் மாட்டு கறி வைதிர்ருந்தார் என்று இஸ்லாமியர் ஒருவர் அடித்து கொல்லபட்டார்.அவர் வீட்டில் மாட்டு கறி இருக்கிறது,பசுவை கொன்று பக்ரீத் நாள் துவங்கி இன்று வரை மாட்டு கறி உண்டு வருகிறார்கள் என்று ஊர் கோவிலில் மைக் மூலம் கோவில் பண்டிதரை வைத்து சொல்ல வைத்து,ஊரில் உள்ள இந்துத்வா ?தேசபக்தர்களை திரட்டி நூற்றுக்கணக்கானவர்கள் வீடு புகுந்து தந்தையையும் மகனையும் அடி அடி என்று அடித்திருக்கிறார்கள்.இதில் தந்தையின் உயிர் பிரிந்து விட்டது. அவர் மகன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.
அவர்கள் வீட்டில் இருந்த கறி மாட்டு கறியா,ஆட்டு கறியா என்று காவல்துறை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.மாட்டு கறியாக இருந்தால் கொலைக்கு முழு பொறுப்பு கொலையானவர் தான் என்று மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் மகேஷ் சர்மா சொல்லி இருக்கிறார்.பா ஜ க வினர் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை/போராட்டத்தை தூண்ட மகாபஞ்சாயத்தை கூட்ட முடிவெடுத்து இருக்கிறார்கள்.
மாட்டுக்காக மனிதர்களை கொலை செய்வது ஹிந்டுத்வர்களுக்கு புதிதான ஒன்று கிடையாது. நூற்றாண்டுகளாக நடக்கும் ஒன்று தான். இதுவரை பசு மாட்டின் மீது உள்ள பக்தியால் மாட்டுக்காக ஹிந்டுத்வர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை எண்ண எண்ண வற்றாத ஒன்று தான்.முதல் விடுதலை போர் என்று அழைக்கப்படும் சிப்பாய் கலகம் அடிப்படையில் பசுவை /பன்றியை வைத்து உருவாக்கப்பட்ட கலகம் தான். அதனால் ஏற்பட்ட படுகொலைகள் பல ஆயிரங்களை தாண்டும். தங்கள் சொந்த மகள்களை,சகோதரிகளை,உறவுகளை அவர்களின் ஒரே கோத்திர/வேறு சாதி மத ,காதல் காரணமாக செய்த கொலைகளை விட குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர மற்றபடி பசுபாசம் காரணமாக ஹிந்துக்கள் செய்துள்ள கொலைகள் மிக மிக அதிகம்.
அவற்றில் சிலவற்றை மேலே கொடுத்துள்ளேன்.பசுவுக்காக கொலை செய்தவர்களை பெரும் தியாகிகளாக இந்து மதவெறியர்கள் @நம்பிக்கையாளர்கள் சித்தரிக்கும் வழக்கமும் நூறாண்டுகளாக நடக்கும் ஒன்று .ஆங்கில அரசின் ஊழியராக இருந்த கலெக்டர் ஆஷ் அவர்களை சுட்டு கொன்ற வாஞ்சி ஐயர் அவர் கைப்பட எழுதி இருந்த குற்றசாட்டில் இருக்கும் கொலைக்கான மிக முக்கிய காரணம் மாட்டு கறி உண்பவன் என்னை ஆள நினைப்பதா எனபது தான்.
தனக்கு பிடித்த உணவை உண்ணும் உரிமை,தனக்கு பிடித்த பணியை செய்யும் உரிமை வேண்டும்,தனக்கு பிடித்த துணையை தேடி கொள்ளும் உரிமை வேண்டும் என்று போராடிய ஒருவனை பாசிஸ்ட்,தேச துரோகி ,சனநாயகத்தின் எதிரி,அவர்களின் முதல் எதிரியாக கருதுபவர்கள் தான் மாட்டுக்காக கொலை செய்த வாஞ்சிநாதனை மிக பெரிய போராளியாக ,தேசபக்தனாக உருவாக்கியவர்கள் என்பதை புரிந்து கொண்டால் மாட்டுக்கும் இந்துத்வதிர்க்கும் உள்ள நேரடி தொடர்பு விளங்கும்.உண்மையான கம்முநிச்ட்களை ஹிந்டுத்வர்கள் வெறுப்போடு எதிரியாக கருத அவர்கள் வலுவாக உள்ள பகுதிகளில் எளிதாக கிடைக்கும் மாட்டு கறியும் முக்கிய காரணம்.
மாட்டு கறி என்பது வெறும் உணவு கிடையாது. அதன் பின் நூற்றாண்டுகளாக தொடரும் வெறுப்பு/சூழ்ச்சி அரசியல் இருக்கும் உண்மை புரிந்தால் நாம் ஏன் மாட்டு கறி உண்ணும் உரிமைக்காக போராட வேண்டும் எனபது தெளிவாக விளங்கும்.
ஆஷ் துரையை கொன்ற வாஞ்சி ஐயரோ ,அரியானாவில் இறந்த பசுவின் தொலை உரித்து கொண்டிருந்த ஐந்து தலித் சமுதாயத்தை சார்ந்தவர்களை காவல்நிலையத்தில் இருந்து இழுத்து கொண்டு வந்து அடித்தே கொன்ற கூட்டமோ,மனிதர்களின் உயிரை விட பசுவின் உயிர் பெரியது,கொலை சரியான தண்டனை தான் என்று பேசிய ஆசாரிய கிசோர்களோ,ஆசாரிய கிஷோரின் மறைவின் போது அவரை பற்றி உருகி (எழுதிய தேர்தல் பிரசாரத்தின் போது மாட்டு கறி ஏற்றுமதியை பெரும் குற்றம் போல பேசிய இன்று மாட்டு கறி முக்கிய உணவாக இருக்கும் நாடுகளிலேயே காலத்தை கழிக்கிற )பிரதமரோ ,மூன்று இஸ்லாமியர்களை 2 மாதங்கள் முன்பு அடித்து கொன்ற கூட்டமோ, மூன்று நாட்கள் முன்பு 50 வயதான ஒருவரை அடித்தே கொன்ற கொலையாளிகளோ அனைவரையும் நூறாண்டுகளாக பிணைக்கும் கயிறு எது என்பதை ஆராய்ந்தால் ஹிந்துத்வம் என்ற பூனைக்குட்டி குதித்து கொண்டு தெரியும்.
இவர்களை எதிர்க்க போகிறோமா அல்லது நாமும் ஆஷ் துரை,தயா சந்த்,ஆரிப் ,முஹம்மத் அக்லாக் போல பலிகடாவாக ஆக போகிறோமா

