Tuesday 24 June 2014

எழுத்தாளர் அசோகமித்திரன் தமிழ்நாட்டு யூதர்கள் தேமே என்று நிற்கும் கதாபாத்திரங்கள்


 அசோகமித்திரன் அற்புதமான எழுத்தாளர் என்பதை முழுவதுமாக ஏற்று கொண்ட அவர் கதைகளில் பலவற்றை படித்த வாசகன் என்ற முறையில் என் பார்வையை வைக்கிறேன்.

  அவரின் ஔட்லூக் பெட்டி தவறு என்று எனக்கு தோன்றவில்லை.அவர் மனதில் பட்டதை அவர் சொன்னார்.எழுதினார்.ஆனால் அவர் பேட்டி பெரும் தவறு என்று பலரும் வாதிடுவது மற்றும் அதன் கூடவே பேட்டிக்கும் அவர் எழுத்திற்கும் தொடர்பு கிடையாது என்றும் சாதிப்பது தான் ஆச்சரியம் அளிக்கிறது.
  மிக பெரும்பான்மையான அவர் கதைகளின் அடித்தளமே, அவர் ஔட்லூக் பேட்டியோடு முழுவதும் ஒத்து போவது புரியவில்லையா அல்லது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெறுப்புணர்வு, உள்நோக்கத்தின் காரணமாக அப்படி தோன்றுகிறது என்று சில நண்பர்கள் சொல்வது உண்மையா என்று விளங்கவில்லை

  இந்தியாவில் மிகவும் ஆணவம் பிடித்த அரசியல்வாதிகள்,தலைவர்கள்,அதிகாரிகள்,மனிதர்கள் யார் என்று பட்டியல் இட்டால் முதல் இடத்தில வருபவர்கள் சுப்ரமணிய சாமி,மணி ஷங்கர் ஐயர்,ஜெயலலிதா,பி சி சி ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் ,டி என் சேஷன் தான் நினைவுக்கு வருகிறார்கள்.


        என் வாழ்வில் நண்பர்களாக,மேல் அதிகாரிகளாக,ஆசிரியர்களாக,மருத்துவர்களாக,ராணுவ அதிகாரிகளாக,என் கீழ் பணி செய்யும் அதிகாரிகளாக,முற்போக்காளர்களாக,உறவினர்களாக,அதே தெருவில் வசிப்பவர்களாக,எழுத்தாளர்களாக ,கலைத்துறையில் இருப்பவர்களாக,உடன் மது அருந்துபவர்களாக,புரோகிதம் செய்ய வரும் குருக்களாக,கோவிலில் பணியில் இருக்கும் ஐயர்களாக   இதுவரை சந்தித்த பல்லாயிரக்கணக்கான பிராமணர்களில் சுப்ரமணிய சாமிகளையும்,ஜெயலலிதாக்களையும் தான் பெரும்பான்மையாக கண்டிருக்கிறேனே தவிர அசோகமித்திரனின் கதைகளில் வரும் சரோஜினியின் தந்தை,அண்ணன்களை அல்ல.

  பிராமண சமூகத்தில் பிறந்ததால் பெரும்பாலான கதைமாந்தர்கள் பிராமணர்களாக இருப்பதில் ஆச்சரியமோ தவறோ கிடையாது.ஆனால் அவர்களில் பெரும்பாலோர் யூதர்களின் நிலையில் துயரத்தோடு ,பயத்தோடு  இருப்பது தான் ஆச்சரியமான ஒன்று.

