Thursday, 10 October 2013

சதவீத கணக்குகளும் சங்க பரிவாரமும்

 பள்ளியில் பயின்ற காலத்தில்  என் வீட்டின் அருகில் ஹிந்து முன்னணி ,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆர் எஸ் எஸ் பொது கூட்டங்கள் அடிக்கடி நடக்கும்.பள்ளி காலத்தில் நான் வி எச் பி மணியனிடம் மகாபாரதம் பற்றி நடந்த போட்டியில் பரிசு கூட பெற்றிருக்கிறேன்

   விஜயகாந்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே சங்க பேச்சாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள்.
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியாவில்
 இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்

  இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்

எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூடங்களில் பல லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
 சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன
 பெண்கள் எளிதில் மதம் மாறி விடுவார்கள்,லவ் ஜெஹாதில் விழுந்து விடுவார்கள் என்பதால் பலர் அவர்களை கருவிலேயே கொன்று விடுகின்றார்கள் என்றும் கூட ஹிந்டுத்வர்கள் வாதிடலாம்
மற்ற மதங்களோடு ஒப்பிடும் போது/மதமாற்றிகளின்,அவர்களின் கைக்கூலிகளின் தாக்கம் அதிகமாகவும் ஹிந்டுத்வத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடும் போது சங்கம் வலுவாக ஆட்சியை பிடிக்கும் நிலையில்,பல்லாண்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் லட்சகணக்கில் பெண் குழந்தைகள் குறைவது ஏன் என்பதை பற்றி சங்கம் என்று ஆராய்ச்சி செய்யும்.

http://www.youngmuslimdigest.com/society/06/2008/census-of-india-reading-between-the-lines/

சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா
 

Wednesday, 9 October 2013

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா

 பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்

  நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள்
  குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று என்னும் அளவில் பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் அதன் அடிப்படையில் அரசியலில் உருவாகும் முழக்கங்களும்
  பல லட்சம் பெண் சிசுக்களை கருவிலேயே கொலை செய்வதில் முன்னணி வகிக்கும் மாநிலம் தான் நல்லாட்சியின் எடுத்துகாட்டு என்று போர் முழக்கங்கள் உரக்க கொட்ட துவங்கி விட்டன
   பெண் சிசுகொலை பற்றிய கேள்விகளே எழும்பாதவண்ணம் நல்லாட்சி நல்லாட்சி என்ற கூக்குரல்கள் இந்தியா முழுவதும் எழுப்பபடுகின்றது.
    மக்கள் ஆட்சியோ,மன்னர் ஆட்சியோ,சர்வாதிகாரமோ,எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆட்சியின் அடிப்படையான மக்கள் தொகை வளர்ச்சியில்  இயற்கையாக அமையும் பாலியல் சமநிலையை மாற்றும் செயற்கையாக பாலியல் சமமின்மையை உருவாக்கும்  பாலியல்ரீதியான சிசுகொலைகளை தடுப்பதில் இந்தியாவில் கடைசி இடங்களில் உள்ள ஆட்சி நல்லாட்சி என்று புகழப்படுவதில் இருந்தே சங்க பரிவாரங்கள் பெண்களுக்கு தரும் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.
 Child Population and Decadal Growth by Residence – Persons
censusindia.gov.in/2011-prov-results/.../Gujrat/7-child29-45.pdf - Cached - Similar

 
மிஸ்டர் சந்திரமௌலி சென்சுஸ் குழு தலைவர் என்ன சொல்றார்னா http://www.actionaid.org/...

Only three major States, Gujarat, Bihar and Jammu & Kashmir have shown a decline in the Sex Ratio in Census 2011


 2001 ஒ 2011 ஒ ஆண் பெண் சதவீதத்தில் சில லட்சம் பெண் குழந்தைகள் குறைவதில் என்ன மாற்றமும் இல்லையே
மோசமான ஆட்சிகள் என்று தூற்றப்படும் மாநிலங்களில் கூட இவ்வளவு பெண் குழந்தைகள் குறைவது இல்லையே.அதுவும் மோடிக்கு மிகவும் ஆதரவு இருக்கும் குஜராத் நகர்ப்புறம் கிராமங்களை விட பெண் சிசுக்களை கொல்வதில் இந்தியாவில் முதலிடத்திற்கு மிகவும் அருகில் தான்
 
http://censusindia.gov.in/.../profiles/en/IND024_Gujarat.pdf


 

கட்டாய வோட்டு -மக்கள் ஆட்சி அல்ல சர்வாதிகாரம்

            


 உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர்  இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர்


       குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி ஒன்றிய தலைவர் அதனால் பதவி விலக வேண்டிய செய்தியும் மக்கள் ஆட்சியை வெறுத்து சர்வாதிகாரதிர்க்கான பாதையை விரும்புவர்களை தெளிவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன
     http://indiatoday.intoday.in/story/bjp-councillor-gujarat-forced-to-quit-for-having-third-child/1/313716.html

The 45-year-old businessman, who had defeated former mayor Ashok Dangar in the 2010 municipal polls, quit on Monday, four months after his wife gave birth to a boy. Rishi was born after two daughters -- Charmi (11) and Dhruvi (7).

