Monday 1 December 2014

ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்


  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .

    ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்.இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வழங்கப்பட மாட்டாது.இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்  கீழ் நடந்த திருமணம் என்பதால் ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கணவர் கான் உச்சநீதிமன்றத்தில்  வழக்காடினார்ர். பல இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கின.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஷா பானு அவர்களுக்கு ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பு  வழங்கியது.

  இதை இஸ்லாமியரின் தனி சட்டத்தில்/மத நம்பிக்கைகளில்  தலையிடும் செயல் என்று இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்த்து போராட்டத்தில் இறங்கின. ராஜீவ் தலைமையிலான காங்கிரெஸ்  அரசும் அவர்களுக்கு பணிந்து தீர்ப்பை மாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து பெண்ணிய இயக்கங்களும் ஹிந்துத்வா இயக்கங்களும் களத்தில் இறங்கின.

  ஹிந்து இயக்கங்களை வசியபடுத்த ராஜீவ் அரசு பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவிலுக்கு ஷீலான்யாஸ் நடத்த அனுமதி அளித்தது. தவறான செயல்களின் மூலம் இரு சமூகங்களையும் தன பக்கம் இழுக்கலாம் என்ற காங்கிரெஸ் அரசின்  செயல் அவர்களுக்கு எதிராக தான் திரும்பியது.400க்கு மேல் எம் பி க்கள் கொண்ட நிலையில் இருந்து தேய்ந்து கொண்டே வர ஷா பானு வழக்கு தீர்ப்பை மாற்றிய சட்டமும் ,அதற்கு ஈடுகொடுக்க பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவில் கட்ட பூஜை செய்ய தந்த அனுமதியும் தான் முக்கிய காரணங்கள்.

  ஷா பனூ வழக்கிற்கும் இன்று பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் அவர்கள் கேட்டிருக்கும் RTI கேள்விகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
   ஷா பானு அவர்களோடு ஒப்பிட்டால் ஜசோதா  பென் அவர்கள் அனுபவித்த கொடுமையான வாழ்க்கை பல மடங்கு கொடியது.ஷா பானு அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய சட்டம் இருந்தது. கணவர் தெளிவாக மணவிலக்கு செய்து விட்டார்.இங்கு அப்படி எதுவும் கிடையாது

   ஒரு நாளைக்கு 30000 ரூபாய்க்கு குறையாத உயர்ந்த உடைகளை  உடுத்தும்  manithar ,பல ஆண்டு காலம் மாநிலத்தின் முதல்வர்/இன்று பிரதமர் பதவி வகிக்கிறவர் தான்  கணவர்.ஆனால் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் 1968 ஆம் ஆண்டு தொட்டு தாலி கட்டிய  கணவர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,முறையாக மணவிலக்கு செய்யவும் முயற்சிகள் எடுக்கவில்லை,  எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை,

  உலகில் பெண்களை  ஒடுக்குவதில்,அடிமைகளாக நடத்துவதில் ,பொருட்டாக மதிக்காமல் ஆண்கள் வாழ்வதை பெருமையாக கருதிவதில் இந்து மதம் மற்ற அனைத்து மதங்களையும் விட பல படிகள் மேலே என்பதை விளக்க ஹிந்டுத்வத்தின் தலைமகன் மோடி அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.

  தங்கள உரிமைக்காக போராடிய/போராடும் இரு பெண்களில் திரு ஷா பானு அவர்கள் சந்திக்காத  ஜசோதா பென்  அவர்கள் சந்திக்கும் இன்னொரு மிக பெரிய துயரம் அவர் மீது விழும் பழிகளும்,எதிர்கட்சியினரின் சதிவலையின் காரணமாக ஒரு புனிதர் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்று வந்து விழும்   குற்றசாட்டுகளும்.

   1968 இல் 17 வயதில் திருமணமாகி (1976 சட்ட திருத்தம் வருமுன் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் ஆணின்  திருமண வயது 18,பெண்ணின் திருமண வயது 15)மூன்று ஆண்டுகள் தன கனவோடு வசிதததாக ஜசோதா பென் அவர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார். மூன்று ஆண்டுகளில் மூன்று மாதங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அதிகம் என்றும் அந்த பெட்டியில் சொல்லி இருக்கிறார்.

  அம்பேத்காரின் கடும் முயற்சியினால் நேருவின் ஆதரவினால் காங்கிரெஸ் உள்  இருந்த ,வெளியில் இருந்த ஹிந்டுத்வவாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசியல் சட்டத்தில் ஹிந்து மத திருமண  சட்டங்களில் ஓரளவிற்கு பெண்களுக்கு சாதகமான (ஆனால் மதத்திற்கு எதிரான )சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இதை இன்றும் மற்ற மதத்தில் கை வைக்க முடிந்ததா என்று குத்திக்காட்டி ஹிந்டுத்வவாதிகள் வாதிடுவது அன்றாட நிகழ்வு.

  இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பொது சிவில் சட்டம் என்று குதிக்கும் கூட்டம் ஷா பானு அவர்களை விட பல மடங்கு கொடுமைகளை அனுபவித்த/அனுபவிக்கும் ஜசோதா பென் அவர்களுக்கு எந்த சட்டமும் துணை புரியாத நிலையை கண்டும் காணாமல் போனால் கூட பரவாயில்லை. மனைவி எனும் உரிமைக்காக காலம் கடந்தாவது போராடும் பெண்மணியின் மீது களங்கங்களை அள்ளி வீசுவது ஞாயமா என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

Sunday 5 October 2014

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆதரவாளர்கள் சதியால் சிறை வைக்கப்பட்டார் முன்னாள் முதலவர் என்று கிளிபிள்ளை போல தமிழ்நாடு முழுவதும் மேடை போட்டு கத்தி கொண்டு இருக்கிறார்கள்
செல்வி மாயாவதி சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறவில்லை,முலாயம் சிங்க் தண்டனை பெறவில்லை என்று
முலாயம் சிங் தப்பிசுட்டாக
மாயாவதி தப்பிசுட்டாக ,லாலு மாட்டிகிட்டாக ஆனா 25 லட்சம் தான் பைன் எவ்வளவு பெரிய அநீதி என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
முலாயம் சிங் செல்வி மாயாவதி மட்டுமா தப்பித்தார்கள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களே டாசன் வழக்குகளில் இருந்து தப்பித்தார்கள்.அந்த வழக்குகளில் இருந்து தண்டனையில் தப்பித்தது எல்லாம் இவர்கள் மற்ற முதல்வர்கள் மீது குற்றம் சாட்டுவது போல மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பேசாமல்,அவர்கள் கேட்பதை எல்லாம் வாரி வழங்கியதால் தான் தப்பித்தார் என்று எடுத்து கொள்ளலாமா
அ தி மு க ஆதரவாளர்களே அவர்களின் தலைவி மற்ற அனைத்து வழக்குகளிலும் மத்திய அரசு சொன்னபடி ஆடியதால் விட்டு விட்டார்கள் ,இன்று அவர்கள் சொன்னபடி ஆடாததால் விட்டு விடவில்லை என்று அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது விந்தையான ஒன்று
லாலு வழக்கில் அவரோடு பல மந்திரிகள்,வேறு கட்சிகளை சார்ந்த முன்னால் முதல்வர்களும் அடக்கம்.பைன் குறைவு என்று பொங்கி ஏழும் ரத்தத்தின் ரத்தங்கள் அங்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை என்பதை வசதியாக மறப்பது ஏனோ.எங்கும் யாரும் அநீதி என்று போராடவில்லை.
இதே போல தீர்ப்பு வேறு கட்சிகளின் தலைவர்களின் மீது வந்திருந்து இங்கு யாராவது ஒருவர் அதை அநீதி என்று பேசி இருந்தால் இன்று துடிக்கும் நடுநிலையாளர்களும் ,ரத்தத்தின் ரத்தங்களும் என்ன பேசி இருப்பார்கள் என்பதை நினைத்து பார்த்தால் அவர்களின் நடுநிலை ,நியாய அரசீற்றங்களின் கோவம் கண்ணகியின் கோவத்தை விஞ்சி இருக்கும்

பரமார்த்த குருவும் சீடர்களும்

     மோடி அவர்கள் சுத்தமான இந்தியா என்று இந்தியாவை தூய்மையான பகுதியாக மாற்ற துடைப்பத்தை கையில் எடுத்து விட்டார்.அவர் சொல்கேட்டு கோடிகணக்கான மக்களும் சுத்தமான இந்தியாவுக்காக உழைப்போம் என்று உறுதி கொண்டுள்ளனர் என்று மோடி பக்தர்களும்,?நடுநிலைகளும் போடும் கொட்டம் தாங்கவில்லை.
எதை தூய்மை செய்ய போகிறோம்,எது குப்பை,எது சுற்றுசூழலை மிகவும் அழிக்கிறது என்று எந்தவித தெளிவும் அறிவும் இல்லாமல் முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ஒருவரை ,அவரின் கட்டளைகளை கண்டு புளகாங்கிதம் அடையும் கூட்டம் அதிகமாக இருப்பது வேதனை தான்


       செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி பெண் சிசுகொலைகளை பற்றி உருக்கமாக பேசினார்.ஆனால் 12 ஆண்டுகள் அவர் ஆட்சி செய்த குஜராத் மாநிலம் இந்தியாவில் பெண் சிசுகொலையில் முதலிடத்துக்கான போட்டியில் இருக்கும் மாநிலம்.2001-2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெண் சதவீதம் குறைந்த மூன்று மாநிலங்களில் ஒன்று குஜராத்.2001 கணக்கெடுப்பில் 0-6 வயதுக்குலான குழந்தைகளின் சதவீதம்1000-883.மோடியின் பத்து ஆண்டு ஆட்சிக்கு பின் அது அற்புதமாக அதிவேகமாக அதிகரித்து 886 ஆனது.
தூய்மையிலும் மோடியின் சாதனை இதே லட்சணம் தான்.ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்து அவர் நடத்தி காட்டிய சாதனை இது தான்
The Central Pollution Control Board (CPCB) has declared Gujarat as the most polluted State in the country.
The conclusion has been based on the increasing levels of pollution and toxic wastes.
There are seven states in the country, which account for 80% of the total hazardous wastes and among these Gujarat tops the list followed by Maharashtra and Andhra Pradesh.
சுற்றுசூழலை அழிக்கும் தனியார்/பொதுத்துறை நிறுவனங்களுக்கு இருக்கும் கட்டுபாடுகளை எடுக்க வேண்டும்,அவை பல்கிபெருக அனைத்து உதவிகளையும் செய்யவே நான் பிரதமராக தேர்ந்தேடுக்கபட்டுள்ளேன் என்று சூளுரைக்கும் பிரதமர் சுற்றுசூழல் தூய்மை,மக்கள் மனம் மாற வேண்டும் பற்றி பேசுவது ,துடைப்பத்தோடு புகைப்படத்தை வெளியிடுவது அறியாமையினாலா அல்லது மக்கள் முட்டாள்கள் வெறும் வாய் ஜாலத்தால் அவர்களை பல்லாண்டு காலம் ஏமாற்றலாம் என்ற தன்னம்பிக்கையினாலா

        ஒரு மாதத்தில் பல ஆயிரம் டன் குப்பைகள் அதுவும் மக்காத குப்பைகள் சேர காரணமான குடிநீர் பாட்டில்கள்,சிப்ஸ் பாக்கெட்டுகள்,பெப்சி பாட்டில்கள்,உணவு பொருட்கள்,அழகு பொருட்களின் பேகிங்குளை மக்கும் பொருள் கொண்டு தான் பேக் செய்ய வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கும்/மக்காத /கேடு விளைவிக்கும் குப்பைகளை நேரடியாகவோ,திருட்டுத்தனமாகவோ இறக்குமதி செய்வதை தடுக்கும் அதிகாரம் கொண்ட /உத்தரவிடும் நிலையில் உள்ள ஒருவர் குப்பையை விற்பவர்களுக்கு எதிராக மூச்சு விட கூட முடியாத ஒருவர் மக்களை குற்றவாளிகள் ஆக்குவதும் அதற்கு அவர்களே கை தட்டுவதும் பரமார்த்த குருவையும் அவரின் சீடரகளையுமே வெட்கப்பட வைக்கும்

Thursday 7 August 2014

சில கோவில்களில் மேலாடை மறுக்கபடுவதும்/காலாடை தடையும்   கூட தண்டனைக்குரிய குற்றமாக வேண்டும்



மறுபடியும் மறுபடியும் பணிக்கு உள்ள சீருடையோடு ,தனியார் கேளிக்கை விடுதிகளில் வேட்டி அணிந்ததால் மறுப்பு தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.

       குறிப்பிட்ட தொழில் செய்பவர்களுக்கு இருக்கும் உடை கட்டுப்பாடுகளுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கு வருபவர்களுக்கு இருக்கும் உடை கட்டுப்பாடுகளுக்கும் வித்தியாசம் உண்டு

      காவலர் என்றால் குறிப்பிட்ட உடை,செவிலியர் என்றால் குறிப்பிட்ட உடை,நீதிபதி என்றால் குறிப்பிட்ட உடை என்பதில் தவறு எங்கே வருகிறது.குறிப்பிட்ட உடைகளை தவிர மற்ற உடைகளை நீதிபதிகள் அணியலாம்,சில உடைகள் நீதிமன்றத்திற்கு தகுதியானவை அல்ல என்று இருந்தால் அது தவறு தானே.குறிப்பிட்ட வேலைக்கு  குறிப்பிட்ட சீருடை  மட்டும் தான் அணிய  வேண்டும் என்பதற்கும் குறிப்பிட்ட இடங்களில் நுழைய சில உடைகள் அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா

         குறிப்பிட்ட ஆடை  சில இடங்களில்  நுழைய தகுதியான ஆடை  கிடையாது என்பதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் /தவறாக எண்ணாமல்  இருக்க வேண்டும் .,அதில் தவறு இல்லை என்று வாதிடுவோர்  மகாத்மா காந்தியிடம் இந்த ரயில் பெட்டி உங்களுக்கு ஆனது கிடையாது என்று தென்னாப்ரிக்காவில் வெள்ளையர் சொன்னதும் தவறு இல்லை என்று வாதிடுவார்களா

 குறிப்பிட்ட ஆடை அணிந்தவர்களுக்கு மட்டுமான  பிரைவேட் கிளப் போல குறிப்பிட்ட நிறம் கொண்டவர்களுக்கு மட்டுமான பிரைவேட் கோச்


      ரயில்வே பணியாளர் மட்டும்/ராணுவ வீரர்/மகளிர் மட்டும் இருக்கும் ரயில் பெட்டி எனபது தவறு கிடையாது.ஆனால் வெள்ளையர் மட்டும்,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நுழைய கூடிய கோவில் வாயில்,குறிப்பிட்ட உடை அணிந்தவர் மட்டும் வரக்கூடிய கிரிக்கெட் கிளப் எனபது தண்டனைக்குரிய குற்றம் தான்


.
கறுப்பர் வெள்ளையரோடு ஒன்றாக ரயிலில் பயணம் செய்ய கூடாது,ஒன்றாக வசிக்க கூடாது,ஒன்றாக படிக்க கூடாது என்பதை போன்ற வெளிப்பாடு தான் சூட் அணிந்தவர் வேட்டி அணிந்தவரோடு ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவோ,மது அருந்தவோ கூடாது என்ற வாதமும்

எந்த மரபுக்கும் பின் இருப்பது,அடிப்படையாக இருப்பது discrimination தான்.

கோவில்களில் சட்டை இல்லாமல் போக வேண்டும் என்பதற்கு அடிப்படை சாதியை தெரிந்து கொள்ள தான்.சாதியை பார்த்து தனி மரியாதை,உணவுக்கு கூப்பன் இன்றும் உண்டு.சட்டையை மட்டும் கழட்டி விட்டு பூணூலை (பிராமண,க்ஷத்ரிய,வைஷ்ய வர்ணத்திற்கு பூணூல் உண்டு,கோத்திரமும் உண்டு )அனுமதிப்பதன் பின்னணி வேறு என்ன
வேட்டி இங்கு அனுமதிக்கப்படும் அதே வேளையில் பான்ட் ,மேல்சட்டை மறுக்கப்படும் கோவில்களில் அவற்றிற்கு அனுமதியும் கிடைக்க வேண்டும்

இங்கு வேட்டிக்கு கேட்கபடுவது இட ஒதுக்கீடூ.தனியார் கிளப்போ ,கல்லூரியோ தமிழ்நாட்டில் வேட்டிக்கு இட ஒதுக்கீடு கேட்பதில் தவறு எங்கே வருகிறது.வேட்டி மட்டுமே அனுமதிக்கப்படும் சில கோவில்களில்  பேண்டுக்கும் இட ஒதுக்கீடு கேட்பது ஞாயம்.பலர் கூடும் இடத்தில குறிப்பிட்ட பாலினத்தவர்,மதத்தவர்,நிறத்தவர் உணவு உண்பவர்கள் ,உடை உடுத்துபவர்களுக்கு அனுமதி மறுப்பது அவர்களின் உடை,நிறம்,உணவு அங்கு அவர்கள் அமர தகுதியானவர்கள் அல்ல,அவர்களின் உடை,உணவு,நிறம் கீழ்த்தரமானது என்பதை தான் வலியுறுத்துகிறது.

Tuesday 24 June 2014

எழுத்தாளர் அசோகமித்திரன் தமிழ்நாட்டு யூதர்கள் தேமே என்று நிற்கும் கதாபாத்திரங்கள்


 அசோகமித்திரன் அற்புதமான எழுத்தாளர் என்பதை முழுவதுமாக ஏற்று கொண்ட அவர் கதைகளில் பலவற்றை படித்த வாசகன் என்ற முறையில் என் பார்வையை வைக்கிறேன்.

  அவரின் ஔட்லூக் பெட்டி தவறு என்று எனக்கு தோன்றவில்லை.அவர் மனதில் பட்டதை அவர் சொன்னார்.எழுதினார்.ஆனால் அவர் பேட்டி பெரும் தவறு என்று பலரும் வாதிடுவது மற்றும் அதன் கூடவே பேட்டிக்கும் அவர் எழுத்திற்கும் தொடர்பு கிடையாது என்றும் சாதிப்பது தான் ஆச்சரியம் அளிக்கிறது.
  மிக பெரும்பான்மையான அவர் கதைகளின் அடித்தளமே, அவர் ஔட்லூக் பேட்டியோடு முழுவதும் ஒத்து போவது புரியவில்லையா அல்லது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெறுப்புணர்வு, உள்நோக்கத்தின் காரணமாக அப்படி தோன்றுகிறது என்று சில நண்பர்கள் சொல்வது உண்மையா என்று விளங்கவில்லை

  இந்தியாவில் மிகவும் ஆணவம் பிடித்த அரசியல்வாதிகள்,தலைவர்கள்,அதிகாரிகள்,மனிதர்கள் யார் என்று பட்டியல் இட்டால் முதல் இடத்தில வருபவர்கள் சுப்ரமணிய சாமி,மணி ஷங்கர் ஐயர்,ஜெயலலிதா,பி சி சி ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் ,டி என் சேஷன் தான் நினைவுக்கு வருகிறார்கள்.


        என் வாழ்வில் நண்பர்களாக,மேல் அதிகாரிகளாக,ஆசிரியர்களாக,மருத்துவர்களாக,ராணுவ அதிகாரிகளாக,என் கீழ் பணி செய்யும் அதிகாரிகளாக,முற்போக்காளர்களாக,உறவினர்களாக,அதே தெருவில் வசிப்பவர்களாக,எழுத்தாளர்களாக ,கலைத்துறையில் இருப்பவர்களாக,உடன் மது அருந்துபவர்களாக,புரோகிதம் செய்ய வரும் குருக்களாக,கோவிலில் பணியில் இருக்கும் ஐயர்களாக   இதுவரை சந்தித்த பல்லாயிரக்கணக்கான பிராமணர்களில் சுப்ரமணிய சாமிகளையும்,ஜெயலலிதாக்களையும் தான் பெரும்பான்மையாக கண்டிருக்கிறேனே தவிர அசோகமித்திரனின் கதைகளில் வரும் சரோஜினியின் தந்தை,அண்ணன்களை அல்ல.

  பிராமண சமூகத்தில் பிறந்ததால் பெரும்பாலான கதைமாந்தர்கள் பிராமணர்களாக இருப்பதில் ஆச்சரியமோ தவறோ கிடையாது.ஆனால் அவர்களில் பெரும்பாலோர் யூதர்களின் நிலையில் துயரத்தோடு ,பயத்தோடு  இருப்பது தான் ஆச்சரியமான ஒன்று.

     சுப்ரமணிய சாமி , மணி ஷங்கர் ஐயர்,சேஷன் , தமிழில் அர்ச்சனை என்று கோவில் குருக்களிடம் சொல்லும் போது அவரிடம் இருந்து கிடைக்கும் பார்வை,முகநூல்,பதிவு பின்னூட்டங்களுக்கு  கிடைக்கும் பதில்கள் அனைத்தும் காட்டும் பிராமணர்களுக்கும் அசோகமித்திரன் கதைகளுக்கும் காத தூரம் இருப்பது தான் ஆச்சரியமான ஒன்று.மிக நுட்பமாக பல விஷயங்களை பதிவு செய்த எழுத்தாளர் தன சாதி என்று வரும் போது அவர்கள் அனைவரும் ஒடுங்கி,நடுங்கி வாழும் கதாப்பாத்திரங்கள் ஆக காட்டியது சரியா.

https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fn%2F%3Frajan.k.krishnan%252Fposts%252F10204104307557312%26comment_id%3D10204114555893514%26aref%3D130118495%26medium%3Demail%26mid%3Da08ac9dG5af313b324cbG7c1735fGb7G7904%26bcode%3D1.1402908527.Abn2P-ugVcKciJZX%26n_m%3Dpoovannan_g%2540hotmail.com%26d&email=poovannan_g%40hotmail.com

திரு ராஜன் குறை அவர்களின் பதிவில் நான் இட்ட சில பின்னூட்டங்களை ஒன்றாக பதிவு செய்கிறேன்
   https://www.facebook.com/rajan.k.krishnan/posts/10203910186144398?comment_id=10204005312002485


  • அவருடைய விடுதலை குறுநாவலில்

    அங்கு அனேக குடிசைகளில் தகப்பனார் வேனுகோபாலாக இருப்பார்,மகன் சாமுவேலாக இருப்பான் அல்லது மூத்த சகோதரன் ஜானாக இருப்பான்,தங்கை புருஷன் கந்தசாமியாக இருப்பார்.அந்த சேரி ஆரம்பத்தில் தாறுமாறாக தான் இருந்தது


    அந்தோணி குழந்தையாயிருக்கும் போதே பம்பீனாவின் தகப்பனுடன் வாழ வந்து விட்டாள்.இப்போது பம்பீனாவின் தகப்பனார் இறந்தாகி விட்டது.அந்தோணியின் அப்பா மட்டும் அங்கு வந்து பொய் கொண்டிருந்தார்

    இதில் எல்லாம் குறிப்பிட்ட சாதிகளை கிண்டல் செய்யும் போக்கு இல்லையா .ஒரு சாதி இப்படிதான் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதியதாக தெரியவில்லையா




       
  • விடுதலையில் இருந்து

    உனக்கு உன் சூழ்நிலையையும் மீறிய நல்ல வாசனைகள்,குணங்கள் இருந்தது.


    இந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றன

    அந்தோணி குழந்தையாயிருக்கும் போதே பம்பீனாவின் தகப்பனுடன் வாழ வந்து விட்டாள்.இப்போது பம்பீனாவின் தகப்பனார் இறந்தாகி விட்டது.அந்தோணியின் அப்பா மட்டும் அங்கு வந்து போய் கொண்டிருந்தார்

    சேரியில் வசிக்கும் ஒருவரை இப்படி எழுதுவது போல வேறு எந்த பெண்ணை பற்றி இதே போல எழுதி இருக்கிறார்



         
  •   நான் அப்துல் காதர் ஆக இல்லையே என்பதற்கான பதில் கூட ரொம்ப குழப்புகிறது
    9 குழந்தைகளின் தந்தையான பரசுராமையர் என்ன மிஸ்டர் உனிவெர்சா ,பில் கிளின்டனா,தோனியா
    அந்த பதிலை கேட்டவுடன் பம்பினா டேவிட் உருகி எனக்கு ஆறுதலா இருக்கணும்னு இது மாதிரி சொல்றீங்க என்று
    சொல்வதற்கு

    கதையில் பரசுராமையர் மற்றும் பம்பினா குடும்பம் இரண்டையும் ஒப்பிட்டால் இங்கு பம்பினா பக்கம் அன்தொனியில் இருந்து எல்அப்துல் காதர் வரை ஏமாற்றுகாரர்கள்,திருடர்கள்,பெண்களை அடிப்பவர்கள் .ஆனால் அங்கு

