Wednesday 7 March 2018

மகளிர் தினம்


பெரியார் மீது இடது முதல் வலது வரை பல வித போர்வைகளை போர்த்தி கொண்டிருக்கும் பலர் வைக்கும் முக்கிய குற்றசாட்டு அவருக்கும் மணியம்மை அவர்களுக்கும் நடந்த திருமணம்.திருமணம் நடந்த போது அவருக்கு எழுவது வயது.மணியம்மைக்கு 32 வயது.மணியம்மை அவர்கள் விரும்பி செய்து கொண்ட திருமணம்.பெரும் புரட்சியாளர் என்று முன் நிறுத்தப்படும் பாரதியார் இறந்த போது அவர் மனைவியின் வயது இதே தான்.
பெரியாரின் மனைவியாக 24 ஆண்டுகள் வாழ்ந்து பின் இயக்க தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தவர் மணியம்மை அவர்கள்.மனைவியை இழந்த அண்ணல் அம்பேத்கார் மீது காதல் கொண்டு அவருக்கு மனைவியாக வந்த மருத்துவர் சாரதா அவர்களுக்கு அண்ணலை விட இருவது வயது குறைவு.ஆந்திர முதல்வராக இருந்த என் டி ராமராவ் சுயசரிதை எழுத வந்த லட்சுமி சிவபார்வதி அவர்களை திருமணம் செய்து கொள்ளும் போது என் டி ஆர் வயது 71 .லட்சுமி சிவபார்வதி அவர்களுக்கு வயது 38
இவை மூன்றிலுமே தங்களுக்கு பிடித்த ஆணை வாழ்க்கை துணையாக ஏற்க விடாப்பிடியாக இருந்து சாதித்தவர்கள் பெண்கள் தான்.தங்களுக்கு பிடித்த வாழ்வை,பிடித்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்ததை இழிவாக பேசும் கோழைகளின் கூடாரத்தின் செய்கைகளின் பின்னே இருப்பது கையாலாகாத்தனம் தான்.
ஒரு பெண் தன் சுயவிருப்பப்படி தன்னை விரும்ப வாய்ப்பே கிடையாது என்று எண்ணும்,இயலாமையில் தவிக்கும் கூட்டம் தான் பெரியாரின் திருமணத்தை கிண்டல் செய்யும்,வன்மத்தை கொட்டும்.லவ் ஜகாத்,நாடக காதல் என்று காதலுக்கு எதிராக கூக்குரலிடும்.
மகளிர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment