Thursday 3 October 2013

மோதியை ஏன் முஸ்லிம்கள் புகழ வேண்டும்

    நாம் ஐந்து நமக்கு இருபத்தியிந்து என்ற முஸ்லிம்களை உயர்த்தும் தத்துவங்களை தேர்தல் நேரத்தில் உருவாக்கி மத நல்லிணக்கத்தை வளர்த்தவரை புகழ்வதில் தவறுண்டோ

      சியாவோ சுன்னியோ போராவோ அஹ்மேடியாவோ ஒருவருக்கு கூட அவர் ஆட்சியில் MLA சீட்,மந்திரி பதவி தராமல்(முஸ்லிம்கள் குஜராத்தில் ஒன்பது சதவீதம்)அனைவரையும் ஒன்றாக நடத்துவதில்,நடத்தியதில் இருந்தே அவர் மேன்மையை அறிந்து வாழ்த்துவது மிக சரி.

        எடியுரப்ப ஒரு முஸ்லிம் கூட பா ஜ கா நிறுத்தி வைக்கவில்லை என்றாலும் ஒருவரை மந்திரியாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆக்கவும் செய்தாரே அவரை போன்ற போலி இந்திதுவவியாதியாக இல்லாமல் உண்மையான இந்திதுவவியாதியாக இருக்கும் மோடியின் புகழை ஸஃபர் ஸரேஷ்வாலா பாடுவது பெருமையாக உள்ளது.

மத்திய அரசாங்கம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணாக்கர்களுக்கு வழங்கும் உதவி தொகையை வழங்க மாட்டேன் என்று கொள்கையாக ஆள்வதே அவரின் சிறுபான்மை முன்னேற்றத்திற்கான சான்று அல்லவா

2007 தேர்தலில் குசெர் பி-சொரபுட்டின் போலி என்சௌண்டேர் (குசர் பி கணவனோடு சேர்த்து கடத்தப்பட்டு,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டவர்)வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொராபுட்தீனை என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பொது கூட்டத்திலும் கேட்டு கொலை கொலை என்ற கூச்சல்களுக்கு அதை தான் செய்தோம் என்று பெருமிதமாக பேசியவர் அல்லவா மோடி .

சொராபுட்தினோடு அவர் மனைவியை கடத்தி,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்ற மோடியை கடவுளாக வழிபட்ட காவல்துறையினரை பாராட்டிய மோடியை இஸ்லாமியர்கள் பாராட்டாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அப்பாவி பெண்ணாக இருந்தாலும் கணவன் சந்தேகத்துக்குரிய குற்றவாளியாக இருந்தால் அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,அந்த வன்செயல்களை புகழ்ந்து வோட்டு வாங்கி வெற்றி பெற முடியும் என்று காட்டியவரை இஸ்லாமியர் மட்டுமல்ல அகில உலகமும் அல்லவா போற்றும்,போற்ற வேண்டும்

       டெல்லியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நாடே பொங்கிய(நிர்பயா வழக்கு ) பெண்ணின் ஆண் நண்பர்  சந்தேகத்துக்குரிய தீவிரவாதியாகவோ ,அல்லது முன்னாள் குற்றவாளியாகவோ அல்லது இஸ்லாமிய பெயர் கொண்டவாரகவோ இல்லாமல் போனார்.
அப்படி இருந்து இருந்தால் குசெர் பி பாலியல் வன்முறை/கொலை வழக்கு பற்றிய கேள்விகளுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் மாநிலம் முழுவதும் பொது கூட்டம் போட்டு நியாயபடுத்திய மோடி போல நிர்பயாவிர்க்கு ஏற்பட்ட கொடுரம் தேவையான ஒன்று,தீவிரவாதத்திற்கு எதிரான ஒன்று, தீவிரவாதிக்கு,அவர் தோழிக்கு கிடைத்த சரியான தண்டனை என்று மோடி ஆதரவாளர்கள் குதித்திருப்பார்கள்.

 அப்படி இருந்திருந்தால் வன்செயலில் ஈடுபட்டவர்கள் ,அதற்க்கு உத்தரவிட்டவர்கள் மந்திரிகளாக ,மற்ற மாநில பொறுப்பாளர்களாக  மோடியின் கருணையால் பொறுப்பேற்று கொண்டு இருப்பார்கள்.அப்படிப்பட்ட கருநாமூர்த்தியை மக்கள் புகழ்வதில்,பார்த்து பூரிப்படைவதில் ஆச்சரியம் எது
 
     ஒரு அப்பாவி பெண் கடத்தப்பட்டு,பல நாட்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற விசாரணையை கிண்டல் செய்தவர்.தகுந்த தண்டனை கிடைத்திருக்கிறது என்று பெருமிதம் கொண்டவர் மேல் பாராட்டுக்கள் பல தரப்பிலிருந்தும் வந்து குவிவதில் ஆச்சரியம் ஏது

No comments:

Post a Comment