Dhava reportedly was keen to have a son and he tried to flirt with the law, interpreting it to suit his wish.
பாராளுமன்ற தேர்தல்,சட்டசபை தேர்தல்,மாநகராட்சி தேர்தல்,இடை தேர்தல்,பெரும்பான்மை இல்லாததால் மறுபடியும் பொது தேர்தல் என்று தேர்தல்களுக்கு குறைவு கிடையாது.இதில் எதை கட்டாயம் ஆக்குவது.வோட்டு போடாததால் எத்தனை பேருக்கு தண்டனை வழங்குவது
வெற்றி பெற்றவர் எந்த காரணமும் கூறாமல் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கிறதா இல்லையா.பல ஆயிரம்/லட்சம் வோட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற ஒருவருக்கு இருக்கும் உரிமை சாதாரண வாக்காளருக்கு கிடையாதா
பிடிக்கவில்லை,காதல் தோல்வி,வயிற்று வலி அல்லது காரணமே இல்லாமல் வெற்றி பெற்றவர் ராஜினாமா செய்யும் உரிமை இருக்கும் போது வோட்டு போடுபவருக்கு குறிப்பிட்ட காரணத்தால் அல்லது காரணமில்லாமலோ வோட்டு போட மாட்டேன் என்ற நிலையை எடுக்க உரிமை கிடையாது என்று எப்படி இருக்க முடியும்
   நான் முற்றும் துறந்த முனிவன்,அனைத்து இச்சைகளையும் தாண்டியவன் என்று கூற/வாழ ஒருவருக்கு உரிமை உண்டா இல்லையா.
அதே போல நான் அரசியலை துறந்த முனிவன்,ஒருமனதாக தேர்வு ஆகாத போட்டி நடக்கும் தேர்தல் அரசியலை வெறுக்கும் ஒருவன் என்றால் அதில் தவறு காண முடியுமா

போட்டி இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் போட்டியில் இருந்து அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவது சட்டப்படி சரியா இல்லையா
அப்படி ஒரு நிலை இருக்கும் தொகுதிகளில்/பஞ்சாயத்துகளில் வோட்டு போட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் எப்படி வோட்டு போடுவார்கள்.ஒருவர் நின்றாலும் அந்த தொகுதியில் அவருக்கும் NOTA பொத்தானிர்க்கும் போட்டி இருக்குமா

  ஒரே மனிதர் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் நின்று வெற்றி பெறுகிறார்.ஒன்றை அவர் கட்டாயமாக ராஜினாமா செய்தாக வேண்டும்.
அதற்கு உடனே ஓரிரு மாதங்களுக்குள் இடைதேர்தல் வரும்.

   சட்டசபை உறுப்பினர் மேல்சபை உறுப்பினர் ஆக சட்டம் வழி வகுக்கிறது.மேற்கு வங்கத்தில் ஒரு எம் எல் ஏ அரசு வேலை கிடைத்து விட்டதால் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது.
தனி கட்சி துவங்க முடிவு செய்து பதவியை ராஜினாமா செய்கிறார்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
தலைவரின் குறிப்பிட்ட நடவடிக்கை பிடிக்காமல்,அல்லது மந்திரி பதவி தரவில்லை என்று ராஜினாமா செய்கிறார். அதையும் சட்டம் அனுமதிக்கிறது.

 வெற்றி பெற்றவருக்கு ராஜினாமா செய்யும் உரிமை மட்டுமல்லாமல்,அரசியல் அமைப்பின் கீழ் குற்றங்கள் என்று வரையறுக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றால் பதவி நீக்கம் செய்வதையும் சட்டம் அனுமதிக்கிறது.
இது மட்டும் அல்லாமல் சில சர்வாதிகாரிகள்,சர்வாதிகார இயக்கங்கள்,பிறக்கும் குழந்தைகளை வைத்தும் வெற்றி பெற்றவர்களை பதவி நீக்கம் செய்யும் சட்டங்களை இயற்றி இருக்கிறார்கள்.
   

       பிடிக்காத தீர்மானங்கள் வரும் போது வோட்டு போடாமல் வெளிநடப்பு செய்யலாம்.அதையும் சட்டம் அனுமதிக்கிறது
பல ஆயிரம் மக்களின் வோட்டுக்களை பெற்று வெற்றி பெற்று ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்தவருக்கு ஆயிரம் உரிமைகள் இருக்கிறது.அவர் விருப்பபடி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
வாக்காளனுக்கு இருக்கும் ஒரே உரிமை யாருக்கு வோட்டு போடுவது,அல்லது வோட்டு போட மாட்டேன் என்று முடிவு எடுப்பது.அந்த உரிமையை பிடுங்க நினைப்பது சரியா
வோட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையம் தேடி சென்று ஏன் வோட்டு போடவில்லை என்று கேட்டு அதை கணக்கில் எடுத்து கொள்ளட்டும்.மாறாக தனி மனிதன் கட்டாயமாக வாக்கு சாவடிக்கு சென்று ஏதாவது ஒரு பொத்தானை அழுத்தி தான் தீர வேண்டும் எனபது சர்வாதிகாரம் மக்கள் ஆட்சி அல்ல

 கட்டாய வாக்கு பதிவு என்பதை கல்லூரி தேர்தல்கள்,அரசு அலுவலக ஊழியர் சங்கங்களில் கூட நடைமுறைபடுத்த முடியாது.
இந்த அழகில் பல கோடி மக்களை கட்டாயபடுத்த முடியும் என்ற நம்பிக்கை/வெறி  சிலருக்கு,சில இயக்கங்களுக்கு  இருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று அல்ல   நாம் மிகவும் பயங்கொள்ள வேண்டிய நிகழ்வு 
ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உணவு உட்கொள்வேன்,மருந்து எடுத்து கொள்ள மாட்டேன்,பால் குடிக்க மாட்டேன், .திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.மேலாடை அணிய மாட்டேன் எனபது போல வோட்டு போட மாட்டேன் என்பதும் தனி மனிதரின் அடிப்படை உரிமை

  இந்த உரிமையை பறிக்க நினைப்பது,பல ஆயிரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மூன்றாவது குழந்தை பெற்று கொண்டார் என்று பதவி நீக்கம் செய்வது போன்றவை சர்வாதிகாரத்தை நோக்கி நம்மை அழைத்து செல்ல நடக்கும் முயற்சிகள்.இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் வருங்காலத்தில் மக்கள் ஆட்சியை மீட்க   நாம் கொடுக்க வேண்டிய விலை மிகவும் அதிகமாக இருக்கும் 
 
 

Thursday, 3 October 2013

மோதியை ஏன் முஸ்லிம்கள் புகழ வேண்டும்

    நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவரை புகழ்வதில் தவறுண்டோ

      சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ ஒருவருக்கு கூட அவர் ஆட்சியில் MLA சீட்,மந்திரி பதவி தராமல்(முஸ்லிம்கள் குஜராத்தில் ஒன்பது சதவீதம்)அனைவரையும் ஒன்றாக நடத்துவதில்,நடத்தியதில் இருந்தே அவர் மேன்மையை அறிந்து வாழ்த்துவது மிக சரி.

        எடியுரப்ப ஒரு முஸ்லிம் கூட பா ஜ கா நிறுத்தி வைக்கவில்லை என்றாலும் ஒருவரை மந்திரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆக்கவும் செய்தாரே அவரை போன்ற போலி இந்திதுவவியாதியாக இல்லாமல் உண்மையான இந்திதுவவியாதியாக இருக்கும் மோடியின் புகழை ஸஃபர் ஸரேஷ்வாலா பாடுவது பெருமையாக உள்ளது.

மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா

2007 தேர்தலில் குசெர் பி-சொரபுட்டின் போலி என்சௌண்டேர் (குசர் பி கணவனோடு சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டவர்)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொராபுட்தீனை என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொது கூட்டத்திலும் கேட்டு கொலை கொலை என்ற கூச்சல்களுக்கு அதை தான் செய்தோம் என்று பெருமிதமாக பேசியவர் அல்லவா மோடி .

சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அப்பாவி பெண்ணாக இருந்தாலும் கணவன் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக இருந்தால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அந்த வன்செயல்களை புகழ்ந்து வோட்டு வாங்கி வெற்றி பெற முடியும் என்று காட்டியவரை இஸ்லாமியர் மட்டுமல்ல அகில உலகமும் அல்லவா போற்றும்,போற்ற வேண்டும்

       டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நாடே பொங்கிய(நிர்பயா வழக்கு ) பெண்ணின் ஆண் நண்பர்  சந்தேகத்துக்குரிய தீவிரவாதியாகவோ ,அல்லது முன்னாள் குற்றவாளியாகவோ அல்லது இஸ்லாமிய பெயர் கொண்டவாரகவோ இல்லாமல் போனார்.
அப்படி இருந்து இருந்தால் குசெர் பி பாலியல் வன்முறை/கொலை வழக்கு பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் மாநிலம் முழுவதும் பொது கூட்டம் போட்டு நியாயபடுத்திய மோடி போல நிர்பயாவிர்க்கு ஏற்பட்ட கொடுரம் தேவையான ஒன்று,தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்று, தீவிரவாதிக்கு,அவர் தோழிக்கு கிடைத்த சரியான தண்டனை என்று மோடி ஆதரவாளர்கள் குதித்திருப்பார்கள்.

 அப்படி இருந்திருந்தால் வன்செயலில் ஈடுபட்டவர்கள் ,அதற்க்கு உத்தரவிட்டவர்கள் மந்திரிகளாக ,மற்ற மாநில பொறுப்பாளர்களாக  மோடியின் கருணையால் பொறுப்பேற்று கொண்டு இருப்பார்கள்.அப்படிப்பட்ட கருநாமூர்த்தியை மக்கள் புகழ்வதில்,பார்த்து பூரிப்படைவதில் ஆச்சரியம் எது
 
     ஒரு அப்பாவி பெண் கடத்தப்பட்டு,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையை கிண்டல் செய்தவர்.தகுந்த தண்டனை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டவர் மேல் பாராட்டுக்கள் பல தரப்பிலிருந்தும் வந்து குவிவதில் ஆச்சரியம் ஏது

