Wednesday 11 September 2013

அமைதிப்படை மணிவண்ணனும் அத்வானியும்



   கடந்த சில மாதங்களாக பா ஜ க வில் நடந்து வரும் காட்சிகள் அச்சு அசல் அமைதிப்படை படத்தில் தேர்தலில் மணிவண்ணனால் நிறுத்தி வைக்கப்பட்ட சத்யராஜ் தேர்தல் முடிவுகள் வர வர நடந்து  கொள்ளும் /அவரை  சுற்றி  இருப்பவர்கள் நடந்து  கொள்ளும் காட்சிகளை ஒத்திருக்கின்றன

   அமைதிப்படை படத்திலாவது தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டு   வெற்றி பெற்றதால் அனைவரையும் தூக்கி எறிகிறார் சத்யராஜ்.மோடி அப்படி கூட கிடையாது.
  ராப்ரி தேவி போல திடீரென்று நேரடியாக மணிவண்ணனால் மன்னிக்கவும் அத்வானியால் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்டவர்.ராப்ரி தேவியின் திடீர் முதல்வர் நிகழ்விலாவது கட்சியில் ,தேர்தெடுக்கப்பட்ட எம் எல்  ஏக்கள்,முன்னாள் முதல்வர்கள்,மந்திரிகளின் எதிர்ப்பு அவ்வளவு கிடையாது.ஆனால் இங்கு நேரடியாக அனைவரின் எதிர்ப்பையும் மீறி மணிவண்ணின் தயவினால் முதல்வராக ஆனார் மோடி

   முதல்வரான இருக்கும் போது நடைபெற்ற  ஆட்சியின் பெரும்சாதனையான குஜராத் கலவரங்களுக்கு பின் இன்று அவரின் ஜட்டியை துவைக்க சண்டை போடும் அதே கூட்டம் அவரை பதவியை விட்டு விலக வைக்க முயற்சித்தது.அன்று அவரை காப்பாற்றி முதல்வராக தொடர்ந்து இருக்க முக்கிய காரணம் மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி

  
    கட்சியை மட்டும் அல்ல இரண்டாம் இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் அல்லவா சேர்த்து அடிக்கிறார் மோடி
 
    அரசியலில் நன்றி இல்லாத தலைவர்களை பார்த்திருக்கிறோம்.ஆனால் நன்றி இல்லாத தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி பா ஜ கா தான்.நெசமாலுமே பார்ட்டி வித் எ difference தான்

    இந்தியாவில் உள்ள பல நூறு கட்சிகளில் எந்த கட்சியை எடுத்து கொண்டாலும் (நம்ம கார்த்திக்குக்கு கூட ஆதரவா சில பேர் இருப்பாங்க)கட்சியின் முக்கியமான தலைவரை,ஐம்பது ஆண்டுகள் கட்சியை வளர்த்தவரை  தூக்கி எறியும் நிலை வேறு எந்த கட்சியிலும் தென்படவில்லை.
  என் டி ஆர் ஐ தூக்கி விட்டு மருமகன் ஆட்சியை பிடிக்கும் போது கூட அவர் சிவபார்வதியின் கைப்பாவையாக  மாறி விட்டார் ,அவரை விட்டு விட்டால் உடனே திரும்பி ஆட்சியை தருவோம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.     .கட்சியிலும்  ,பொதுமக்களிடமும் அவருக்கு தொடர்ந்து ஆபரிதமான ஆதரவு இருந்தது.
  அமைதிப்படை மணிவண்ணன் மன்னிக்கவும் அத்வானி ஜட்டி  துவைக்க போட்டி போட போகிறாரா அல்லது அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா  என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்

2 comments:

