Sunday 5 October 2014

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆதரவாளர்கள் சதியால் சிறை வைக்கப்பட்டார் முன்னாள் முதலவர் என்று கிளிபிள்ளை போல தமிழ்நாடு முழுவதும் மேடை போட்டு கத்தி கொண்டு இருக்கிறார்கள்
செல்வி மாயாவதி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறவில்லை,முலாயம் சிங்க் தண்டனை பெறவில்லை என்று
முலாயம் சிங் தப்பிசுட்டாக
மாயாவதி தப்பிசுட்டாக ,லாலு மாட்டிகிட்டாக ஆனா 25 லட்சம் தான் பைன் எவ்வளவு பெரிய அநீதி என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
முலாயம் சிங் செல்வி மாயாவதி மட்டுமா தப்பித்தார்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே டாசன் வழக்குகளில் இருந்து தப்பித்தார்கள்.அந்த வழக்குகளில் இருந்து தண்டனையில் தப்பித்தது எல்லாம் இவர்கள் மற்ற முதல்வர்கள் மீது குற்றம் சாட்டுவது போல மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசாமல்,அவர்கள் கேட்பதை எல்லாம் வாரி வழங்கியதால் தான் தப்பித்தார் என்று எடுத்து கொள்ளலாமா
அ தி மு க ஆதரவாளர்களே அவர்களின் தலைவி மற்ற அனைத்து வழக்குகளிலும் மத்திய அரசு சொன்னபடி ஆடியதால் விட்டு விட்டார்கள் ,இன்று அவர்கள் சொன்னபடி ஆடாததால் விட்டு விடவில்லை என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது விந்தையான ஒன்று
லாலு வழக்கில் அவரோடு பல மந்திரிகள்,வேறு கட்சிகளை சார்ந்த முன்னால் முதல்வர்களும் அடக்கம்.பைன் குறைவு என்று பொங்கி ஏழும் ரத்தத்தின் ரத்தங்கள் அங்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை என்பதை வசதியாக மறப்பது ஏனோ.எங்கும் யாரும் அநீதி என்று போராடவில்லை.
இதே போல தீர்ப்பு வேறு கட்சிகளின் தலைவர்களின் மீது வந்திருந்து இங்கு யாராவது ஒருவர் அதை அநீதி என்று பேசி இருந்தால் இன்று துடிக்கும் நடுநிலையாளர்களும் ,ரத்தத்தின் ரத்தங்களும் என்ன பேசி இருப்பார்கள் என்பதை நினைத்து பார்த்தால் அவர்களின் நடுநிலை ,நியாய அரசீற்றங்களின் கோவம் கண்ணகியின் கோவத்தை விஞ்சி இருக்கும்

பரமார்த்த குருவும் சீடர்களும்

     மோடி அவர்கள் சுத்தமான இந்தியா என்று இந்தியாவை தூய்மையான பகுதியாக மாற்ற துடைப்பத்தை கையில் எடுத்து விட்டார்.அவர் சொல்கேட்டு கோடிகணக்கான மக்களும் சுத்தமான இந்தியாவுக்காக உழைப்போம் என்று உறுதி கொண்டுள்ளனர் என்று மோடி பக்தர்களும்,?நடுநிலைகளும் போடும் கொட்டம் தாங்கவில்லை.
எதை தூய்மை செய்ய போகிறோம்,எது குப்பை,எது சுற்றுசூழலை மிகவும் அழிக்கிறது என்று எந்தவித தெளிவும் அறிவும் இல்லாமல் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ஒருவரை ,அவரின் கட்டளைகளை கண்டு புளகாங்கிதம் அடையும் கூட்டம் அதிகமாக இருப்பது வேதனை தான்


       செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி பெண் சிசுகொலைகளை பற்றி உருக்கமாக பேசினார்.ஆனால் 12 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்த குஜராத் மாநிலம் இந்தியாவில் பெண் சிசுகொலையில் முதலிடத்துக்கான போட்டியில் இருக்கும் மாநிலம்.2001-2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெண் சதவீதம் குறைந்த மூன்று மாநிலங்களில் ஒன்று குஜராத்.2001 கணக்கெடுப்பில் 0-6 வயதுக்குலான குழந்தைகளின் சதவீதம்1000-883.மோடியின் பத்து ஆண்டு ஆட்சிக்கு பின் அது அற்புதமாக அதிவேகமாக அதிகரித்து 886 ஆனது.
தூய்மையிலும் மோடியின் சாதனை இதே லட்சணம் தான்.ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து அவர் நடத்தி காட்டிய சாதனை இது தான்
The Central Pollution Control Board (CPCB) has declared Gujarat as the most polluted State in the country.
The conclusion has been based on the increasing levels of pollution and toxic wastes.
There are seven states in the country, which account for 80% of the total hazardous wastes and among these Gujarat tops the list followed by Maharashtra and Andhra Pradesh.
சுற்றுசூழலை அழிக்கும் தனியார்/பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருக்கும் கட்டுபாடுகளை எடுக்க வேண்டும்,அவை பல்கிபெருக அனைத்து உதவிகளையும் செய்யவே நான் பிரதமராக தேர்ந்தேடுக்கபட்டுள்ளேன் என்று சூளுரைக்கும் பிரதமர் சுற்றுசூழல் தூய்மை,மக்கள் மனம் மாற வேண்டும் பற்றி பேசுவது ,துடைப்பத்தோடு புகைப்படத்தை வெளியிடுவது அறியாமையினாலா அல்லது மக்கள் முட்டாள்கள் வெறும் வாய் ஜாலத்தால் அவர்களை பல்லாண்டு காலம் ஏமாற்றலாம் என்ற தன்னம்பிக்கையினாலா

        ஒரு மாதத்தில் பல ஆயிரம் டன் குப்பைகள் அதுவும் மக்காத குப்பைகள் சேர காரணமான குடிநீர் பாட்டில்கள்,சிப்ஸ் பாக்கெட்டுகள்,பெப்சி பாட்டில்கள்,உணவு பொருட்கள்,அழகு பொருட்களின் பேகிங்குளை மக்கும் பொருள் கொண்டு தான் பேக் செய்ய வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கும்/மக்காத /கேடு விளைவிக்கும் குப்பைகளை நேரடியாகவோ,திருட்டுத்தனமாகவோ இறக்குமதி செய்வதை தடுக்கும் அதிகாரம் கொண்ட /உத்தரவிடும் நிலையில் உள்ள ஒருவர் குப்பையை விற்பவர்களுக்கு எதிராக மூச்சு விட கூட முடியாத ஒருவர் மக்களை குற்றவாளிகள் ஆக்குவதும் அதற்கு அவர்களே கை தட்டுவதும் பரமார்த்த குருவையும் அவரின் சீடரகளையுமே வெட்கப்பட வைக்கும்