Friday, 27 September 2013

பிரதமர் பதவி என்ன கல்கி அவதாரமா



   மது கோடா,தேவ கௌடா போல யார் வேண்டுமானாலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம் பி க்கள் ஆதரவு இருந்தால்  பிரதமர் ஆகலாம்.
    ஒரு தனி மனிதர் குறிப்பிட்ட பதவியில் அதுவும் நேரடி தேர்தல் இல்லாத முறையில் வெற்றி பெற்ற எம் பி க்கள்/கட்சிகளின் ஆதரவில் பிரதமர் ஆனால் பல வியத்தக்க மாற்றங்களை புரிவார் என்ற சாத்தியங்கள் இல்லாத நம்பிக்கை எப்படி உருவானது /ஏன் உருவாக்கபடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை
   அமெரிக்க ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்க வாஜ்பாய் தலைமையிலான அரசு முடிவு செய்து பின் பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கியது
   நானூறு எம் பி க்கள் இருந்தாலும்,மக்களிடம் செய்திகளை இன்றுபோல உடனே கொண்டு செல்லும் வசதிகள் இல்லாத நிலை நிலவிய காலத்தில்/ நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசின் முடிவுகளுக்கு ஒத்து ஊத்தி கொண்டு இருந்த காலங்களில்/,கட்சியில் ஒரு கேள்வி எதிராக கேட்க்கும் கேட்க்கும் நிலையில் கூட யாரும் இல்லாத நிலையில் இருந்த ராஜீவ் கூட மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட முடியவில்லை.மக்களுக்கு நேரடியாக பலன் தர கூடிய அரசுகள் மாநில அரசுகள் தான்
    குறிப்பிட்ட தனி மனிதர் பிரதமர் ஆனால் காவேரி பிரட்சினையில் ஞாயம் கிடைக்கும் ,அனைத்து மாநிலங்களும் சமமாக நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எப்படி  வருகிறது

    காவேரிக்கு சென்று விட்டோம்,ஹோகேநேக்கள் குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராடிய எடியுரப்பா அன்றைய நிலையில் பா ஜ க வின் முதலவர் வேட்பாளர்.பிரதமர் தன்கட்சியின் முதலவர்களை ,மாநில தலைவர்களை மிரட்டி தமிழகத்திற்கு ஞாயம் கிடைக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கை எந்த அடிப்படையில் வருகிறது.
   உச்ச நீதிமன்றத்தின்  வாக்கு பதிவு செய்யும் போது இருக்க வேண்டிய none of the above தீர்ப்பு ஞானி அவர்களின் கட்டுரையில் உள்ள பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்தப்படுவது தவறு என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு என்றும் கூறலாம்.

நம் தேர்தல் ம
ுறை நேரிடை தேர்தல் முறை கிடையாது.நாம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்.எம் பி க்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை அது.
மக்கள் போடும் none of the above குறிப்பிட்ட தொகுதியை சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்தா ,இல்லை பிரதமராக முன்னிருதப்படுபவரை/படுபவர்களை எதிர்த்தா என்பதை புரிந்து கொண்டால்,பிரதமர் வேட்பாளர் என்று முன் நிறுத்தப்படுவது சட்டப்படி தவறு எனபது புரியும்

மோடி எனக்கு வேண்டாம் என்று none of the above என்ற பொத்தானிற்கு விழும் வோட்டுக்களை எடுத்து கொள்ள முடியுமா.அப்படி எடுத்து கொள்வது சரி என்றால் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன் நிறுத்துவதை நம் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது என்று கூறலாம்.எதிராகவோ ,ஆதரவாகவோ விழும் வோட்டுக்கள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


 இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள அரசு நிறுவனங்களில் தொழிற்சங்க தேர்தல்களில் அந்தந்த பகுதிகளுக்கான உறுப்பினர்களை வாக்குசீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு.அப்படி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்வார்கள்.இதே தான் நம் நாட்டின் சட்ட அமைப்பின் கீழ் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையும்
பிரதமர் மீது திடீரென்று அவர் கட்சிக்காரர்களே கூட அதிருப்தி கொண்டு அவரை நீக்கி விட்டு இன்னொருவரை பிரதமராக பதவியில் அமர்த்தலாம்.மக்களிடம் என்னை பிரதமர் என்று சொல்லி வோட்டு கேட்டீர்கள்.அதனால் நீங்கள் என்னை நீக்க முடியாது,கட்சியை உடைக்க முடியாது,வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க முடியாது என்று யாரும் கூற முடியாது.

தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் வாக்காளனின் உரிமை தன் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக தீர்ப்பளித்துள்ளது.

நம்முடைய எம் பி க்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு 6 மாதத்திற்கு ஒருவரை,அல்லது பத்து நாட்களுக்கு ஒருவரை பிரதமர் ஆக்குவதையும் சட்டம் அனுமதிக்கிறது.
நாம் வோட்டு போட்டு அதனால் தேர்ந்தேடுக்கபட்ட எம் பி பதவியை ராஜினாமா செய்து விட்டால்,அல்லது சமீபத்திய தீர்புகளின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ,மரணமடைந்தால் மறு தேர்தல் தான் ஒரே வழி.அது தான் நம் அரசியல் அமைப்பு.
ஆனால் பிரதமர் ராஜினாமா செய்தால் மறு தேர்தலா,அல்லது மற்றொருவரை எம் பி க்கள் பிரதமர் ஆக்குவார்களா

 
எம் பி பதவி ஆளுமை வாய்ந்தது.அவர்களின் உரிமை பிரதமரை தேர்ந்தெடுப்பது.மக்களுக்கு உள்ள உரிமை தங்கள் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் என்பதை வலியுறுத்தும் இந்த தீர்ப்பு பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது என்றும் எடுத்து கொள்ளலாம்.

Thursday, 19 September 2013

மக்களின் வோட்டிற்கு பரிவாரங்கள் தரும் மதிப்பு


  பா ஜ க பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சிக்கு  வந்த மாநிலங்களின் அழகை பார்ப்போமா
 உத்தர்ப்ரதேசம்- இந்தியாவிலயே அதிக மக்கள் தொகையை,எம் பி,எம் எல் ஏ  இடங்களை கொண்ட மாநிலம்.
 அங்கு ஆட்சி செய்த ஐந்து ,6 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள்.மக்களின் முன் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட கல்யான் சிங்,ஹிந்துத்வாவின் மூன்றாவது தூண் நிலையில் இருந்தவர் தூக்கப்பட்டு குப்தா மற்றும் ராஜ்நாத்  சிங் முதல்வர் ஆனார்கள்.
  ஹிந்துத்வாவின் பரிசோதனை கூடமான குஜராத்தில் அவர்களின் பெரும்சாதனையான 2002 குஜராத் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன் musical  chair ஆடிய முதல்வர்கள் கேசுபாய்,சுரேஷ் மேஹ்தா ,வகேலா (ஆர் எஸ் எஸ் இல் பல ஆண்டு காலம் பயிற்சி பெற்றாலும் மோடியின் குழிபறிக்கும் வேலைகள் பொறுக்காமல் கட்சியையே உடைத்து கட்சி எம் எல் ஏக்களின் துணை கொண்டு முதல்வர் ஆனவர்).கலவரம் மோடியின் பெருமையை பரிவாரங்களுக்கு உணர்த்தியதால் அவரை தவிர மற்ற அனைவரையும் பரிவாரம் கை கழுவி  விட்டது.ஆனால் மோடி முதல்வர் ஆனா கதையை விட  மஞ்சள் கமெண்டுக்கு பொருத்தமான எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது
 டெல்லியில் ஒரு முறை தான் ஆட்சியில் இருந்தார்கள்.அங்கு மக்கள் முன் முதல்வர் வேட்பாளராக முன் நிருதப்படுபவர் குரானா.ஆனால் musical ஷேர் பா ஜ கா வின் /பரிவாரத்தின் முக்கிய விளையாட்டு ஆயிற்றே -5 வருடத்தில் மூன்று முதல்வ்ர்கள்-குரானா ,சாஹீப் சிங் வர்மா மற்றும் பெரும்பான்மை பலம் பெற்ற எதிர்க்கட்சி தலைவியாக பதவி வகித்தவர் பிரதமர் ஆனால் மொட்டை அடித்து கொண்டு விதவைகள் போல பதியசாப்பாடு சாப்பிட்டு கொண்டு வாழ்வேன் என்று சூளுரைத்த சுஷ்மா.
 மத்ய பிரதேசம்-பெரும் வெற்றி பெற முக்கிய காரணம் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட உமா பாரதி,ஆனால் சில மாதங்களுக்குள் musical chair ஆரம்பித்து உமா போய gaur  வந்தார் டும் டும் டும் .கௌர் போய சௌவான் வந்தார் டும் டும் டும் தான்.
 உமா பாரதி கட்சியை விட்டு பிரிந்து தனி கட்சி துவங்கி வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயத்தால் சௌவான் musical  chair ஆட்டத்தில் இருந்து இதுவரை தப்பித்து விட்டார்.ஆனால் அவர் மோடியை எதிர்த்த பாண்டாவின் கதியை பார்த்து விட்டு ரொம்ப உஷாராக இருப்பது அவருக்கு உதவுகிறது.
 உத்தர்கந்த் மாநிலம்-அங்கு பிரிந்த பிறகு கட்சியினரால்,மக்களால் முதலவர் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கொஷியாரி ஆகவில்லை.நித்யானந்த் சுவாமி முதலவர் ஆனார். ஆனால் தேர்தலில் அவரை வைத்து வெற்றி பெற முடியாது என்பதால் 6 மாதத்திற்கு முதலவர் ஆக்கப்பட்டார்.
 அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி  பெற்றது..அதற்க்கு அடுத்த தேர்தலில் யாரையும் முன் நிறுத்தவில்லை.அங்குள்ள சாதி போட்டி தான் அதற்க்கு காரணம்.பா ஜ க வெற்றி பெற்ற பிறகு ஜெனரல் கந்தூரி முதலவர் ஆனார். துவங்கியது MUSICAL CHAIR .கந்தூரி போய் போக்ரியால் வந்தார் டும் டும் டும் ,போக்ரியால் போய் மறுபடியும் கந்தூரி வந்தார் டும் டும் டும்
 எதுக்காக அவரை தூக்கினார்கள்,எதற்காக மறுபடியும் அவரை தேர்தலுக்கு முன் முதல்வர் ஆக்கினார்கள் எனபது மக்களுக்கு தெரியாத ஆனால் பரிவாரத்தை யக்கும் சக்திகளுக்கு தான் வெளிச்சம்.
ஜார்க்ஹாந்து மாநிலம்- மக்களிடம் காட்டிய முகம் பாபுலால் மாரண்டி.ஆனால் பரிவாரத்திற்கு கலவரம் எதுவும் நடத்தி சாதிக்காத முதலவர் என்றால் அரிக்க ஆரம்பித்து விடுமே
 அதனால் அவரை தூக்கி விட்டு கரிய முண்டா

ராஜஸ்தானில் வசுன்டரே ராஜே கட்சியை விட்டே சென்று விடுவேன் என்று மிரட்டும் நிலையும் பரிவாரங்களின் கைங்கரியத்தால் நடந்தது.அவரை விளக்கி விட்டு ஆர் எஸ் எஸ் இல் ஊறிய ஒருவரை தலைவர் ஆக்கியதும் நடந்தது
அவர்கள் கை வைக்காத  ஒரே மாநிலம் சத்தீஸ்கர் தான்.
ஆனால் சத்தீஸ்கரிலும் அவர்  முதல்வரான 2003 தேர்தலில்  மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் என்பதாலும்,காங்கிரஸில் அஜீத் ஜோகி முதலவர் ஆக இருந்த காரணத்தினாலும் யாரையும் முதல்வராக முன் நிறுத்தவில்லை  முதல்வர் ராமன் சிங் நாட்டு வைத்தியர் என்பதால் அவர் மீது கை வைக்கவில்லை போல.

மக்களின் வோட்டுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கும் கட்சி நம்ம பா ஜ க

நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி   பிரதமர் ஆகிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று   நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனால்  அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தான் மோடியும்.திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர் ஏதாவது அதை எதிர்த்து சொல்ல முடியுமா

 பரிவாரத்தின் தாதாக்களான நாக்பூர் தாத்தாக்களுக்கு இரண்டு நாள் கக்கா வரவில்லை என்றால் அதற்க்கான காரணத்தை  கண்டுபிடிக்க சோழி போட்டு பார்ப்பார்கள்.
 அதில் யாரவது மாநில முதலவர்,கட்சி தலைவரின் மச்சானின் சகலையின் பேரன் ஜின்னா என்ற பெயருடையவருக்கு facebook  இல் friend request அனுப்பி இருப்பது தெரிந்தால்,
  ஏதாவது மாநில முதல்வரின் மனைவியின் பெரியப்பா மகளின் வீட்டில் இயேசுவின் புகைப்படம் இருப்பது தெரிந்தால் உடனே அந்த முதல்வரை பதவி விலக வைத்து விடுவார்கள்.இது தான் அவர்கள் மக்கள் முன் தலைவராக காட்டும் முகத்திற்கு,மக்களின் வோட்டுக்களுக்கு தரும் மதிப்பு.

மோடீ எனக்கு ஒரு டௌட்டூ

 
          மோடி பக்தர்கள் மோடி பல சாதனைகள் புரிந்தார் என்று பல ஆண்டுகளாக கூவி வருகிறார்கள்.
கரகாட்டக்காரனில் செந்திலும் கோவை சரளாவும் ஆடுவதை ஒருவர் கௌண்ட மணி காதுபட ஒருவர் புகழ்வாரே அதே போல தான் இந்த மோடி பக்தர்கள் அவரை பற்றி புகழ்வதும்

       அவர் சூப்பர் man மாதிரி உத்தர்கண்ட் நிலசரிவு,மழைப்பெருக்கு நிகழ்வில் பல ஆயிரம் குஜராத்திகளை ஒரே நாளில் காப்பாற்றிய சாதனையை சிலர் எப்படி என்று கேட்டதும் துண்டை காணோம்,துணிய காணோம் என்று ஓடிய கூட்டம் மற்ற விஷயங்களில் கேட்டாலும் அப்படி தான் ஓடும்


      குஜராத் 2002 கலவரங்களை விட்டு விடுவோம்




     அண்ணே எனக்கு ஒரு டௌட்டு

மக்கள் ஆதரவு,கட்சி ஆதரவு   இருப்பவர் தான் பிரதமர் பதவிக்கு முன் நிறுத்தனும்னு நம்ம ஆளுங்களே விட்டு தூண்டி விட்டு பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க இவ்வளோ டகால்டி வேலை பண்ணீங்களே
   நீங்க முதல்வர் ஆனது எப்படின்னே
  நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி அண்ணே நீங்கள்  பிரதமர் ஆகிறீர்கள்  என்று வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று நீங்க  நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது  பிரதமர் ஆனா அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
 அது  போல முதல்வர் ஆனவர் தானே அண்ணே நீங்க
மக்கள் ஆட்சியை சிறிதும் மதிக்காத ஒரு கூட்டத்தின் முடிவால் நேரடியாக பதவியில் உட்காரவைக்கப்பட்டவர்  கட்சிக்காரகளின்,வெற்றி பெற்ற எம் எள் ஏக்களின்,மக்களின் நின் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டு வெற்றி பெற்று முதலவர் ஆன கேசுபாய் படேலுக்கு குழிபறித்து விட்டு முதல்வர் ஆனவர் ஆச்சே நீங்க
பல்கலைகழகத்தில் அடிப்படை தகுதி கூட இல்லாமல் நேரடியாக ஒரு துறையின் தலைவராக பல்கலைகழகத்தை தன இரும்பு பிடியில் வைத்திருந்த மனிதர்,மறைமுக குழுவின் தயவால் துறை தலைவரானவர் போல முதல்வர் ஆனவர் தானே நீங்க
  அதே போல உங்களை நீக்கி  விட்டு .சுரேஷ் சோனியை ஆக்கினால் நீங்கள் என்ன பண்ணுவீங்க அண்ணே



  
      ஆண் பெண் சதவீதத்தில் குஜராத்தில் குறைவாக இருந்த பெண்களின் எண்ணிக்கையை உங்களின்  12 ஆண்டு ஆட்சியில் மாற்றி விட்டீங்களா அண்ணே
   the state TN ruled by useless corrupt leaders performed very poorly and moved from 987 to 995

http://www.mapsofindia.com/census2011/female-sex-ratio.html


  ஆனா உங்க நல்லாட்சியில gujarat  which had a golden rule between 2001 and 2011 and a role model for others has performed outstandingly by reaching 918 from the 920 in 2001
  \
  எப்புடீன்னே இப்படி.உங்களால மட்டும் எப்படின்னே இவ்வளோ சாதனை புரிய முடியுது 


  மத்திய அரசு பணிகளில் நூத்துக்கு ஒன்று ,இரண்டு குஜராத்திகள் கூட இல்லாத நிலையில் இருந்து பத்து பேராவது சேரும் அளவிற்கு மாற்றிடிங்களா  அண்ணே 

  முன்னாள் ராணுவத்தினர் கூட்டத்தில் சும்மா பிச்சு உதறநீங்க.ராணுவத்தில் அதிகாரிகள் எண்ணிக்கையில் பல ஆயிரம் பற்றாக்குறை.அதை நீக்குவேன்.அதை களைய பாடுபடுவேன்.வலுவான தலைமை இருந்தால் அதை உடனே களைய முடியும் என்று.

  ஆனா 12 ஆண்டு ஆட்சியில இப்ப இருக்குற பற்றாக்குறை ஆளுங்கல்ல நூத்துல ஒருத்தர் கூட குஜராத்தை சேர்ந்தவங்களா இல்லையே அண்ணே.12 ஆண்டு ஆட்சி செய்ததுல என்னா கிழிச்சீங்க,இந்தியாவிலேயே பெரிய மாநிலங்களில் இருந்து மிக குறைவான ஆட்கள் ராணுவத்தில்,மத்திய அரசு பணிகளில் சேருவது குஜராத்தில் இருந்து தான் என்ற பெருமையை தக்க வெச்சுட்டு தானே இருக்கிறீர்கள் என்று கேட்டா என்ன சொல்லுவீங்க அண்ணே   



  இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவம் பார்த்து கொள்ள/படிக்க/வேலை செய்ய லட்சக்கணக்கில் ஓடி வரும் நிலைக்கு மாநிலத்தை மாற்றி விட்டீங்களா அண்ணே   (நம்ம சகோதரி ஆட்சி செய்கிற ஊழல் தமிழகத்திற்கு படிக்க,மருத்துவம் பார்க்க,வேலை பார்க்க வருபவர்களில் பத்தில் ஒரு பங்காவது எட்டி இருக்கீங்களா அண்ணே  )



  ஏன்னா செய்வேன் பார்.ஒலிம்பிசில் நூறு தங்கம்,நானூறு வெள்ளி வாங்கும் நிலைக்கு இந்தியா செல்ல வலிமையான தலைமை வேண்டும் என்று பேச்சுல அனல் பறக்குது
 ஆனா விளையாட்டு துறையில் குஜராத்திகள் உங்க  ஆட்சியில் ஓரளவிற்காவது முந்தைய நிலையை விட முன்னேறி இருக்கிறார்களா அண்ணே (தமாதூண்டு மாநிலம் மணிபூர்
தேசிய விளையாட்டு போட்டிகளில் 48 தங்கம்.நம்ம பெருமித பணக்கார சுயம்பு சுயமரியாதை கொண்ட குஜராத் மாநிலம் மொத்தமா ரெண்டு வெள்ளி )



 

மருத்துவர்,செவிலியர் ,பொறியாளர்,ஆசிரியர்கள் என யார் வேண்டுமானாலும் அதற்க்கு அடுத்த மாநிலங்களை நம்பி இருக்கும் நிலையில் இருந்து குஜராத் நம்ம 12 ஆண்டு பொற்கால வலிமையான ஆட்சியில் மாறி விட்டதா அண்ணே


பிரசவத்தின் போது தாய் இறப்பு ,ஒரு வயதுக்கு முன் குழந்தைகள் இறப்பு போன்றவற்றில் கேரளம்,தமிழகத்தின் அருகிலாவது  குஜராத் வந்து விட்டதா அண்ணே


  https://www.facebook.com/#!/photo.php?fbid=10151874077804828&set=a.497812629827.278402.722399827&type=1&theater&notif_t=comment_mention
 