     சுப்ரமணிய சாமி , மணி ஷங்கர் ஐயர்,சேஷன் , தமிழில் அர்ச்சனை என்று கோவில் குருக்களிடம் சொல்லும் போது அவரிடம் இருந்து கிடைக்கும் பார்வை,முகநூல்,பதிவு பின்னூட்டங்களுக்கு  கிடைக்கும் பதில்கள் அனைத்தும் காட்டும் பிராமணர்களுக்கும் அசோகமித்திரன் கதைகளுக்கும் காத தூரம் இருப்பது தான் ஆச்சரியமான ஒன்று.மிக நுட்பமாக பல விஷயங்களை பதிவு செய்த எழுத்தாளர் தன சாதி என்று வரும் போது அவர்கள் அனைவரும் ஒடுங்கி,நடுங்கி வாழும் கதாப்பாத்திரங்கள் ஆக காட்டியது சரியா.

https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fn%2F%3Frajan.k.krishnan%252Fposts%252F10204104307557312%26comment_id%3D10204114555893514%26aref%3D130118495%26medium%3Demail%26mid%3Da08ac9dG5af313b324cbG7c1735fGb7G7904%26bcode%3D1.1402908527.Abn2P-ugVcKciJZX%26n_m%3Dpoovannan_g%2540hotmail.com%26d&email=poovannan_g%40hotmail.com

திரு ராஜன் குறை அவர்களின் பதிவில் நான் இட்ட சில பின்னூட்டங்களை ஒன்றாக பதிவு செய்கிறேன்
   https://www.facebook.com/rajan.k.krishnan/posts/10203910186144398?comment_id=10204005312002485


  • அவருடைய விடுதலை குறுநாவலில்

    அங்கு அனேக குடிசைகளில் தகப்பனார் வேனுகோபாலாக இருப்பார்,மகன் சாமுவேலாக இருப்பான் அல்லது மூத்த சகோதரன் ஜானாக இருப்பான்,தங்கை புருஷன் கந்தசாமியாக இருப்பார்.அந்த சேரி ஆரம்பத்தில் தாறுமாறாக தான் இருந்தது


    அந்தோணி குழந்தையாயிருக்கும் போதே பம்பீனாவின் தகப்பனுடன் வாழ வந்து விட்டாள்.இப்போது பம்பீனாவின் தகப்பனார் இறந்தாகி விட்டது.அந்தோணியின் அப்பா மட்டும் அங்கு வந்து பொய் கொண்டிருந்தார்

    இதில் எல்லாம் குறிப்பிட்ட சாதிகளை கிண்டல் செய்யும் போக்கு இல்லையா .ஒரு சாதி இப்படிதான் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் எழுதியதாக தெரியவில்லையா




       
  • விடுதலையில் இருந்து

    உனக்கு உன் சூழ்நிலையையும் மீறிய நல்ல வாசனைகள்,குணங்கள் இருந்தது.


    இந்த வரிகள் என்ன சொல்ல வருகின்றன

    அந்தோணி குழந்தையாயிருக்கும் போதே பம்பீனாவின் தகப்பனுடன் வாழ வந்து விட்டாள்.இப்போது பம்பீனாவின் தகப்பனார் இறந்தாகி விட்டது.அந்தோணியின் அப்பா மட்டும் அங்கு வந்து போய் கொண்டிருந்தார்

    சேரியில் வசிக்கும் ஒருவரை இப்படி எழுதுவது போல வேறு எந்த பெண்ணை பற்றி இதே போல எழுதி இருக்கிறார்



         
  •   நான் அப்துல் காதர் ஆக இல்லையே என்பதற்கான பதில் கூட ரொம்ப குழப்புகிறது
    9 குழந்தைகளின் தந்தையான பரசுராமையர் என்ன மிஸ்டர் உனிவெர்சா ,பில் கிளின்டனா,தோனியா
    அந்த பதிலை கேட்டவுடன் பம்பினா டேவிட் உருகி எனக்கு ஆறுதலா இருக்கணும்னு இது மாதிரி சொல்றீங்க என்று
    சொல்வதற்கு

    கதையில் பரசுராமையர் மற்றும் பம்பினா குடும்பம் இரண்டையும் ஒப்பிட்டால் இங்கு பம்பினா பக்கம் அன்தொனியில் இருந்து எல்அப்துல் காதர் வரை ஏமாற்றுகாரர்கள்,திருடர்கள்,பெண்களை அடிப்பவர்கள் .ஆனால் அங்கு

