Sunday 1 April 2018

கற்பு,புனிதம்,தேசியம்

தேசியவாதம் என்பது கொடிய நோய்.அது இருந்தால் மற்ற நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்து விடும்.மாற்று கருத்து உள்ளவர்களை  மதிக்காமல் மிதிப்பது தான் தேசியவாதம் என்று அழைக்கப்படுகிறது.கற்பு புனிதம்,தேசியம்,அதற்காக உயிரையும் இழப்பேன்  என்று பேசுவதெல்லாம் ஒரு வகை மன நோய் தான்.

  ஒன்றாக இருப்பதால்,கூட்டமைப்பாக இருந்தால் என்ன நன்மைகள்,தனியானால் என்ன பாதிப்புகள் என்று தேசியம் பேசுவோர் பேசினால்,விளக்கினால் அர்த்தம் உண்டு. விடுதலை என்பதே ஒரு ஏமாற்று வேலை மதவெறி,சாதி,இனவெறி போட்டு கொள்ளும் முகமூடி என்றால் நியாயம்.அதை விட்டு விட்டு எங்கு பிறந்து என்ன சிந்தனை.இதனை சிந்தித்தாலே கொலை செய்து விடுவேன் என்று துடிக்கும் ஆணவ கொலை
கூட்டம் போல கோவம் கொண்டு குதிப்பது நியாயமா

   பிரிவினை கோருதல் எனும் உரிமை மணமுறிவு போன்ற ஒன்று தானே .நியாயமான காரணங்களுக்காகவோ அநியாயமான காரணங்களுக்காகவோ கேட்க கூட உரிமை உண்டு என்பதை வலியுறுத்த தான் மக்கள் ஆட்சியையும்,சட்டங்களும் உருவாக்கப்பட்டன.முதிர்ச்சி அடைந்த மக்கள் ஆட்சிகளில் அதற்கு வழி இருக்க வேண்டும் என்று தானே நாகரீக சமூகம் போராட வேண்டும்.

இந்து சனாதனி போல மணமுறிவு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இது இறைவன் போட்ட முடிச்சு என்று நடுநிலையாளர்கள் மற்றும் தேசியவாதிகள்  ஆடும் வெறியாட்டம் உண்மையில்  விளங்கவில்லை.சீக்கியர்கள்,நாகா ,குக்கி,சோரன்,காஷ்மீரி ,மலையாளி,அந்தமான் வாழ் ஜராவா இன மக்கள்,கன்னடியர்கள் ,தமிழர்கள் என பலரின் கூட்டமைப்பு தானே இந்தியா.இவர்கள் ஒட்டுமொத்தமாக சம உரிமைகள் அல்லது தனிவாழ்வு என்று முடிவெடுத்தால் யார் தடுக்க முடியும்

வன்முறை இல்லாமல் இந்த மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாதா என்ன ?முதிர்ச்சி அடைந்த மக்கள் ஆட்சி அதனை நோக்கி தானே செல்ல முடியும்

    நாகாலாந்து மக்களின் போராட்டத்தை தமிழர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றோ வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு  தனி நாடு கோரும் சூழலுக்கு தள்ளப்படுகிறது எனும் கோசத்தை நாகா  இன மக்களும் காஷ்மீரிகளும், சீக்கியர்களும்,குக்கி இன மக்களும் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்ல முடியுமா ?ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டமைப்பை பிரிவில்லாத ஒத்த சிந்தனை உள்ள குழு போல அகண்ட பாரத கோஷ்டி தான் பேசும் என்று நினைத்தால் தேசியவாதிகள் என்ற போர்வையில் மற்றவர்களும் வெறியாட்டம் ஆடுவது வேதனை தான்

  பெண்ணாக பிறந்தவள் ஆணை நம்பி தான் வாழ வேண்டும் என்பது போல மத்திய அரசை ஆணாகவும் ,மாநில அரசுகளை பெண்ணாகவும் உருவகப்படுத்தி ,எவ்வளவு துணிச்சல் கொழுப்பு இருந்தால் ,பிரிந்து செல்வேன் என்று சொல்வாய்.என் கை பூப்பறித்து கொண்டு இருக்காது என்று  தேசியவாதிகள் ஆடும் வெறியாட்டம் அச்சமூட்டுகிறது ஒருபுறம் என்றால்

  மறுபுறம் நாங்கள் நினைத்தால் இன்றே கிடைத்து விடும் தனி நாடு என்று கிசுகிசு மூட்டும் கூட்டம் இன்னும் வேதனையை அதிகப்படுத்துகிறது.சமூக வலைத்தளங்களில் சம உரிமை கொடு,தீர்ப்பை அமுல்படுத்த,மாநிலத்துக்கு உரிய பங்கை ,சுயாட்சியை கொடு அல்லது பிரிந்து செல்வோம் என்ற குரல் வந்தால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் ஆட்சி அமையும் சூழலை நோக்கி செல்ல வேண்டிய தூரம் வெகு வெகு அதிகம்.

  அந்த நாளுக்காக போராட வேண்டிய வழியே வேறு.அரசு இயந்திரம் மிருகத்தனத்தின் உச்சம்.நாகா இன மக்கள்,சீக்கியர்கள்,காஷ்மீரிகளை என பல ஆண்டுகளாக பல ஆயிரம் உயிர்கள் பலியானது தான் மிச்சம்.ஈழத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடந்த கொடூரங்களை,படுகொலைகளை கண்டு ரசித்த அரசு இயந்திரங்கள்,ராணுவங்கள் தான் மிக மிக பெரும்பான்மை.இது தான் நிதர்சனமான உண்மை

  பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கேட்டு போராடிய குழுக்களின் பிரதிநிதிகளே பாராளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்கள்.சீக்கியர் அடையாளமான கத்தியோடு தான் பாராளுமன்றத்துக்குள் வருவேன் என்று ,அனுமதி மறுக்கப்பட்டதால் பாரளுமன்றத்துக்கு செல்லவும் மறுத்தார்கள்.மத்திய அரசு நடத்திய சட்டமன்ற தேர்தலில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மக்களே வாக்களிக்கும் சூழல் நிலவியது.இந்த குறைந்த வாக்குகளின் அடிப்படையில்  வெற்றி பெற்றவர்களை வைத்து உருவான அரசு காவல்துறை ,ராணுவம் துணை கொண்டு ஆடிய வேட்டையில் பல ஆயிரம் இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.இதில் மிக பெரும்பான்மையானோர் எதனோடும் தொடர்பில்லாத அப்பாவிகள் தான்.

No comments:

Post a Comment