    பெண்ணுக்கு வேலை கேட்டு முதலாளியிடம் உத்தரவு தொனியில் பேசும் போது எந்த பொண்டாட்டியின் குழந்தை என்ற கிண்டலின் பதிலான பரசுராமையரின் உக்கிர பார்வையை தாங்க முடியாமல் தந்தையும் மகனும் கருத்து குறுகி போவது போன்ற
    அரசீற்றதிர்க்கு ,பாம்பினா அவர் அப்துல்காதராக நான் இல்லையே என்ற சொற்களை பெரும் பேராக எண்ணுவதற்கு சாதியை தவிர வேறு எது காரணம் என்று கதாசிரியர் நினைக்க வைக்கிறார்

  • அவருடைய மணல் நாவலுக்கும் outlook பேட்டிக்கும் உள்ள ஒற்றுமைகள் உணர்த்துவது எதை
    .நடுத்தரவர்க்க பிராமண ஆண்களின் மனநிலையை அவருடைய பெரும்பாலான கதைகள் அற்புதமாக அப்படியே கண் முன் கொண்டு வரும்.
    அவரவர் வாழ்வின் சூழலை தான் மிகுந்த நுட்பத்துடன் எழுத முடியும்
    .அதை அற்புதமாக செய்தவர் அசோகமித்திரன்.ஒரு பக்கத்து பார்வையை மிக அழகாக பதிவு செய்தவர்.ஆனால் அது ஒரு பக்க பார்வை அல்ல என்று சொல்வது ஏன்

    மணல் நாவலில் இருந்து

    மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் என்ன ஆச்சு ?

    போட்டிருக்கு .... பாக்கணும் என்று அப்பா சொன்னார்

    பர்ஸ்ட் கிளாஸ் தானே ?

    பர்ஸ்ட் கிளாஸ் தான்.ஒரு "டி" வாங்கி இருக்கா ....அப்பா பூணலை எடுத்து காண்பித்தார்.மூணு டி வாங்கினாலே இதுக்கு இல்லேன்னுடுவான் .ஒரு டி க்கெல்லாம் அவ்வளவு சுலபமா

    இட ஒதுக்கீட்டை பற்றிய இந்த பார்வையை பிராமண பார்வை என்பதில் தவறு என்ன.

    மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் கல்வியை தொடர முடியாத சரோஜினி(நன்றாக படிக்கும் மாணவி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் வேறு எந்த கல்லூரியிலும் சேராமல் படிப்பை நிறுத்தி கொள்ளும் நிலை அன்றைய சூழலில் கூட நூறில் ஒன்று இருக்குமா ) ,வேறு சாதியில் திருமணம் செய்து விட்டு குடும்பத்தை விட்டு விலகி விட்ட சின்ன அண்ணன்,திருமணம் செய்து கொள்ளாத பெரிய அண்ணன் என்று வேறு சாதியில் துணை தேடியதை அன்றைய,இன்றைய பொதுபார்வையான பெரும் தவறாக காட்டுகிறது என்று சொல்வது தவறா

  

   
  • என்றும் இன்று நாவலில் இருந்து
    அப்போது அந்தப்படம் உண்மை நிலையை பிரதிபலித்தது என்று ஒப்பு கொள்கிறீர்கள் -"
    இல்லை.திரைப்படங்கள் உண்மை நிலையில் சில சிதறல்களை தான் பிரதிபலிக்க முடியும்.சாவித்திரி பிழைகள் மலிந்த மிக மிகவும் சாதரணமான படம்.ஆனால் தடை செய்ய வ
    ேண்டும் என்று வற்புறுத்துவது சரியாகாது என்று தான் சொன்னேன்

    அப்படியா?சாவித்திரி படத்தினோட புரட்சி நோக்கை நீங்க ஒத்துண்டீங்கன்னு நினைச்சோம்.

    அதிலே என்ன புரட்சி பார்த்தீங்க ?

    சாதி மதம் பார்க்காத காதல்,பொருந்தாத திருமணம் எதிர்ப்பு -

    இதுகளை வெச்சுண்டு தானே ஐம்பது வருஷமா இங்கே சினிமா எடுத்துண்டு வராங்க ?

    இல்லே,தற்காலத்துக்கு பொருந்தும்படியான முன்னேற்ற கொள்கைகளை நீங்க வரவேர்பீங்கன்னு எதிர்பார்த்தோம்.