Friday, 20 February 2015

மோடியின் த்யாகம்


       பரிசாக வந்த பல லட்சம் பெறுமானமுள்ள உடையை ,தன் பெயர் பொரித்த ஆடையை ஒரே ஒரு முறை அணிந்து பின் அதனை ஏலம் விட்டு ,அதன் மூலம் கிடைக்கும் கோடிகளை கங்கையை சுத்தபடுத்த தரும் மோடிஜியின் த்யாகம்,பெருந்தன்மை கண்களை பனிக்க வைக்கிறது

       தினமும் அவருக்கு யாராவது இதே போல பரிசுகளை வழங்கினால்,அவரும் அவற்றை பயன்படுத்தி விட்டு பின் ஏலம் விட்டால்(புரட்சி தலைவி அம்மாவும் டான்சி நிலத்தை ஏலம் விட்டு காவேரியில் தூர் வார தந்திருந்தால் ஒரு முறை பதவி இழக்க,பின் உச்சநீதிமன்றம் என்ன செய்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று விசித்திர தீர்ப்பு தந்து தப்பிக்க வைத்த நிலை வந்திருக்குமா. வளர்ப்பு மகனே பரிசாக வந்தவர் தான் என்று அவரை ஏலம் விட்டிருந்தால் இன்று எந்த வழக்காவது இருந்திருக்குமா.இன்றும் பரிசாக வந்த 3 லட்சம் டாலர் செக்கை மோடியை போல ஏலம் விட செய்தால் வழக்காவது ஒன்றாவது,த்யாக சீலர் பட்டம் தன்னால் தேடி வருமே) வரும் பல ஆயிரம் கோடியை வைத்து கங்கையை மட்டுமா ,இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் மற்றும் அவர் பிரதமராக பதவி ஏற்ற பின் சென்ற நாடுகளில் உள்ள அனைத்து நதிகளையும் சுத்தபடுத்தி விடலாமே.
      என்னன்ன பொருட்களை பரிசாக தந்தால் ஏலம் விட வசதியாக இருக்கும் என்று எண்ணியதில் வந்த சில யோசனைகள்
   