ஊழல் தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிக்கிறார்கள் ,வேலை வாய்ப்பில் 1989 முதல் 30 சதவீதம் இருப்பதால் அதிக அளவில் இருக்கிறார்கள்,ஆண்களை விட பெண்கள் மருத்துவ மேற்படிப்பில் அதிக இடம் சேரும் நிலை என்று எல்லாம் பெருமை பீற்றி கொள்கிறார்கள்.நம்ம குஜராத்தில் பெண்கள் ஒரு இருவது சதவீத இடங்களையாவது பிடிக்கும் நிலை இருக்கிறதா அண்ணே 


   நம்ம ஆளுங்க பல வருஷமா அடிச்சு விட்ட பொய்யில ஒன்னு.உலக வங்கியில நாம் போட்ட பணம்.இந்த பொய்யை கூச்சமில்லாம பல வருஷமா சொல்றதுக்கு எப்படி அண்ணே பல ஆயிரம் பேரை தயார் செய்தீங்க 

 
சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த செய்தி SMS /ஈமெயில் /ப்ளாக் /அனைத்து விதமான மக்கள் தொடர்பு ஊடகங்கள் மூலம் மோடி ஆதரவாளர்களால் பல முறை பல லட்சம் பேருக்கு பரப்பட்டது
http://sudhanganin.blogspot.in/2011/03/blog-post_28.html
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது.
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது. இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்..
பத்து வருடத்திற்கு முன்பு குஜராத அரசு உலகவங்கியில் வாங்கிய கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.(ஆ.ராசா மதிப்பை விட கொஞ்சம் குறைவுதான் !)
இன்று..
கடனை திருப்பி செலுத்திவிட்டது. இப்போது அந்த அரசின் கையிருப்பது தொகை 1 லட்சம் கோடிகள்.
ஹி ஹி ஹி உண்மை நிலவரம் என்ன என்று பார்ப்போமா
http://www.indiatvnews.com/business/india/modi-s-gujarat-bears-the-third-highest-debt-burden-after-bengal–5216.html
Chief Minister Narendra Modi’s Gujarat government bears the third highest burden after West Bengal and Uttar Pradesh, says a media report.
While Gujarat’s actual debt was Rs 1,38,978 cr as on March 2012 and is projected to touch Rs 1.76 lakh crore in 2013-14, it is preceded by only two other states: West Bengal (Rs 1.92 lakh crore) and Uttar Pradesh (Rs 1.58 lakh crore), says the report


மது விலக்கு என்று குஜராத்தில் நீங்க அடிக்கிற கூத்தை இன்னும் எப்படி அண்ணே  இந்த உலகம் நம்புது.என்னமோ போங்க அண்ணே.உங்களுக்கு மச்சம்னா மச்சம்
http://www.indianexpress.com/news/gujarat-eases-liquor-norms-tourists-to-get-permit-on-arrival-at-airport/1122093/0

மது விலக்கு  மோசடி
பணம் இருப்பவன் மருத்துவ சான்றிதழ் வாங்கி பெர்மிட் வாங்கி குடிக்கலாம்
அண்டை மாநிலங்களின் அருகில் இருக்கும் ஊர்களில் வசிப்பவர்கள் அங்கு சென்று குடித்து விட்டு வரலாம்,ஊர் சுற்ற வருபவர்கள் குடிக்கலாம், அதற்காக விடுதிகளில் சாராயம் வைத்து இருக்கலாம்.
ஏழைகளுக்கு மட்டும் தான் குடிப்பது சிரமம் அவர்களுக்கு ஒரே வழி கள்ளசாராயம்.இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் கள்ள சாராயதினால் இறப்புகள்,கண்பார்வை போகுதல் அதிக அளவில் நடைபெற்ற மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று.
கள்ள சாராய சாவுகள் மிக அதிகம் என்பதால் நம்ம
 சங்க பரிவாரங்களின் வழக்கமான நாட்டாமை தீர்ப்பான மரண தண்டனை சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் கொண்டு வந்தீங்க .கொலை செய்றது நம்ம பரிவாரத்துக்கு சாப்பாடு மாதிரி.எவனையாவது வெட்டு,தூக்குல போடு என்று சொல்லலைனா நம்ம பரிவாரங்களுக்கு சோறு எறங்காதே


      கொள்கை ரீதியாக நாங்கள் மதுவை எங்கள் மண்ணில் ,எப்படி முட்டையை கூட ரயிலில் விடவில்லையோ அது போல அனுமதிக்க மாட்டோம் என்று சிலர் வாதிடுவதை பார்க்கும் பொது சிப்பு சிப்பா வருது.எப்படி மூளை சலவை செய்திருக்குது பாருங்க அண்ணே நம்ம பரிவாரம்

    .ஊர் சுற்ற வருபவனுக்கு சாராயம் குடிக்க/வாங்க பெர்மிட் வாங்க அரசாங்கம் குஜராத்திற்குள் வரும் போதே இரத்தின கம்பளம் விரித்து பெர்மிட் வழங்குகிறது.அதிக பணம் வசூலிக்கும் தங்கும் விடுதிகளில் சாராயம் தண்ணீராக ஓடலாம்.இந்த அழகில் மது விலக்கு எங்கள் உயிர்மூச்சு என்று நம்ம ஆளுங்க பெருமை பாடுறது,அதை பார்த்து பலரும் ஆஹா ஆஹா என்று புளகாங்கிதம் அடைவது என்னமோ போங்க அண்ணே
  
  உங்க சக்தியே சக்தி