Thursday 10 October 2013

சதவீத கணக்குகளும் சங்க பரிவாரமும்

 பள்ளியில் பயின்ற காலத்தில்  என் வீட்டின் அருகில் ஹிந்து முன்னணி ,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆர் எஸ் எஸ் பொது கூட்டங்கள் அடிக்கடி நடக்கும்.பள்ளி காலத்தில் நான் வி எச் பி மணியனிடம் மகாபாரதம் பற்றி நடந்த போட்டியில் பரிசு கூட பெற்றிருக்கிறேன்

   விஜயகாந்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே சங்க பேச்சாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள்.
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியாவில்
 இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்

  இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்

எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூடங்களில் பல லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
 சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன
 பெண்கள் எளிதில் மதம் மாறி விடுவார்கள்,லவ் ஜெஹாதில் விழுந்து விடுவார்கள் என்பதால் பலர் அவர்களை கருவிலேயே கொன்று விடுகின்றார்கள் என்றும் கூட ஹிந்டுத்வர்கள் வாதிடலாம்
மற்ற மதங்களோடு ஒப்பிடும் போது/மதமாற்றிகளின்,அவர்களின் கைக்கூலிகளின் தாக்கம் அதிகமாகவும் ஹிந்டுத்வத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடும் போது சங்கம் வலுவாக ஆட்சியை பிடிக்கும் நிலையில்,பல்லாண்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் லட்சகணக்கில் பெண் குழந்தைகள் குறைவது ஏன் என்பதை பற்றி சங்கம் என்று ஆராய்ச்சி செய்யும்.

http://www.youngmuslimdigest.com/society/06/2008/census-of-india-reading-between-the-lines/

சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா
 

2 comments:

  1. http://www.socialeconomics.org/Papers/Mitra4A.pdf

    According to the Census of India (2011), 7 million fewer girls were born among children
    0-6 years of age. Prenatal sex determination coupled with sex selective abortions largely account
    for this skewed sex ratio in India. The sex ratio is particularly low among couples whose first
    born is a daughter compared to couples who have a boy as their first born (Jha et al., 2011). Son
    preference and neglect of girls are occurring even among the educated and affluent classes in
    India and are not correlated with economic development, affluence, or literacy levels. The low
    status of women and patriarchal values are intensifying this trend in India. Son preference has
    serious negative effects on women’s health, fertility choices, and future well being of girls.

    ReplyDelete
  2. அய்யா தெளிவான கண்ணோட்டத்தடன் எழுதிய கட்டுரை நன்றாக இருக்கிறது....சரியான யதார்த்தத்தை கேள்வி யோகக் கேட்டுள்ளீர்கள்.விளக்கமாகச்சொல்லப்போனால் மன்னிக்கவும் ...வைஸ்யரும் ஸுத்ரரும் பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் கண்ணன் சொல்வதாகஇருக்கிறது..ஆகவே மகளிருக்கு மரியாதை கிடையாது இந்து மதத்தில்...இதுவும் காரணம்..

    ReplyDelete