    இதுலே எந்த காலத்திற்கு பொருந்துற முன்னேற்ற கொள்கைகங்கா இருக்குன்னு சொல்றீங்க?கணவன் ஒரு நியாயத்திற்கு கட்டுப்பட்டவன்.அவனுக்கு உள்ள எளிய வாழ்க்கையிலே நிறைவையும் சந்தோசத்தையும் பாக்கிறவன்.அவன் கல்யாணம் பண்ணிண்ட பொண்ணு நிச்சயம் அவன் கிட்டே நிறைவையும் சந்தோசத்தையும் காலபோக்கிலே கண்டுகொள்ளப் பக்குவம் அடைந்சுடுவா.ஆனால் அவள் மனதை களைத்தவன் ரெண்டு நாள் கூட ஒழுங்கா அவளை வெச்சுண்டு குடும்பம் நடத்த மாட்டா.நீங்க இந்த ஒரு கணத்தோட வாழ்க்கை முடிஞ்சு போயடுறதுன்னு எதுவும் செய்யலாம்.எப்படியும் இருக்கலாம்.ஆனால் இன்னிக்கு கட்டி பிடிச்சுண்டு புரண்டுண்டு நாளைக்கு நடுதெருவில நிக்கறது அநியாய புரட்சியா தோணறது.அதுவும் பாவம் அந்த பொண் ஊர் உலகம் தெரியாத கிராமப் பொண்ணு.அவளை எல்லா வக்கிரங்களும் பழகி போன ஒருத்தன் தன் சுகத்துக்கு அவளை வசியப்படுத்தி பயன்படுத்தி கொள்ளறது எந்த புரட்சியில் சேர்க்க முடியும்?

    அப்ப நான் வரேங்க."

    பேட்டி முடிஞ்சாச்சா?உள்மனதின் கிடைச்சுடுத்தா உங்களுக்கு ?இப்போ திடீர்னு 'சாவித்திரி "படம் எப்படி உங்களுக்கு நினைவு வந்தது?

    போன வருஷத்தில வந்த படங்களிலே பரபரப்பு ஏற்படுத்தியவை எல்லாம் மறுபரிசீலனை செய்யறதுன்னு திட்டம்.நீங்களும் கொஞ்சம் பரபரப்பா எழுதினீங்கன்னா மக்கள் நினைவில் இருப்பீங்க

    லவ் ஜெஹாத் என்று முழக்கமிடும் சங்க பரிவாரங்களுக்கும் ,நாடக் காதல் என்று வெறியேற்றும் சாதிசங்கங்களுக்கும் கதையில் வரும் எழுத்தாளரின் பேட்டிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா


       
  •   புனர்ஜன்மம் குறுநாவலில் இருந்து

    சீதா பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தால்.


    நான் சொல்றேனேன்னு தப்பா நினைசுகாதீங்க அம்மா.நீங்களும் நல்ல குளம் கோத்திரத்திலே இருந்து வரீங்க.எல்லாரும் மரியாதைப்பட்டவங்க ,அந்த அமா வந்து சதம் போட்ட்டப்போ இவரு எவ்வளவவு சிறுத்து போயிட்டாரு தெரியுமா?

    என்னன்னு சத்தம் போட்டாங்க?

    அதை நான் என்னம்மா சொல்றது?உங்களுக்கே தெரியாதா ?

    ரொம்ப நாள் இவரு கல்யாணம் ஆனவருன்னே எனக்கு தெரியாது.

    அது எப்படிம்மா தெரியாத போய்டும்?சரி,ஏதோ தொடர்பு எற்பட்டுடுச்சு .ஆனா விவரம் தெரிஞ்சவுடனே நீங்க ஒதுங்கிடனும்,இல்லியா?

    சீதா பதில் பேசவில்லை.

    அந்த அம்மா ரொம்ப வண்டை வண்டையாகத் திட்டினாங்க.உங்க ஜாதிபேரு சொல்லி அந்த தேவடியாளை அவங்க உறவுகாரங்க வீட்டு தெருவிலே துணி இல்லாம துரத்தி அடிக்கிறேன்னாங்க.இது எதுக்கும்மா உங்களுக்கு ?உங்க ஜாதியிலேயே ஒரு நல்ல பிள்ளையாண்டானாப் பார்த்து குடியும் குடித்தனமா இல்லாம....இவரோ பிள்ளை குட்டிகாரரு

    கதையில் (யூதர்களின் நிலையில் இருக்கும் சாதியில் பிறந்த)உடனே சீதா தற்கொலை செய்து கொள்கிறாள்.

        
         
  • அசோகமித்திரன் படைப்புலகம் என்ற ஞானியின் புத்தகத்தில்
    அசோகமித்திரனின் பேட்டி


    தமிழ் இலக்கிய உலகிலும் சமூகவியல் ரீதியிலும் சில "புனிதமான பசுக்கள் "உண்டு.புதுமைபித்தன் ஒரு "புனிதமான பசு".நீங்கள் அவர் பற்றி தெரிவித்த அபிப்பிராயம்,உங்களை சாதி வெறியராக கருதி விமர்சிக்கும் அளவிற்கு கொண்டு போய் இருக்கிறது.புதுமைபித்தன்,மணிக்கொடி எழுத்தாளர்கள்,ஜெயகாந்தன் பற்றி எல்லாம் உங்கள் மதிப்பீடு என்ன?

    எனக்கு தமிழில் இலக்கிய தாகம் ஏற்படுத்திய முதல் அனுபவங்களில் புதுமைப்பித்தனின் "சித்தி "சிறுகதையும் ஒன்று.ஆனால் பல தமிழ் விமர்சகர்கள் அவரை என்ன காரணங்களுக்காக புகழ்கிறார்களோ அவற்றில் பலவற்றை என்னால் ஒப்பு கொள்ள முடியவில்லை.அவருடைய கோபம்,சீற்றம்,கண்டனம் எல்லாவற்றுக்கும் அடியில் ஒரு அலட்சியமும் ,கேலியும் கிண்டலும் இருப்பதை யாரும் காண முடியும்.நகைச்சுவை மனித நேயத்தில் எழுவது.கிண்டல் அப்படி அல்ல

    ஜெயகாந்தனுக்கு உலகுடன் ஒரு திட்டவட்டமான உறவு இருக்கிறது.அந்த உறவின் வெளிப்பாடுகள் தான் அவருடைய படைப்புகள்.அவருக்கு ஒரு பொறுமையின்மையும் இருக்கிறது.எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும்,அதை இப்போதே செய்து விட வேண்டும் என்ற வேகம்.ஆதலால் கருத்து முக்கியமாகி போய் பாத்திர வார்ப்பும் நிகழ்ச்சி சித்தரிப்பும் சற்று பின் தங்கி விடுகின்றன

    புதுமைபித்தன் ,ஜெயகாந்தன் இருவர் மீதும் அழுத்தமான,மறுக்க கடினமான அவர் பார்வையை வைக்கிறார்.அதே போல அவர் மீது வைக்கப்படும் பார்வையை ,குறிப்பிட்ட சாதியின் பார்வையில் மக்களின் வாழ்க்கையை சோகம் கலந்த ஏமாற்றத்தோடு அணுகுகிறார் மற்றும்,அரசியலில்,வாழ்வில் நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் அந்த சாதிக்கு தீங்கானவை என்ற எண்ணத்தை கொண்டவை என்று சொன்னால் கோவம் வருவது ஞாயமா


     

ஹிந்தியின் கதை



  ஹிந்தி என்ற மொழியின் வரலாறை படித்தால் பல சாம்ராஜ்யங்களின் வரலாறுக்கு ஈடாக இருக்கிறது.மொழிக்காக கொலைகள்,பொய்கள்,சாதி மத சண்டைகள் என்று ஹிந்தியின் வரலாறு ஆங்கில தொலைகாட்சி தொடரான கேம் ஒப் த்ரோன்ஸ் ஐ விட சுவாரசியமாக இருக்கிறது.

  ஒரே மொழி பேசி வந்த பல கோடி மக்கள் மதத்தின் காரணமாக வேறு வேறு எழுத்துருக்களை பின்பற்ற வைக்கபட்டதால் நிகழ்ந்த கொலைகள் பல லட்சம்.இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் வேர்களை இந்தி-உருது  என்று மத அடிப்படையில் பிரிக்க துவங்கிய முயற்சிகளில் காணலாம்.

  ஹிந்தி மொழிக்கு உள்ள எழுத்துருக்களில் பிராமணர்கள் பின்பற்றிய  எழுத்துருவும் கயஸ்தா சாதியினருக்கு ஒரு எழுத்துருவும் இருந்தது.அதிக மக்களால் பயன்படுத்தப்பட்ட எழுத்துரு கயஸ்தா சாதியினரின் எழுத்துரு தான்.பல்வேறு பகுதிகளில் பேசப்பட்ட மொழிகளை,அதன் எழுத்துருக்களை ஒரு நூற்றாண்டிற்குள் உருத்தெரியாமல் அழித்த மொழி ஹிந்தி மற்றும் எழுத்துரு தேவநாகரி.பாப்பணி என்று அழைக்கப்பட்ட பிராமணர்களால் பயன்படுதப்பட்ட எழுத்துரு தேவநாகரியாக உருமாறி மற்ற எழுத்துருக்களை அழிக்க சாம தான பேத தண்ட வழிகள் அனைத்தையும் பயன்படுத்தி வெற்றிகரமாக அவற்றை அழித்தது

    •  http://www.linkedin.com/.../Difference-between-Hindi-Urdu...

      Basically Hindi and Urdu are the two names for the same language. Of course, Hindi is written in Devnagri and Urdu in Arabic script, both slightly modifi
      ed.

      The differences come up when users of each of these languages start bringing in more Persian/Arabic words on one hand and Sanskrit words on the other. Consequently, the rules of mother language apply in word formation.
  • Devnagri and Urdu in Arabic script, both slightly modified.

    The differences come up when users of each of these languages start bringing in more Persian/Arabic words on one hand and Sanskrit words on the other. Consequently, the rules of mother language apply in word formation.
  http://poojasaxena.wordpress.com/2011/05/05/from-a-line-of-traditional-scribes/

     He goes on to discuss the reasons for the disappearance of the script. Kaithi was one of the many variants of the Nagari (like Mahajani, Khatri), which became victims to the sanskritization of Hindi, which took place in the late 1800s in order to differentiate it from Hindustani and Urdu. There is also the theory that Nagari (which was earlier known as Bhabani, or the script of the Brahmins) became the dominant script as a result of caste politics between the higher caste Brahmins and the Kayasthas, who were gaining affluence.