    பெண்ணுக்கு வேலை கேட்டு முதலாளியிடம் உத்தரவு தொனியில் பேசும் போது எந்த பொண்டாட்டியின் குழந்தை என்ற கிண்டலின் பதிலான பரசுராமையரின் உக்கிர பார்வையை தாங்க முடியாமல் தந்தையும் மகனும் கருத்து குறுகி போவது போன்ற
    அரசீற்றதிர்க்கு ,பாம்பினா அவர் அப்துல்காதராக நான் இல்லையே என்ற சொற்களை பெரும் பேராக எண்ணுவதற்கு சாதியை தவிர வேறு எது காரணம் என்று கதாசிரியர் நினைக்க வைக்கிறார்

  • அவருடைய மணல் நாவலுக்கும் outlook பேட்டிக்கும் உள்ள ஒற்றுமைகள் உணர்த்துவது எதை
    .நடுத்தரவர்க்க பிராமண ஆண்களின் மனநிலையை அவருடைய பெரும்பாலான கதைகள் அற்புதமாக அப்படியே கண் முன் கொண்டு வரும்.
    அவரவர் வாழ்வின் சூழலை தான் மிகுந்த நுட்பத்துடன் எழுத முடியும்
    .அதை அற்புதமாக செய்தவர் அசோகமித்திரன்.ஒரு பக்கத்து பார்வையை மிக அழகாக பதிவு செய்தவர்.ஆனால் அது ஒரு பக்க பார்வை அல்ல என்று சொல்வது ஏன்

    மணல் நாவலில் இருந்து

    மெடிக்கல் காலேஜ் அப்ளிகேஷன் என்ன ஆச்சு ?

    போட்டிருக்கு .... பாக்கணும் என்று அப்பா சொன்னார்

    பர்ஸ்ட் கிளாஸ் தானே ?

    பர்ஸ்ட் கிளாஸ் தான்.ஒரு "டி" வாங்கி இருக்கா ....அப்பா பூணலை எடுத்து காண்பித்தார்.மூணு டி வாங்கினாலே இதுக்கு இல்லேன்னுடுவான் .ஒரு டி க்கெல்லாம் அவ்வளவு சுலபமா

    இட ஒதுக்கீட்டை பற்றிய இந்த பார்வையை பிராமண பார்வை என்பதில் தவறு என்ன.

    மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் கல்வியை தொடர முடியாத சரோஜினி(நன்றாக படிக்கும் மாணவி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் வேறு எந்த கல்லூரியிலும் சேராமல் படிப்பை நிறுத்தி கொள்ளும் நிலை அன்றைய சூழலில் கூட நூறில் ஒன்று இருக்குமா ) ,வேறு சாதியில் திருமணம் செய்து விட்டு குடும்பத்தை விட்டு விலகி விட்ட சின்ன அண்ணன்,திருமணம் செய்து கொள்ளாத பெரிய அண்ணன் என்று வேறு சாதியில் துணை தேடியதை அன்றைய,இன்றைய பொதுபார்வையான பெரும் தவறாக காட்டுகிறது என்று சொல்வது தவறா

  

   
  • என்றும் இன்று நாவலில் இருந்து
    அப்போது அந்தப்படம் உண்மை நிலையை பிரதிபலித்தது என்று ஒப்பு கொள்கிறீர்கள் -"
    இல்லை.திரைப்படங்கள் உண்மை நிலையில் சில சிதறல்களை தான் பிரதிபலிக்க முடியும்.சாவித்திரி பிழைகள் மலிந்த மிக மிகவும் சாதரணமான படம்.ஆனால் தடை செய்ய வ
    ேண்டும் என்று வற்புறுத்துவது சரியாகாது என்று தான் சொன்னேன்

    அப்படியா?சாவித்திரி படத்தினோட புரட்சி நோக்கை நீங்க ஒத்துண்டீங்கன்னு நினைச்சோம்.

    அதிலே என்ன புரட்சி பார்த்தீங்க ?

