Saturday 14 April 2018

சீருடை பணியாளர் எனும் ஆண்ட சாதி



 மக்கள் ஆட்சி,மன்னர் ஆட்சி,சர்வாதிகாரம் என எதுவாக இருந்தாலும் ஆண்ட சாதி சீருடை பணியாளர் தான்.இதனை மாற்றாதவரை கொடூர குற்றங்களும்,குரூரத்தின் உச்சங்களும் குறையாது.

 கடுமையான தண்டனைகள் குற்றங்களை குறைக்கும் என்ற போலியான ஆனால் பெரும்பான்மை மக்களால் நம்பப்படும் கருத்தே இந்த ஆண்ட @ஆணவ சாதிக்கு இன்னும்  அதிக அதிகாரம் கொடுக்க செய்யப்படும் பிரச்சாரம் தான்.எந்த குரூர குற்றமாக இருந்தாலும் அங்கு சீருடை பணியாளரின் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது.

  இதனை மாற்ற ,குற்றங்கள் குறைய முதலில் காவல்துறை,ராணுவம் என அனைத்திலும் பாதிக்கு பாதி பெண்கள் வர வேண்டும்.பயிற்சியில் பல மாற்றங்கள் வர வேண்டும்.இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்.எந்த காவல் நிலையமாக,ராணுவ யூனிட்டாக இருந்தாலும் எந்தவொரு மதம்,சாதி குழுவின் ஆதிக்கமும் இல்லாத சூழல் உருவாக வேண்டும்.

  சட்டத்துக்கு புறம்பான குரூரங்களை குற்றவாளிகளை பிடிக்க உதவும் வழிகள் என்று செய்வதை ஆதரிக்கும் போக்கு முழுமையாக மறைய வேண்டும் .என் குஞ்சை பார்க்கும் போது கூட அங்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட பல நூறு இளைஞர்களின் அலறல் நினைவுக்கு கொண்டு வரும் குற்ற உணர்ச்சியை ஆண்டுகள் பல கடந்தாலும் மறக்க முடியவில்லை

 இன்னொரு பக்கமாக  சாலையில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிப்பில் மாட்டி கொண்ட சக ஆபிசர் ஒருவருக்கு தினமும் சிறுநீர் போகவே மேல் மெட்டல் cathether மூலம் தான் முடியும். வெடிகுண்டால் தூளான ஆணுறுப்புக்கு பதிலாக  அறுவை சிகிச்சை மூலம் சிறு தோல் சார்ந்த பள்ளம் மட்டுமே அவருக்கு 32 வயதில் கிடைத்த பரிசு..

 எதற்காக போர்,போராட்டம் ,கொலைகள் என்ற எண்ணம் வலுப்பட வேண்டும்,.எதனையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கும் சூழலை நோக்கி முன்னேற வேண்டும்.மதம்,சாதி,தேசியம், மொழி என எதனையும் வெறியோடு தன் குழந்தைகள் மீது கூட திணிப்பது பெரும் வன்முறை என்று எண்ணம் வலுப்பெற வேண்டும்.இந்த எண்ணம் கொண்டவர்களே சீருடை பணியாளர்களாக வர வேண்டும்.

 தனி நபர் குற்றங்களுக்கும் சீருடை பணியாளர் பங்கு பெரும் குற்றங்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உண்டு.இது புரியாத ஆன்மீக முட்டாள்களுக்கு அரசியல் மீது ஆசை வராமல் இருக்க வேண்டும்.இது சமூகத்திற்கு இழைக்கும் அநீதியின் ஆழம் அனைவர்க்கும் புரியும் சூழல் வர வேண்டும்.

No comments:

Post a Comment