  1. வல்லபாய் படேலுக்கு தான் கட்சியின் பெரும்பான்மை ஆதரவு இருந்தது.ஆனால் மிதவாதி வந்தால் தான் இந்தியா போன்ற நாட்டிற்கு நல்லது என்று காந்தி விரும்பியதால் மறு பேச்சின்றி பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகினார் படேல்.
    இந்திய அரசியலில் பிரதமருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை.அதிக ஆதரவில் வெற்றி பெற்ற பிரதமர்களே மாநிலங்களில் மூக்கை நுழைக்க மிகவும் கஷ்டப்பட்டனர்.
    உச்சநீதிமனறம் மாநில அரசுகளை 356 பிரிவின் கீழ் கலைப்பதை மிகவும் கடினமாகிய பின்னர்,கூட்டணி ஆட்சிகளின் கீழ் மாநில முதல்வர்களின் சக்தி அதிகமாக தான் ஆகி இருக்கிறது
    நேரடியாக மக்களுக்கு உதவ முடியும் என்றால் முதல்வர் பதவி பிரதமர் பதவியை விட சக்தி வாய்ந்தது.வெளியுறவு கொள்கை,மந்திரிசபையின் ஒப்புதலோடு அண்டை நாடுகளுடன் போர் செய்ய முடிவு எடுக்கும் உரிமை ,பெரிய அளவில் contract எனபது தான் பிரதமர் பதவிக்கு இருக்கும் அதிகாரங்கள்.நல்ல முதல் அமைச்சர்களை,மாநில தலைவர்களை கொண்ட மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட பல படிகள் முன்னேறி உள்ளது எதை காட்டுகிறது.
    எமேர்கேன்சி கொண்டு வந்தால் தான் பிரதமர் சக்தி வாய்ந்தவர்.
    தன்னை முதல்வர் என்ற பெரும்பொறுப்பில் நேரடியாக உட்கார வைத்தவர்,குஜராத் கலவரங்களுக்கு பிறகு மோடியை நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுந்த போது அதை கட்சியில் தனக்கு இருந்த ஆதரவினால் உடைத்தவரை மதிக்காமல் போட்டு மிதிப்பது என்ன மாதிரி குணம்.ராப்ரி தேவி கூட மக்களால் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    ஜ்யோதிபாசு 23 ஆண்டுகள் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.அவரை பிரதமராக பதவி ஏற்க சொல்லி 1996 இல் மாநில கட்சிகள் அழைத்தும் கட்சியின் பொது குழு வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டதால் பிரதமர் அகும் வாய்ப்பை மறுத்து விட்டார்.
    அசாம் முதல்வர் தருண் கோகோய்,டெல்லி முதல்வர் ஷீலா டீக்ஷிட் ,மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் மூன்று முறை தொடர்ந்து மக்களால் முதல்வராக வெற்றி பெற வைக்கப்பட்டவர்கள்.திருபுரா முதல்வர் சர்கார் நான்கு முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றவர்.இதனால் அவர்கள் சிங்கை விட,ப சிதம்பரத்தை விட,ஷிண்டேவை விட பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள் என்று ஆகி விடுவார்களா.பல தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத நிலையில்,ஒருவரின் கீழ் இன்னொருவர் வேலை செய்வது கடினம் என்பதால் தான் நேரு குடும்பத்தின் தலைமையை அனைவரும் தேடி ஓடுவது

    ReplyDelete
  2. சோனியாவோ,கருணாநிதியோ,ஜெயாவோ,மாயாவதியோ,முலயமோ அவர்களை தலைவர்களாக ஏற்று கொண்ட தொண்டர்கள் யாரும் தேர்தல்களில் வெற்றிவாய்ப்புகளை இழந்ததால் அவர்களை கை கழுவி விட்டு அவர்களின் தயவால் பதவிக்கு வந்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு கொண்டாடுவது கிடையாது.ஆனால் பா ஜ கா வில் கதை அப்படியா.
    ரத யாத்திரை புகழ் அத்வானிக்கு அவரை வானளாவ புகழ்ந்து கொண்டிருந்த வாய்களே இப்போது கொடுக்கும் வசவுகள் என்னை போன்ற போலி மதசார்பின்மைவாதிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வு தான்.மன்மோகன் ராஜ்யசபா எம் பி தான்.
    அவர் டெல்லியில் தேர்தலில் நின்று தோற்றவர்.ஆனால் 2009 தேர்தலில் அவர் பிரதமர் ஆக தொடர்வார் என்ற நிலைக்கு தான் வோட்டுக்கள் விழுந்தது.அவர் ஒன்றும் மக்கள் தலைவர் கிடையாது.நம்ம ஒ பன்னீர்செல்வம் மாதிரி உட்கார வைக்கப்பட்டவர்.மோடியும் அந்த மாதிரி தான் அரசியலில் நுழைக்கப்பட்டவர்.ஆனா உண்ட வீட்டுக்கு இரண்டகம் என்பதை தயை தாட்சண்யம் இல்லாமல் செய்து காட்டி ஆர் எஸ் எஸ் பயிற்சியை உலகுக்கு தெளிவாக காட்டி உள்ளார்
    பா ஜ க கட்சியில் 1980இல் துவங்கப்பட்ட நாளில் இருந்து அத்வானிக்கு தான் செல்வாக்கு அதிகம்.ஆனால் மாநில கட்சிகள் அவரின் ரதயாத்திரை புகழால் கூட்டணி சேர தயங்கும் என்பதால் வாஜபையை பிரதமர் வேட்பாளராக அவர் தான் அறிவித்தார். கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அவருக்கு தான் இருந்தது.கட்சி வெற்றி பெற வேண்டும்,கட்சியின் தலைமையில் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக பெரும்பான்மை ஆதரவு இருந்தும் ,தலைமை பொறுப்பை/பிரதமர் வேட்பாளர் முன் நிறுத்தபடுவதை விட்டு கொடுத்தவர்.அவருக்கு கட்சிக்காரர்கள்,அவரால் தூக்கி விடப்பட்டவர்கள் காட்டும் மரியாதை புல்லரிக்க வைக்கிறது.
    ஆயிரம் குற்றசாட்டுக்கள் வந்தாலும் கலைஞர் ஜட்டியையோ ,முலாயமின் ஜட்டியையோ அவர்கள் உயிர் உள்ளவரை /அவர்களாக விலகும் வரை தோய்க்க தொண்டர்கள் தயார் தான் சார்.அவர்கள் தான் சார் தொண்டர்கள்.ஜெயிக்கிற குதிரை இல்லை என்ற(பா ஜ கா வில் எல்ல குதிரையும் பொய்க்கால் குதிரை தான் எனபது வேறு விஷயம்) ஐம்பது ஆண்டு கட்சியை வளர்த்தவனை எட்டி உதைத்து காரி உமிழ்பவன் தொண்டன் கிடையாது பெருமைக்குரிய ஸ்வயம்சேவக்

    ReplyDelete