    சாதி மதம் பார்க்காத காதல்,பொருந்தாத திருமணம் எதிர்ப்பு -

    இதுகளை வெச்சுண்டு தானே ஐம்பது வருஷமா இங்கே சினிமா எடுத்துண்டு வராங்க ?

    இல்லே,தற்காலத்துக்கு பொருந்தும்படியான முன்னேற்ற கொள்கைகளை நீங்க வரவேர்பீங்கன்னு எதிர்பார்த்தோம்.

    இதுலே எந்த காலத்திற்கு பொருந்துற முன்னேற்ற கொள்கைகங்கா இருக்குன்னு சொல்றீங்க?கணவன் ஒரு நியாயத்திற்கு கட்டுப்பட்டவன்.அவனுக்கு உள்ள எளிய வாழ்க்கையிலே நிறைவையும் சந்தோசத்தையும் பாக்கிறவன்.அவன் கல்யாணம் பண்ணிண்ட பொண்ணு நிச்சயம் அவன் கிட்டே நிறைவையும் சந்தோசத்தையும் காலபோக்கிலே கண்டுகொள்ளப் பக்குவம் அடைந்சுடுவா.ஆனால் அவள் மனதை களைத்தவன் ரெண்டு நாள் கூட ஒழுங்கா அவளை வெச்சுண்டு குடும்பம் நடத்த மாட்டா.நீங்க இந்த ஒரு கணத்தோட வாழ்க்கை முடிஞ்சு போயடுறதுன்னு எதுவும் செய்யலாம்.எப்படியும் இருக்கலாம்.ஆனால் இன்னிக்கு கட்டி பிடிச்சுண்டு புரண்டுண்டு நாளைக்கு நடுதெருவில நிக்கறது அநியாய புரட்சியா தோணறது.அதுவும் பாவம் அந்த பொண் ஊர் உலகம் தெரியாத கிராமப் பொண்ணு.அவளை எல்லா வக்கிரங்களும் பழகி போன ஒருத்தன் தன் சுகத்துக்கு அவளை வசியப்படுத்தி பயன்படுத்தி கொள்ளறது எந்த புரட்சியில் சேர்க்க முடியும்?

    அப்ப நான் வரேங்க."

    பேட்டி முடிஞ்சாச்சா?உள்மனதின் கிடைச்சுடுத்தா உங்களுக்கு ?இப்போ திடீர்னு 'சாவித்திரி "படம் எப்படி உங்களுக்கு நினைவு வந்தது?

    போன வருஷத்தில வந்த படங்களிலே பரபரப்பு ஏற்படுத்தியவை எல்லாம் மறுபரிசீலனை செய்யறதுன்னு திட்டம்.நீங்களும் கொஞ்சம் பரபரப்பா எழுதினீங்கன்னா மக்கள் நினைவில் இருப்பீங்க

    லவ் ஜெஹாத் என்று முழக்கமிடும் சங்க பரிவாரங்களுக்கும் ,நாடக் காதல் என்று வெறியேற்றும் சாதிசங்கங்களுக்கும் கதையில் வரும் எழுத்தாளரின் பேட்டிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா


       
  •   புனர்ஜன்மம் குறுநாவலில் இருந்து

    சீதா பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தால்.


    நான் சொல்றேனேன்னு தப்பா நினைசுகாதீங்க அம்மா.நீங்களும் நல்ல குளம் கோத்திரத்திலே இருந்து வரீங்க.எல்லாரும் மரியாதைப்பட்டவங்க ,அந்த அமா வந்து சதம் போட்ட்டப்போ இவரு எவ்வளவவு சிறுத்து போயிட்டாரு தெரியுமா?

    என்னன்னு சத்தம் போட்டாங்க?

    அதை நான் என்னம்மா சொல்றது?உங்களுக்கே தெரியாதா ?

    ரொம்ப நாள் இவரு கல்யாணம் ஆனவருன்னே எனக்கு தெரியாது.

    அது எப்படிம்மா தெரியாத போய்டும்?சரி,ஏதோ தொடர்பு எற்பட்டுடுச்சு .ஆனா விவரம் தெரிஞ்சவுடனே நீங்க ஒதுங்கிடனும்,இல்லியா?