       அதானி மற்றும் அம்பானி போன்றவர்கள் மோடி மோடி என்று எழுதப்பட்ட விமானங்களை.ஜெட்களை பரிசாக அளிக்கலாம்.பல நூறு முறை அவர் பயணம் செய்த அதானியின் விமானத்தை ஏன் அவர் ஏலம் விடவில்லை என்று சில கிருத்துவ கைக்கூலிகள் கேட்க கூடும். அந்த விமானத்தில் அதானி என்று தான் எழுதி இருந்ததே தவிர மோடி என்று அல்ல என்பதை அறியாத எத்தர்கள் அல்ல அவர்கள்.மோடி என்று எழுதிய ஆடை என்பதால் தான் மோடி அவர்களுக்கு அந்த ஆடை தனக்கு சொந்தம் என்ற எண்ணமே உருவானது.அதனால் தான் அதனை ஏலம் விட ஆணை இட்டார் என்ற உண்மையை ஊர் முழுக்க சொன்னால் தான் போலி மதசார்பின்மைவாதிகளின் முகத்திரையை கிழிக்க முடியும்.

        ஒரு முறை தனியார் விமானத்தில் பறக்க பல லட்சம் ரூபாய் செலவு என்றாலும் ஒரு ரூபாய் கூட தராமல் அடானியின் விமானத்தில் பல நூறு முறை பறந்து இந்தியா முழுவதும் சுற்றிய த்யாகத்தின் திருவுருவை பார்த்து ,அவர் ஆடையை வைத்து கிண்டல் செய்த ஐந்தாம்படையினர் அஞ்சுமாறு மோடியின் பெயர் பொறித்த தங்க /வைர ஆபரணங்களை பரிசாக தரலாம்.நகையும் ஒரு ஆடை தானே.துறவி போல வாழ்ந்தாலும் பரிசாக தருபவர்கள் மனம் கோண கூடாது என்பதால் அவற்றை அணியும் உன்னத மனிதன் உடலில் பட்ட வைர/தங்க நகைகள் மாணிக்கங்களை விட அதிக விலைக்கு ஏலம் போகும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா
இயேசுவின் ரத்தம் ஜெயம்,ஜெய் ஸ்ரீ ராம்,இன்ஷா அல்லா என்று மோடியின் பெயரோடு ஒரு ஓரத்தில் மேற்கூறியவை பொறிக்கப்பட்ட ஆடைகளை அவருக்கு பரிசாக தரலாம். பெருந்தன்மை @மோடி அவற்றை அணிந்த பின் விடும் ஏலத்தில் எந்த உடை அதிக தொகைக்கு போகும் என்று மதங்களுக்கு இடையே நடக்கும் போட்டியினால் கிடைக்கும் தொகையை வைத்து இந்தியாவின் அனைத்து கடன்களையும் அடைத்து விடலாமே

        பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட உமாசங்கர் IAS அவர்களுக்கு மோடியின் வடிவில் இயேசு வழி காட்டி இருக்கிறார். ஏசுவே ஒரே கடவுள்,ஏசுவே உண்மை கடவுள் ,துர்தேவதைகளிடம் இருந்து என்னை மீட்ட பிதாவே எங்களை ரட்சியும் என்று எழுதப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு பணிக்கு வந்தால் மோடியின் ஆட்சியில் அவரை பின்பற்றி வாழ்வதால் சங்க பரிவாரங்களும் அவரை போற்றும்.ஓய்வு நேரம் மட்டுமல்லாமல் பணி நேரத்திலும் ஏசுவுக்கு சேவகம் செய்த மனநிறைவும் உண்டாகும்.

        தங்க குல்லாக்களும்,தங்கத்தில் செய்யப்பட்ட சீக்கிய தலைப்பாக்களையும் பரிசாக வழங்கலாம்.குல்லா போடுவதில் உலகத்திலேயே தலை சிறந்தவர் ஆயிற்றே மோடிஜி அவர்கள்.அவர் போட்ட குல்லாயை வாங்க உலக தலைவர்களே நான் நீ என்று போட்டி போடுவார்கள்.

        மோடி மோடி என்று பெயர் பொறிக்கப்பட்ட கொசு மட்டைகளை பரிசாக வழங்கலாம்.குஜராத்தில் அவர் பெயரை கேட்டே ஓடிய கொசுக்கள் ,அதனால் கொசு இல்லாத மாநிலமாக ,இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக,நோய் இல்லாத மாநிலமாக மாறிய குஜராத் போல இந்தியா முழுவதும் மாறி விடுமே.கொசு அடித்தாலும் மோடி பெயர பொரித்த மோடி பயன்படுத்திய கொசு மட்டையால் அடிக்கும் பாக்கியத்துக்காக எத்தனை கோடிகள் கொடுக்கவும் தொழில் அதிபர்கள் தயங்க மாட்டார்களே

          குஜராத்தில் 0-6 ஆண்.பெண் சதவீதம் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 883 2011இல் 886.இந்த மகத்தான சாதனையை நினைவு கூறும் விதமாக மூன்று பெண் சிசுக்களின் தங்க சிலையை பரிசாக தரலாம். 10 ஆண்டுகளில் அவர் நடத்தி கட்டிய இந்த சாதனையை பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் யாரும் எட்ட முடியாது என்பதை உலகுக்கே அறிவிக்கும் பரிசாக இருக்குமே இந்த மூன்று பெண் குழந்தைகளின் சிலைகள்

          5 ஆண்டுகள் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக அவர் சாதித்த வரலாற்று சாதனைகளை(சாதனைகள் தொடர பொறுப்பை அமித் ஷாவிடம் ஒப்படைத்து உள்ளார் எனபது கொசுறு செய்தி) நினைவுபடுத்தும் விதமாக மோடி பெயர் பதித்த ஸ்டம்ப்/மட்டை/பந்துகளை பரிசாக தரலாம். அவற்றை ஏலத்தில் எடுக்க நடக்கும் போட்டி IPL ஏலத்தை தூக்கி சாப்பிட்டு விடுமே

Monday, 1 December 2014

ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்


  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .

    ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்.இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வழங்கப்பட மாட்டாது.இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்  கீழ் நடந்த திருமணம் என்பதால் ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கணவர் கான் உச்சநீதிமன்றத்தில்  வழக்காடினார்ர். பல இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கின.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஷா பானு அவர்களுக்கு ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பு  வழங்கியது.

  இதை இஸ்லாமியரின் தனி சட்டத்தில்/மத நம்பிக்கைகளில்  தலையிடும் செயல் என்று இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்த்து போராட்டத்தில் இறங்கின. ராஜீவ் தலைமையிலான காங்கிரெஸ்  அரசும் அவர்களுக்கு பணிந்து தீர்ப்பை மாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து பெண்ணிய இயக்கங்களும் ஹிந்துத்வா இயக்கங்களும் களத்தில் இறங்கின.

  ஹிந்து இயக்கங்களை வசியபடுத்த ராஜீவ் அரசு பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவிலுக்கு ஷீலான்யாஸ் நடத்த அனுமதி அளித்தது. தவறான செயல்களின் மூலம் இரு சமூகங்களையும் தன பக்கம் இழுக்கலாம் என்ற காங்கிரெஸ் அரசின்  செயல் அவர்களுக்கு எதிராக தான் திரும்பியது.400க்கு மேல் எம் பி க்கள் கொண்ட நிலையில் இருந்து தேய்ந்து கொண்டே வர ஷா பானு வழக்கு தீர்ப்பை மாற்றிய சட்டமும் ,அதற்கு ஈடுகொடுக்க பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவில் கட்ட பூஜை செய்ய தந்த அனுமதியும் தான் முக்கிய காரணங்கள்.

  ஷா பனூ வழக்கிற்கும் இன்று பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் அவர்கள் கேட்டிருக்கும் RTI கேள்விகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
   ஷா பானு அவர்களோடு ஒப்பிட்டால் ஜசோதா  பென் அவர்கள் அனுபவித்த கொடுமையான வாழ்க்கை பல மடங்கு கொடியது.ஷா பானு அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய சட்டம் இருந்தது. கணவர் தெளிவாக மணவிலக்கு செய்து விட்டார்.இங்கு அப்படி எதுவும் கிடையாது

   ஒரு நாளைக்கு 30000 ரூபாய்க்கு குறையாத உயர்ந்த உடைகளை  உடுத்தும்  manithar ,பல ஆண்டு காலம் மாநிலத்தின் முதல்வர்/இன்று பிரதமர் பதவி வகிக்கிறவர் தான்  கணவர்.ஆனால் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் 1968 ஆம் ஆண்டு தொட்டு தாலி கட்டிய  கணவர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,முறையாக மணவிலக்கு செய்யவும் முயற்சிகள் எடுக்கவில்லை,  எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை,

  உலகில் பெண்களை  ஒடுக்குவதில்,அடிமைகளாக நடத்துவதில் ,பொருட்டாக மதிக்காமல் ஆண்கள் வாழ்வதை பெருமையாக கருதிவதில் இந்து மதம் மற்ற அனைத்து மதங்களையும் விட பல படிகள் மேலே என்பதை விளக்க ஹிந்டுத்வத்தின் தலைமகன் மோடி அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.

  தங்கள உரிமைக்காக போராடிய/போராடும் இரு பெண்களில் திரு ஷா பானு அவர்கள் சந்திக்காத  ஜசோதா பென்  அவர்கள் சந்திக்கும் இன்னொரு மிக பெரிய துயரம் அவர் மீது விழும் பழிகளும்,எதிர்கட்சியினரின் சதிவலையின் காரணமாக ஒரு புனிதர் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்று வந்து விழும்   குற்றசாட்டுகளும்.

   1968 இல் 17 வயதில் திருமணமாகி (1976 சட்ட திருத்தம் வருமுன் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் ஆணின்  திருமண வயது 18,பெண்ணின் திருமண வயது 15)மூன்று ஆண்டுகள் தன கனவோடு வசிதததாக ஜசோதா பென் அவர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார். மூன்று ஆண்டுகளில் மூன்று மாதங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அதிகம் என்றும் அந்த பெட்டியில் சொல்லி இருக்கிறார்.

  அம்பேத்காரின் கடும் முயற்சியினால் நேருவின் ஆதரவினால் காங்கிரெஸ் உள்  இருந்த ,வெளியில் இருந்த ஹிந்டுத்வவாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசியல் சட்டத்தில் ஹிந்து மத திருமண  சட்டங்களில் ஓரளவிற்கு பெண்களுக்கு சாதகமான (ஆனால் மதத்திற்கு எதிரான )சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இதை இன்றும் மற்ற மதத்தில் கை வைக்க முடிந்ததா என்று குத்திக்காட்டி ஹிந்டுத்வவாதிகள் வாதிடுவது அன்றாட நிகழ்வு.

  இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பொது சிவில் சட்டம் என்று குதிக்கும் கூட்டம் ஷா பானு அவர்களை விட பல மடங்கு கொடுமைகளை அனுபவித்த/அனுபவிக்கும் ஜசோதா பென் அவர்களுக்கு எந்த சட்டமும் துணை புரியாத நிலையை கண்டும் காணாமல் போனால் கூட பரவாயில்லை. மனைவி எனும் உரிமைக்காக காலம் கடந்தாவது போராடும் பெண்மணியின் மீது களங்கங்களை அள்ளி வீசுவது ஞாயமா என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

Sunday, 5 October 2014

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆதரவாளர்கள் சதியால் சிறை வைக்கப்பட்டார் முன்னாள் முதலவர் என்று கிளிபிள்ளை போல தமிழ்நாடு முழுவதும் மேடை போட்டு கத்தி கொண்டு இருக்கிறார்கள்
செல்வி மாயாவதி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறவில்லை,முலாயம் சிங்க் தண்டனை பெறவில்லை என்று
முலாயம் சிங் தப்பிசுட்டாக
மாயாவதி தப்பிசுட்டாக ,லாலு மாட்டிகிட்டாக ஆனா 25 லட்சம் தான் பைன் எவ்வளவு பெரிய அநீதி என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
முலாயம் சிங் செல்வி மாயாவதி மட்டுமா தப்பித்தார்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே டாசன் வழக்குகளில் இருந்து தப்பித்தார்கள்.அந்த வழக்குகளில் இருந்து தண்டனையில் தப்பித்தது எல்லாம் இவர்கள் மற்ற முதல்வர்கள் மீது குற்றம் சாட்டுவது போல மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசாமல்,அவர்கள் கேட்பதை எல்லாம் வாரி வழங்கியதால் தான் தப்பித்தார் என்று எடுத்து கொள்ளலாமா
அ தி மு க ஆதரவாளர்களே அவர்களின் தலைவி மற்ற அனைத்து வழக்குகளிலும் மத்திய அரசு சொன்னபடி ஆடியதால் விட்டு விட்டார்கள் ,இன்று அவர்கள் சொன்னபடி ஆடாததால் விட்டு விடவில்லை என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது விந்தையான ஒன்று
லாலு வழக்கில் அவரோடு பல மந்திரிகள்,வேறு கட்சிகளை சார்ந்த முன்னால் முதல்வர்களும் அடக்கம்.பைன் குறைவு என்று பொங்கி ஏழும் ரத்தத்தின் ரத்தங்கள் அங்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை என்பதை வசதியாக மறப்பது ஏனோ.எங்கும் யாரும் அநீதி என்று போராடவில்லை.
இதே போல தீர்ப்பு வேறு கட்சிகளின் தலைவர்களின் மீது வந்திருந்து இங்கு யாராவது ஒருவர் அதை அநீதி என்று பேசி இருந்தால் இன்று துடிக்கும் நடுநிலையாளர்களும் ,ரத்தத்தின் ரத்தங்களும் என்ன பேசி இருப்பார்கள் என்பதை நினைத்து பார்த்தால் அவர்களின் நடுநிலை ,நியாய அரசீற்றங்களின் கோவம் கண்ணகியின் கோவத்தை விஞ்சி இருக்கும்

பரமார்த்த குருவும் சீடர்களும்

     மோடி அவர்கள் சுத்தமான இந்தியா என்று இந்தியாவை தூய்மையான பகுதியாக மாற்ற துடைப்பத்தை கையில் எடுத்து விட்டார்.அவர் சொல்கேட்டு கோடிகணக்கான மக்களும் சுத்தமான இந்தியாவுக்காக உழைப்போம் என்று உறுதி கொண்டுள்ளனர் என்று மோடி பக்தர்களும்,?நடுநிலைகளும் போடும் கொட்டம் தாங்கவில்லை.
எதை தூய்மை செய்ய போகிறோம்,எது குப்பை,எது சுற்றுசூழலை மிகவும் அழிக்கிறது என்று எந்தவித தெளிவும் அறிவும் இல்லாமல் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ஒருவரை ,அவரின் கட்டளைகளை கண்டு புளகாங்கிதம் அடையும் கூட்டம் அதிகமாக இருப்பது வேதனை தான்


       செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி பெண் சிசுகொலைகளை பற்றி உருக்கமாக பேசினார்.ஆனால் 12 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்த குஜராத் மாநிலம் இந்தியாவில் பெண் சிசுகொலையில் முதலிடத்துக்கான போட்டியில் இருக்கும் மாநிலம்.2001-2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெண் சதவீதம் குறைந்த மூன்று மாநிலங்களில் ஒன்று குஜராத்.2001 கணக்கெடுப்பில் 0-6 வயதுக்குலான குழந்தைகளின் சதவீதம்1000-883.மோடியின் பத்து ஆண்டு ஆட்சிக்கு பின் அது அற்புதமாக அதிவேகமாக அதிகரித்து 886 ஆனது.
தூய்மையிலும் மோடியின் சாதனை இதே லட்சணம் தான்.ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து அவர் நடத்தி காட்டிய சாதனை இது தான்
The Central Pollution Control Board (CPCB) has declared Gujarat as the most polluted State in the country.
The conclusion has been based on the increasing levels of pollution and toxic wastes.
There are seven states in the country, which account for 80% of the total hazardous wastes and among these Gujarat tops the list followed by Maharashtra and Andhra Pradesh.
சுற்றுசூழலை அழிக்கும் தனியார்/பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருக்கும் கட்டுபாடுகளை எடுக்க வேண்டும்,அவை பல்கிபெருக அனைத்து உதவிகளையும் செய்யவே நான் பிரதமராக தேர்ந்தேடுக்கபட்டுள்ளேன் என்று சூளுரைக்கும் பிரதமர் சுற்றுசூழல் தூய்மை,மக்கள் மனம் மாற வேண்டும் பற்றி பேசுவது ,துடைப்பத்தோடு புகைப்படத்தை வெளியிடுவது அறியாமையினாலா அல்லது மக்கள் முட்டாள்கள் வெறும் வாய் ஜாலத்தால் அவர்களை பல்லாண்டு காலம் ஏமாற்றலாம் என்ற தன்னம்பிக்கையினாலா

        ஒரு மாதத்தில் பல ஆயிரம் டன் குப்பைகள் அதுவும் மக்காத குப்பைகள் சேர காரணமான குடிநீர் பாட்டில்கள்,சிப்ஸ் பாக்கெட்டுகள்,பெப்சி பாட்டில்கள்,உணவு பொருட்கள்,அழகு பொருட்களின் பேகிங்குளை மக்கும் பொருள் கொண்டு தான் பேக் செய்ய வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கும்/மக்காத /கேடு விளைவிக்கும் குப்பைகளை நேரடியாகவோ,திருட்டுத்தனமாகவோ இறக்குமதி செய்வதை தடுக்கும் அதிகாரம் கொண்ட /உத்தரவிடும் நிலையில் உள்ள ஒருவர் குப்பையை விற்பவர்களுக்கு எதிராக மூச்சு விட கூட முடியாத ஒருவர் மக்களை குற்றவாளிகள் ஆக்குவதும் அதற்கு அவர்களே கை தட்டுவதும் பரமார்த்த குருவையும் அவரின் சீடரகளையுமே வெட்கப்பட வைக்கும்

Thursday, 7 August 2014

சில கோவில்களில் மேலாடை மறுக்கபடுவதும்/காலாடை தடையும்   கூட தண்டனைக்குரிய குற்றமாக வேண்டும்



மறுபடியும் மறுபடியும் பணிக்கு உள்ள சீருடையோடு ,தனியார் கேளிக்கை விடுதிகளில் வேட்டி அணிந்ததால் மறுப்பு தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.

       குறிப்பிட்ட தொழில் செய்பவர்களுக்கு இருக்கும் உடை கட்டுப்பாடுகளுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கு வருபவர்களுக்கு இருக்கும் உடை கட்டுப்பாடுகளுக்கும் வித்தியாசம் உண்டு

      காவலர் என்றால் குறிப்பிட்ட உடை,செவிலியர் என்றால் குறிப்பிட்ட உடை,நீதிபதி என்றால் குறிப்பிட்ட உடை என்பதில் தவறு எங்கே வருகிறது.குறிப்பிட்ட உடைகளை தவிர மற்ற உடைகளை நீதிபதிகள் அணியலாம்,சில உடைகள் நீதிமன்றத்திற்கு தகுதியானவை அல்ல என்று இருந்தால் அது தவறு தானே.குறிப்பிட்ட வேலைக்கு  குறிப்பிட்ட சீருடை  மட்டும் தான் அணிய  வேண்டும் என்பதற்கும் குறிப்பிட்ட இடங்களில் நுழைய சில உடைகள் அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா

