Thursday 2 August 2018

உழைப்பு தாழ்வு தரும்


சீர்திருத்தங்களுக்காக,துணிச்சலுக்காக , சமுதாய மாற்றங்களை கொண்டு வந்ததால் தோற்கடிக்கப்பட்ட விசித்திர தலைவர் கலைஞர்
கலைஞர் எடுத்த பெரும்பாலான முடிவுகளால் பயன்பெற்றவர்கள் அவரை தோற்கடித்தது தான் தமிழகத்தின் கடந்த நாப்பது ஆண்டு கால வரலாறு.1989 முதல்வராக பதவியேற்ற பிறகு ,திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் சில
பெண்களுக்கு சொத்துரிமை
பெண்களுக்கு அரசு பணிகளில் முப்பது சதவீதம் என்று முடிவெடுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு.ஆண்களை எடுத்து கொண்டால் பத்தில் ஐந்து பேர் திமுகவாக இருப்பார்கள்.ஆனால் பெண்களில் பத்தில் இரண்டு,மூன்று தான்.எம்ஜிஆர் துவக்கிய காலம் முதல் ஜெஜெ அவர்கள் தோல்வி அடைந்த தேர்தல்கள் உட்பட பெண்களின் வாக்கு அதிமுகவுக்கு தான் அதிகம்..எங்கள் சமுதாயத்தில் படித்த பெண்கள் வெகு குறைவு.இதனால் எங்களுக்கு அதிக பாதிப்பு என்று இந்த முடிவை எதிர்த்தவர் மருத்துவர் ராமதாஸ்
பழங்குடி மக்களுக்கு தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு செய்து 68 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 69 சதவீதமானது.பழங்குடியினர் தவிர்த்து பட்டியல் இனத்தவருக்கு முழுமையாக 18 சதவீத இடங்கள் கிடைத்தது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பிரிக்கப்பட்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கப்பட்டது.மிக பெரும் அநியாயம் என்று போராடிய பாமகவும் குறை சொன்னது.பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் வந்த சாதிகளின் தலைவர்களும் பொங்கி குதித்தனர்.
கிருத்துவ சமுதாயத்தினை வன்னியர்களுக்கு,மீனவர்களுக்கு தமிழ்நாட்டில் எம் பி சி கிடைக்க வழி செய்தார்.பாஜக ஆதரவு எனும் காலை சுற்றிய பாம்பு இலலாவிட்டால் வி பி சிங் அவர்களின் தேசிய முன்னை அரசு கிருத்தும்,இஸ்லாம் பின்பற்றும் பட்டியல் இன மக்களுக்கு பட்டியல் இனத்தின் கீழ் இட ஒதுக்கீடு செய்திருக்கும்
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
பட்டதாரி இல்லா குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஊக்க மதிப்பெண். மருத்துவரின் மகனான அருமை தோழர் அரவிந்தன் கண்ணையன் அது என்ன மருத்துவர்களின் மகன்கள் தான் மருத்துவ கல்லூரிகளில் அதிக இடங்களை பிடிக்கிறார்களாமே .அதனை அழிப்பேன் என்று இந்த முடிவை கலைஞர் எடுத்தார் என்று சொல்லும் போது தான் சுரீர் என்று உரைத்தது.முதல் தலைமுறையிலேயே பொறியியல் ,மருத்துவம் பட்டதாரிகளை அதிகம் உருவாக்க முயற்சிப்பதால் அவருக்கு கிடைக்கும் அரசியல் ரீதியான பலன்கள் என்ன ?ஒன்றும் கிடையாது
இழப்பு மிக மிக அதிகம். எந்த சாதியாக இருந்தாலும் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை முழுவதுமாக சினம் கொள்ள வைக்கும் முடிவு அது.இருந்தும் அதனை துணிந்து எடுத்து அதற்கான இழப்பை மிக அதிகமாக 1991 தேர்தலில் பெற்றார்.
இந்திய அமைதிப்படையை திரும்ப பெற வி பி சிங் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்ற திமுக முக்கிய [அங்கு வகித்தது.இந்தியா திரும்பிய அமைதி படையினரை வரவேற்க இருக்கும் நடைமுறையான மாநில முதல்வர் செல்லும் நிகழ்வை புறக்கணித்த கலைஞரை இன்றும் அதற்காக திட்டும் ராணுவ அதிகாரிகளுக்கு குறைவு கிடையாது
கலைஞரும் திமுகவும் இலலாவிட்டால் விடுதலை புலிகள்,போராளிகளை அன்றே உருத்தெரியாமல் அழித்திருப்போம்..ஆனால் கலைஞரின் அழுத்தம் காரணமாக வி பி சிங் அவர்கள் எடுத்த முடிவினால் இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு பெரும் களங்கமாக இந்திய அமைதி படை நடவடிக்கை,வாபஸ் இருக்கும் என்று அன்றும் இன்றும் பேசாத ,எழுதாத ராணுவ உயர் அதிகாரிகள் வெகு குறைவு
பல சீர்திருத்த முடிவுகளை எடுத்த பிறகு கிடைத்த பரிசு 1989 பாராளுமன்ற தேர்தல் தோல்வி
.மண்டல் கமிஷனை முழுமையாக எதிர்த்த ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஜெஜெ அவர்கள் தலைமையிலான அதிமுகவோடு கூட்டணியாக பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஒரு தொகுதியில் கூட வெல்லாத ,திமுக கூட்டணியில் cpi நாகப்பட்டினம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற சூழலுக்கு பின் இருந்த ஒரு வருடத்துக்கு குறைவான ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றில் சில
மண்டல் கமிஷன் பரிந்துரை நிறைவேற்றம் ,புத்த மதம் தழுவிய பட்டியல் இனத்தோருக்கு பட்டியல் கீழ் ஒதுக்கீடு.அண்ணலுக்கு பாரத் ரத்னா , காவிரி நடுவர்நீதி மன்றம் அமைப்பு என அனைத்திலும் திமுகவுக்கு முக்கிய பங்குண்டு
.மிக தெளிவாக காங்கிரஸ் ,அதன் தலைவர் ராஜீவ் மண்டல் கமிஷனுக்கு எதிரான நிலை எடுத்த பிறகும் ,ஈழத்தில் போராடும் போராளி குழுக்களுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஆளுநர் ஒத்து கொண்டு சம்மதிக்காத சூழலிலும் otherwise பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆர் வி ,காங்கிரஸ் ஆதரவுடன் இயங்கிய சந்திரசேகர் அரசு பரிந்துரையின் பேரில் ஆட்சியை கலைத்த பிறகு நடந்த தேர்தலில் கலைஞர் ஒருவரை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை பரிசாக தந்த மாநிலம் தமிழகம்

No comments:

Post a Comment