    சீதா பதில் பேசவில்லை.

    அந்த அம்மா ரொம்ப வண்டை வண்டையாகத் திட்டினாங்க.உங்க ஜாதிபேரு சொல்லி அந்த தேவடியாளை அவங்க உறவுகாரங்க வீட்டு தெருவிலே துணி இல்லாம துரத்தி அடிக்கிறேன்னாங்க.இது எதுக்கும்மா உங்களுக்கு ?உங்க ஜாதியிலேயே ஒரு நல்ல பிள்ளையாண்டானாப் பார்த்து குடியும் குடித்தனமா இல்லாம....இவரோ பிள்ளை குட்டிகாரரு

    கதையில் (யூதர்களின் நிலையில் இருக்கும் சாதியில் பிறந்த)உடனே சீதா தற்கொலை செய்து கொள்கிறாள்.

        
         
  • அசோகமித்திரன் படைப்புலகம் என்ற ஞானியின் புத்தகத்தில்
    அசோகமித்திரனின் பேட்டி


    தமிழ் இலக்கிய உலகிலும் சமூகவியல் ரீதியிலும் சில "புனிதமான பசுக்கள் "உண்டு.புதுமைபித்தன் ஒரு "புனிதமான பசு".நீங்கள் அவர் பற்றி தெரிவித்த அபிப்பிராயம்,உங்களை சாதி வெறியராக கருதி விமர்சிக்கும் அளவிற்கு கொண்டு போய் இருக்கிறது.புதுமைபித்தன்,மணிக்கொடி எழுத்தாளர்கள்,ஜெயகாந்தன் பற்றி எல்லாம் உங்கள் மதிப்பீடு என்ன?

    எனக்கு தமிழில் இலக்கிய தாகம் ஏற்படுத்திய முதல் அனுபவங்களில் புதுமைப்பித்தனின் "சித்தி "சிறுகதையும் ஒன்று.ஆனால் பல தமிழ் விமர்சகர்கள் அவரை என்ன காரணங்களுக்காக புகழ்கிறார்களோ அவற்றில் பலவற்றை என்னால் ஒப்பு கொள்ள முடியவில்லை.அவருடைய கோபம்,சீற்றம்,கண்டனம் எல்லாவற்றுக்கும் அடியில் ஒரு அலட்சியமும் ,கேலியும் கிண்டலும் இருப்பதை யாரும் காண முடியும்.நகைச்சுவை மனித நேயத்தில் எழுவது.கிண்டல் அப்படி அல்ல

    ஜெயகாந்தனுக்கு உலகுடன் ஒரு திட்டவட்டமான உறவு இருக்கிறது.அந்த உறவின் வெளிப்பாடுகள் தான் அவருடைய படைப்புகள்.அவருக்கு ஒரு பொறுமையின்மையும் இருக்கிறது.எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும்,அதை இப்போதே செய்து விட வேண்டும் என்ற வேகம்.ஆதலால் கருத்து முக்கியமாகி போய் பாத்திர வார்ப்பும் நிகழ்ச்சி சித்தரிப்பும் சற்று பின் தங்கி விடுகின்றன

    புதுமைபித்தன் ,ஜெயகாந்தன் இருவர் மீதும் அழுத்தமான,மறுக்க கடினமான அவர் பார்வையை வைக்கிறார்.அதே போல அவர் மீது வைக்கப்படும் பார்வையை ,குறிப்பிட்ட சாதியின் பார்வையில் மக்களின் வாழ்க்கையை சோகம் கலந்த ஏமாற்றத்தோடு அணுகுகிறார் மற்றும்,அரசியலில்,வாழ்வில் நடைபெறும் மாற்றங்கள் அனைத்தும் அந்த சாதிக்கு தீங்கானவை என்ற எண்ணத்தை கொண்டவை என்று சொன்னால் கோவம் வருவது ஞாயமா


     

No comments:

Post a Comment