         குறிப்பிட்ட ஆடை  சில இடங்களில்  நுழைய தகுதியான ஆடை  கிடையாது என்பதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் /தவறாக எண்ணாமல்  இருக்க வேண்டும் .,அதில் தவறு இல்லை என்று வாதிடுவோர்  மகாத்மா காந்தியிடம் இந்த ரயில் பெட்டி உங்களுக்கு ஆனது கிடையாது என்று தென்னாப்ரிக்காவில் வெள்ளையர் சொன்னதும் தவறு இல்லை என்று வாதிடுவார்களா

 குறிப்பிட்ட ஆடை அணிந்தவர்களுக்கு மட்டுமான  பிரைவேட் கிளப் போல குறிப்பிட்ட நிறம் கொண்டவர்களுக்கு மட்டுமான பிரைவேட் கோச்


      ரயில்வே பணியாளர் மட்டும்/ராணுவ வீரர்/மகளிர் மட்டும் இருக்கும் ரயில் பெட்டி எனபது தவறு கிடையாது.ஆனால் வெள்ளையர் மட்டும்,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நுழைய கூடிய கோவில் வாயில்,குறிப்பிட்ட உடை அணிந்தவர் மட்டும் வரக்கூடிய கிரிக்கெட் கிளப் எனபது தண்டனைக்குரிய குற்றம் தான்


.
கறுப்பர் வெள்ளையரோடு ஒன்றாக ரயிலில் பயணம் செய்ய கூடாது,ஒன்றாக வசிக்க கூடாது,ஒன்றாக படிக்க கூடாது என்பதை போன்ற வெளிப்பாடு தான் சூட் அணிந்தவர் வேட்டி அணிந்தவரோடு ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவோ,மது அருந்தவோ கூடாது என்ற வாதமும்

எந்த மரபுக்கும் பின் இருப்பது,அடிப்படையாக இருப்பது discrimination தான்.

கோவில்களில் சட்டை இல்லாமல் போக வேண்டும் என்பதற்கு அடிப்படை சாதியை தெரிந்து கொள்ள தான்.சாதியை பார்த்து தனி மரியாதை,உணவுக்கு கூப்பன் இன்றும் உண்டு.சட்டையை மட்டும் கழட்டி விட்டு பூணூலை (பிராமண,க்ஷத்ரிய,வைஷ்ய வர்ணத்திற்கு பூணூல் உண்டு,கோத்திரமும் உண்டு )அனுமதிப்பதன் பின்னணி வேறு என்ன
வேட்டி இங்கு அனுமதிக்கப்படும் அதே வேளையில் பான்ட் ,மேல்சட்டை மறுக்கப்படும் கோவில்களில் அவற்றிற்கு அனுமதியும் கிடைக்க வேண்டும்

இங்கு வேட்டிக்கு கேட்கபடுவது இட ஒதுக்கீடூ.தனியார் கிளப்போ ,கல்லூரியோ தமிழ்நாட்டில் வேட்டிக்கு இட ஒதுக்கீடு கேட்பதில் தவறு எங்கே வருகிறது.வேட்டி மட்டுமே அனுமதிக்கப்படும் சில கோவில்களில்  பேண்டுக்கும் இட ஒதுக்கீடு கேட்பது ஞாயம்.பலர் கூடும் இடத்தில குறிப்பிட்ட பாலினத்தவர்,மதத்தவர்,நிறத்தவர் உணவு உண்பவர்கள் ,உடை உடுத்துபவர்களுக்கு அனுமதி மறுப்பது அவர்களின் உடை,நிறம்,உணவு அங்கு அவர்கள் அமர தகுதியானவர்கள் அல்ல,அவர்களின் உடை,உணவு,நிறம் கீழ்த்தரமானது என்பதை தான் வலியுறுத்துகிறது.