Friday 22 November 2013

எது ஆண்ட சாதி



அதிக எண்ணிகையில் இருக்கும் சாதிகள் ஆண்ட இனம்/சாதி என்று கூறுவது வேடிக்கை. உலகில் எங்குமே அது சாத்தியம் கிடையாது.

 மனைவி,துணைவி,அந்தபுரத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கி கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு பிறந்தவர்கள் அனைவரையும் அரச பரம்பரையில் சேர்த்து கொண்டால் கூட உலகில் எங்கும் ஒரு சதவீதத்திற்கு அருகில் கூட வராது.

     ஆனால் இங்கு வன்னியர்கள்,முக்குலத்தோர்,தேவேந்திரர்,நாடார்,ரெட்டியார்,செட்டியார்  என்று எல்லா சாதிகளும் ஆண்ட இனம் என்று சொல்லி கொள்வது வாய் விட்டு சிரிக்க  வேண்டிய வேண்டிய நகைச்சுவை.

    பொய்யான நிரூபிக்கபடாத,சாத்தியமில்லாத கூற்றுக்களை பிடித்து தொங்கி கொண்டு ஆண்ட சாதி என்று மார்தட்டுவதால் விளையும் பயன்கள் ஏதாவது உண்டா ,சாதிவெறியை தூண்டி விட்டு பெரும்கேடுகளை விளைவிப்பதை தவிர

ராஜாக்கள் என்பதே ஒரு தனி ஜாதி

http://www.frontlineonnet.com/fl1812/18121270.htm
நேபாள ராஜா ஒரு பெண்ணை மணப்பதற்காக எதிர்ப்பு வந்ததால் தன் குடும்பத்தினரையே கூண்டோடு அழித்தாரே
அவர் காதலித்த பெண்ணும் ராஜ வம்சம் தான்.ஷிண்டேவாக இருந்து
சிந்தியாவாக மாறிய  வம்சத்தை சேர்ந்த அவர் முன்னோர் யாரோ நாட்டியமாடும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த திருமணதிற்கு அவர் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.
http://www.telegraph.co.uk/news/worldnews/asia/nepal/1311387/A-row-over-love-that-ended-in-regicide.html
சாதாரண குடும்பத்தில் பிறந்த ரஜப்புத்திரரை திருமணம் செய்த முதல் பெண் வாரிசின் வாரிசுக்கு பட்டம் கட்ட கூடாது என்று ராஜஸ்தான் ராஜாவுக்கு இந்த 21 ஓம் நூற்றாண்டில் வரும் எதிர்ப்பை பாருங்கள்
http://www.business-standard.com/india/news/games-ex-royals-play/435497/

முதல் முதலாக பூட்டான் ராஜா ஒரு சாதாரண பெண்ணை சென்ற ஆண்டு தான் மணந்தார்
http://today.msnbc.msn.com/id/44885097/ns/today-today_news/t/bhutans-dragon-king-marries-his-commoner-bride/
ப்ளூ blooded என்று ராஜாக்கள் ராஜாக்களோடு மட்டும் தான் சம்பந்தம் செய்வார்கள்.சிங்கள ராஜாக்களோ,வேற்று மதத்தை சார்ந்த ராஜாக்களோ அவர்களோடும்
 திருமண உறவு வைத்து கொள்வார்கள்.ஆனால் அதே மொழியை பேசினாலும்,அதே இனமாக,வலங்கை/இடங்கை சாதிகளாக இருந்தாலும் அரச குடும்பத்தை சாராத  சாதாரண மனிதர்களோடு திருமணம் கிடையாது.அவர்களோடு உறவு கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு அரச வம்சத்தில் இடமும் கிடையாது.  .

        சாதாரண குடும்பத்தில் பெண் எடுத்த வாரிசுகளை குறைவாக பார்ப்பார்கள்.அவர்களுக்கு பட்டம் கட்டுவது வெகு அபூர்வம்.அவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்ய மாட்டார்கள்.அலெக்சாண்டர் தளபதியாக வந்த செளுகுஸ் இங்குள்ள ராஜாகளோடு திருமண தொடர்பு ஏற்படுத்தி கொண்டான்.அரச குடும்பத்தில் தூர தேசத்தை சார்ந்த ராஜவம்சதோடு பெண் எடுப்பதும் கொடுப்பதும் இன்றுவரை உண்டு.

  ப்ளூ blooded என்றால் என்ன என்று பார்க்கலாம்.

   சோழர் ,பாண்டியர்,பல்லவர் ,சம்பூவராயர்,தொண்டைமான் ராஜா வீட்டிலும் பெண் எடுப்பார்,கொடுப்பார்,பெண் கொடுக்க மறுத்தால் சண்டை இட்டு வென்று  அவர்களின் அரசகுலத்தில் பிறந்த பெண்களை தன் துணையாக ஆக்கி கொள்வார். இதே போல .
சாலுக்கியரோடும் ,கிருஷ்ணா தேவராயரோடும் ,ஏன் சிந்தியா ராஜாகளோடும் சம்பந்தம் வைத்து கொள்வார்.
ஆனால் அரச குடும்பமல்லாத குடும்பத்தோடு சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார். அப்படி பலரை மணந்து கொண்டாலும் அவர்கள் ராணி ஆகவும் மாட்டார்கள்

     ஆண்ட சாதி என்று ஆட்டம்போடும் சிலரின் கூற்றுக்களை ஒரு பேச்சுக்காக சரி என்று எடுத்து கொண்டால் அந்த கூற்றின் அடிப்படையில் அனைத்து இஸ்லாமியர்களும் அக்பரின் பரம்பரை,ஆற்காட்டு நவாபின் பரம்பரை,ஆங்கிலோ இந்தியர்கள் அனைவரும் இங்கிலாந்து அரச பரம்பரை ஆண்ட இனம் என்று கூறி கொள்ளலாம்.

   செட்டி நாட்டரசர் என்று இன்றும் இருக்கிறார்கள்.அதனால் செட்டியார் எல்லாம் ராஜாக்களா
ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்,பேஷ்வாக்கள் பிராமணர்கள்.அவரகளின் அதே கோத்திரத்தை கொண்டவர்கள் பல லட்சம் பேர் இன்றும் இந்தியா முழுவதும் உண்டு.அதனால் அத்தனை பிராமணர்களும் ராஜாக்களா

     நாயக்கர் என்று தெலுகு பேசும் மக்களும் நாட்டை ஆண்டார்கள்.நாயக்கர்,நாய்டு ,ரெட்டி எல்லாம் ஒன்றாம் அப்படியானால் இன்னுமொரு இருவது சதவீதம் ஆண்ட பரம்பரை ஆகிறது

    அடிமைகளும் ராஜாவாக,யானை மாலை போட்டு ராஜாவாக ஆனவர்களும் உண்டு.அவர்கள் பிறந்த சாதி அதனால் ஆண்ட பரம்பரை ஆகி விடுமா.

  ஐந்து வருடம்  ஆட்சி செய்ய  மக்கள் காலில் விழுந்து வோட்டு வாங்கி வெற்றி பெற்று  வருபவர்கள் ஆடாத ஆட்டமா.இவர்களே இந்த   இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்றால் பிறந்ததிலிருந்தே இளவரசனாக முடிசூட்டப்பட்டவர்கள் ,பல பெண்ணை ஒரே மேடையில் அனைவர் ஆசியுடன் மணந்த,நூற்றுகணக்கில் கண்ணில் பட்ட பெண்ணை எல்லாம்
அந்தபுரத்திற்கு தூக்கி சென்ற காலத்தில் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்கள்

     அவர்களுக்கு என்றும் சாதி இருந்தது கிடையாது.அடிமையாய் இருந்து அரசு ஆனவனும்,ஆசை நாயகிக்கு மகனாய்  பிறந்து அரசனானவனும் கூட சில தலைமுறையாய் அரசாளும் குடும்பத்தில் தான் பெண் எடுக்க ஆசைபடுவான்.தராவிட்டாலும் போர் தொடுத்தாவது அரச குடும்பத்தில் இருந்து மணந்து கொள்வான்.

      பிராமணர்கள் வகுத்த நீதிகளில்,சத்ரியர்கள் வகுத்த நீதிகளில் கூட தன வர்ணத்திற்கு கீழ் உள்ள பெண்களை மணந்து கொள்ள தடை இருந்தது இல்லை .சாதிக்குள் திருமணம் எனபது அரசருக்கு கிடையாது

      அடிமைகள் பலர் அரசர் ஆகியிருக்கிறார்கள்,ஆசைநாயகர்களும்,ஆசை நாயகிகளுக்கு பிறந்தவர் பலரும் கூட அரசர் ஆகி உள்ளார்கள்.அரசரில் 99 சதவீதம் கொடுங்கோலன் ,பெண்பித்தன் தான்.
பாபரோ,ஜைச்சந்தோ,சாளுக்கியராவ்,குப்தரோ,சோழரோ,பல்லவரோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
அதை ஒரு பெருமையாக இருவத்தி ஓராம் நூற்றாண்டில் கருதுபவர்கள் சிலர் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்
இப்போது எல்லா சாதியில் இருந்தும் ஒன்றிரண்டு மந்திரிகள் இருப்பது போல எல்லா சாதியை சேர்ந்தவர்களில் இருந்தும் ஓரிரு குடும்பங்கள்  ஏதாவது ஒருபகுதிக்கு அரசனாக இருந்திருப்பர்

     ராஜாக்களின் படையில் பல சாதியை சார்ந்த படை வீரர்கள் இருப்பார்கள்.
ஆட்சி போன பின் கூட்டம் சேர்க்க ,தன பின் சிலர் வர முன்னாள் ராஜாக்களின் பல குடும்ப வாரிசுகள் அந்த பகுதியில் இருக்கும் சாதிகளோடு அடையாளம் கட்டி கொள்கிறார்கள்.


     சில காலம் முன்வரை/இன்றும் காட்டில் வசித்து வரும் பழங்குடி மக்களுக்கும் ராஜாக்கள் உண்டு,அரண்மனைகள் உண்டு.பட்டம் சூடும் விழாக்கள் உண்டு

  வெள்ளைக்காரன் இங்கு ஆட்சியை பிடிக்க அவனுக்கு பெரும் துணையாக இருந்த அவன் இந்தியாவில் முதலில் உருவாக்கிய மெட்ராஸ் ரெஜிமெண்டில் பெருமளவில் சேர்ந்து தங்களை அடிமைகளாக ,கீழ்சாதியாக நடத்திய அன்றைய உயர்சாதிகளுக்கு எதிராக போராடிய சாதிகளை சேர்ந்தவர்கள்,அவனால் பல்வேறு நாடுகளுக்கும் தேயிலை தொட்ட தொழிலாளர்களாக லட்சக்கணக்கில் அனுப்பட்டவர்கள்,திருவான்கொர் ராஜாவின் அரசில் தீண்டாமை கொடுமையை அனுபவித்தவர்கள் இன்று ஆண்ட சாதி என்று கூக்குரல் எழுப்புவது சரியா

 பாரதியார் நடத்திய பத்திரிக்கைகளின் தொகுப்பு என்னிடம் உள்ளது
தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பாதிக்கு மேற்பட்டோர்  வன்னியர்கள்.அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று வன்னியர் சங்கம் இங்கு உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்தை ஈர்க்க போராடுகிறது.அதற்க்கு பாரதியார் ஆதரவு தெரிவித்து அவருடைய இதழில் எழுதி இருக்கிறார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் பல லட்சம் மக்கள் நூற்றாண்டுகளுக்கு முன் வேறு நாடுகளுக்கு அடிமைகளாக சென்ற பெரும்பான்மையான மக்களை கொண்ட சமூகத்தை ஆண்ட சாதி என்று சொல்வது ஏமாற்று வேலை இல்லையா.

 தீண்டாமை கொடுமைகளுக்கு உள்ளான நாடர்கள்,ஈழவர்களின் வரலாறு ,அதை எதிர்த்த போராட்டங்கள் நடந்து நூறு வருடம் கூட ஆகவில்லை. 
 உண்மை நிலை இப்படி இருக்க ஆண்ட சாதி என்று சாதி சங்கங்கள் ஆடம் போடுவதை விட பெரிய புரட்டு உண்டா

குறிப்பிட்ட குடும்பம் ராஜா வம்சமாக இருப்பதற்கும் சாதிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது.தனி குடும்பங்களின் வரலாற்றுக்கு பின்னே சாதி சங்கங்கள் புகுந்து கொண்டு மக்களை வெறி ஏற்றுவதற்காக   உருவாக்கும் போலி வரலாறுகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டியது வரலாற்று ஆசிரியர்களின் கடமை அல்லவா


      ஒரு நாட்டில் ஒன்றோ இரண்டோ ராஜ குடும்பம் இருந்தால்/சொல்லி கொண்டால் சரி .எல்லாரும்  நாங்கள் ராஜபரம்பரை என்றால் எங்கே போய் முட்டி கொள்வது