Thursday 7 August 2014

சில கோவில்களில் மேலாடை மறுக்கபடுவதும்/காலாடை தடையும்   கூட தண்டனைக்குரிய குற்றமாக வேண்டும்



மறுபடியும் மறுபடியும் பணிக்கு உள்ள சீருடையோடு ,தனியார் கேளிக்கை விடுதிகளில் வேட்டி அணிந்ததால் மறுப்பு தொடர்புபடுத்தி பேசப்படுகிறது.

       குறிப்பிட்ட தொழில் செய்பவர்களுக்கு இருக்கும் உடை கட்டுப்பாடுகளுக்கும் கேளிக்கை விடுதிகளுக்கு வருபவர்களுக்கு இருக்கும் உடை கட்டுப்பாடுகளுக்கும் வித்தியாசம் உண்டு

      காவலர் என்றால் குறிப்பிட்ட உடை,செவிலியர் என்றால் குறிப்பிட்ட உடை,நீதிபதி என்றால் குறிப்பிட்ட உடை என்பதில் தவறு எங்கே வருகிறது.குறிப்பிட்ட உடைகளை தவிர மற்ற உடைகளை நீதிபதிகள் அணியலாம்,சில உடைகள் நீதிமன்றத்திற்கு தகுதியானவை அல்ல என்று இருந்தால் அது தவறு தானே.குறிப்பிட்ட வேலைக்கு  குறிப்பிட்ட சீருடை  மட்டும் தான் அணிய  வேண்டும் என்பதற்கும் குறிப்பிட்ட இடங்களில் நுழைய சில உடைகள் அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்பதற்கும் வித்தியாசம் இல்லையா

         குறிப்பிட்ட ஆடை  சில இடங்களில்  நுழைய தகுதியான ஆடை  கிடையாது என்பதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் /தவறாக எண்ணாமல்  இருக்க வேண்டும் .,அதில் தவறு இல்லை என்று வாதிடுவோர்  மகாத்மா காந்தியிடம் இந்த ரயில் பெட்டி உங்களுக்கு ஆனது கிடையாது என்று தென்னாப்ரிக்காவில் வெள்ளையர் சொன்னதும் தவறு இல்லை என்று வாதிடுவார்களா

 குறிப்பிட்ட ஆடை அணிந்தவர்களுக்கு மட்டுமான  பிரைவேட் கிளப் போல குறிப்பிட்ட நிறம் கொண்டவர்களுக்கு மட்டுமான பிரைவேட் கோச்


      ரயில்வே பணியாளர் மட்டும்/ராணுவ வீரர்/மகளிர் மட்டும் இருக்கும் ரயில் பெட்டி எனபது தவறு கிடையாது.ஆனால் வெள்ளையர் மட்டும்,குறிப்பிட்ட சாதியினர் மட்டும் நுழைய கூடிய கோவில் வாயில்,குறிப்பிட்ட உடை அணிந்தவர் மட்டும் வரக்கூடிய கிரிக்கெட் கிளப் எனபது தண்டனைக்குரிய குற்றம் தான்


.
கறுப்பர் வெள்ளையரோடு ஒன்றாக ரயிலில் பயணம் செய்ய கூடாது,ஒன்றாக வசிக்க கூடாது,ஒன்றாக படிக்க கூடாது என்பதை போன்ற வெளிப்பாடு தான் சூட் அணிந்தவர் வேட்டி அணிந்தவரோடு ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவோ,மது அருந்தவோ கூடாது என்ற வாதமும்

எந்த மரபுக்கும் பின் இருப்பது,அடிப்படையாக இருப்பது discrimination தான்.

கோவில்களில் சட்டை இல்லாமல் போக வேண்டும் என்பதற்கு அடிப்படை சாதியை தெரிந்து கொள்ள தான்.சாதியை பார்த்து தனி மரியாதை,உணவுக்கு கூப்பன் இன்றும் உண்டு.சட்டையை மட்டும் கழட்டி விட்டு பூணூலை (பிராமண,க்ஷத்ரிய,வைஷ்ய வர்ணத்திற்கு பூணூல் உண்டு,கோத்திரமும் உண்டு )அனுமதிப்பதன் பின்னணி வேறு என்ன
வேட்டி இங்கு அனுமதிக்கப்படும் அதே வேளையில் பான்ட் ,மேல்சட்டை மறுக்கப்படும் கோவில்களில் அவற்றிற்கு அனுமதியும் கிடைக்க வேண்டும்

இங்கு வேட்டிக்கு கேட்கபடுவது இட ஒதுக்கீடூ.தனியார் கிளப்போ ,கல்லூரியோ தமிழ்நாட்டில் வேட்டிக்கு இட ஒதுக்கீடு கேட்பதில் தவறு எங்கே வருகிறது.வேட்டி மட்டுமே அனுமதிக்கப்படும் சில கோவில்களில்  பேண்டுக்கும் இட ஒதுக்கீடு கேட்பது ஞாயம்.பலர் கூடும் இடத்தில குறிப்பிட்ட பாலினத்தவர்,மதத்தவர்,நிறத்தவர் உணவு உண்பவர்கள் ,உடை உடுத்துபவர்களுக்கு அனுமதி மறுப்பது அவர்களின் உடை,நிறம்,உணவு அங்கு அவர்கள் அமர தகுதியானவர்கள் அல்ல,அவர்களின் உடை,உணவு,நிறம் கீழ்த்தரமானது என்பதை தான் வலியுறுத்துகிறது.