Friday 27 September 2013

பிரதமர் பதவி என்ன கல்கி அவதாரமா



   மது கோடா,தேவ கௌடா போல யார் வேண்டுமானாலும் தேர்தலில் வெற்றி பெற்ற எம் பி க்கள் ஆதரவு இருந்தால்  பிரதமர் ஆகலாம்.
    ஒரு தனி மனிதர் குறிப்பிட்ட பதவியில் அதுவும் நேரடி தேர்தல் இல்லாத முறையில் வெற்றி பெற்ற எம் பி க்கள்/கட்சிகளின் ஆதரவில் பிரதமர் ஆனால் பல வியத்தக்க மாற்றங்களை புரிவார் என்ற சாத்தியங்கள் இல்லாத நம்பிக்கை எப்படி உருவானது /ஏன் உருவாக்கபடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை
   அமெரிக்க ஈராக் யுத்தத்தில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்க வாஜ்பாய் தலைமையிலான அரசு முடிவு செய்து பின் பாராளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பால் பின்வாங்கியது
   நானூறு எம் பி க்கள் இருந்தாலும்,மக்களிடம் செய்திகளை இன்றுபோல உடனே கொண்டு செல்லும் வசதிகள் இல்லாத நிலை நிலவிய காலத்தில்/ நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசின் முடிவுகளுக்கு ஒத்து ஊத்தி கொண்டு இருந்த காலங்களில்/,கட்சியில் ஒரு கேள்வி எதிராக கேட்க்கும் கேட்க்கும் நிலையில் கூட யாரும் இல்லாத நிலையில் இருந்த ராஜீவ் கூட மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிட முடியவில்லை.மக்களுக்கு நேரடியாக பலன் தர கூடிய அரசுகள் மாநில அரசுகள் தான்
    குறிப்பிட்ட தனி மனிதர் பிரதமர் ஆனால் காவேரி பிரட்சினையில் ஞாயம் கிடைக்கும் ,அனைத்து மாநிலங்களும் சமமாக நியாயமான முறையில் நடத்தப்படும் என்ற நம்பிக்கை எப்படி  வருகிறது

    காவேரிக்கு சென்று விட்டோம்,ஹோகேநேக்கள் குடிநீர் திட்டத்திற்கு எதிராக போராடிய எடியுரப்பா அன்றைய நிலையில் பா ஜ க வின் முதலவர் வேட்பாளர்.பிரதமர் தன்கட்சியின் முதலவர்களை ,மாநில தலைவர்களை மிரட்டி தமிழகத்திற்கு ஞாயம் கிடைக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கை எந்த அடிப்படையில் வருகிறது.
   உச்ச நீதிமன்றத்தின்  வாக்கு பதிவு செய்யும் போது இருக்க வேண்டிய none of the above தீர்ப்பு ஞானி அவர்களின் கட்டுரையில் உள்ள பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்தப்படுவது தவறு என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு என்றும் கூறலாம்.

நம் தேர்தல் ம
ுறை நேரிடை தேர்தல் முறை கிடையாது.நாம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்.எம் பி க்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை அது.
மக்கள் போடும் none of the above குறிப்பிட்ட தொகுதியை சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்தா ,இல்லை பிரதமராக முன்னிருதப்படுபவரை/படுபவர்களை எதிர்த்தா என்பதை புரிந்து கொண்டால்,பிரதமர் வேட்பாளர் என்று முன் நிறுத்தப்படுவது சட்டப்படி தவறு எனபது புரியும்

மோடி எனக்கு வேண்டாம் என்று none of the above என்ற பொத்தானிற்கு விழும் வோட்டுக்களை எடுத்து கொள்ள முடியுமா.அப்படி எடுத்து கொள்வது சரி என்றால் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன் நிறுத்துவதை நம் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது என்று கூறலாம்.எதிராகவோ ,ஆதரவாகவோ விழும் வோட்டுக்கள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.


 இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள அரசு நிறுவனங்களில் தொழிற்சங்க தேர்தல்களில் அந்தந்த பகுதிகளுக்கான உறுப்பினர்களை வாக்குசீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு.அப்படி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்வார்கள்.இதே தான் நம் நாட்டின் சட்ட அமைப்பின் கீழ் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையும்
பிரதமர் மீது திடீரென்று அவர் கட்சிக்காரர்களே கூட அதிருப்தி கொண்டு அவரை நீக்கி விட்டு இன்னொருவரை பிரதமராக பதவியில் அமர்த்தலாம்.மக்களிடம் என்னை பிரதமர் என்று சொல்லி வோட்டு கேட்டீர்கள்.அதனால் நீங்கள் என்னை நீக்க முடியாது,கட்சியை உடைக்க முடியாது,வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க முடியாது என்று யாரும் கூற முடியாது.

தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் வாக்காளனின் உரிமை தன் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டுமே என்று உச்ச நீதிமன்றம் ஆணித்தரமாக தீர்ப்பளித்துள்ளது.

நம்முடைய எம் பி க்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டு 6 மாதத்திற்கு ஒருவரை,அல்லது பத்து நாட்களுக்கு ஒருவரை பிரதமர் ஆக்குவதையும் சட்டம் அனுமதிக்கிறது.
நாம் வோட்டு போட்டு அதனால் தேர்ந்தேடுக்கபட்ட எம் பி பதவியை ராஜினாமா செய்து விட்டால்,அல்லது சமீபத்திய தீர்புகளின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ,மரணமடைந்தால் மறு தேர்தல் தான் ஒரே வழி.அது தான் நம் அரசியல் அமைப்பு.
ஆனால் பிரதமர் ராஜினாமா செய்தால் மறு தேர்தலா,அல்லது மற்றொருவரை எம் பி க்கள் பிரதமர் ஆக்குவார்களா

 
எம் பி பதவி ஆளுமை வாய்ந்தது.அவர்களின் உரிமை பிரதமரை தேர்ந்தெடுப்பது.மக்களுக்கு உள்ள உரிமை தங்கள் தொகுதி எம் பி யை தேர்ந்தெடுப்பது மட்டும் தான் என்பதை வலியுறுத்தும் இந்த தீர்ப்பு பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது என்றும் எடுத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment