Thursday 2 August 2018

சுயமரியாதை


சுயமரியாதை என்ற சொல் கடவுள் நம்பிக்கை என்ற மூடநம்பிக்கைக்கு நேர் எதிரான ஒன்று.சுயம் என்ற ஒன்றே கிடையாது. சரணாகதி அடையாவிட்டால் பெரும் கேடு தான் என்று மிரட்டுவது தான் மதம்.கடவுள் சடங்குகள் .கடவுள் நம்பிக்கை உடைய ஒருவர் சுயமரியாதையோடு இருப்பார் என்று எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.
ஆண் என்றால் என்ன உரிமை உண்டு ,பெண் என்றால் எவ்வளவு பணிவு ,கீழ்ப்படிதல்,ஒதுங்கி வாழ்தல்,மறைந்து வாழ்தல் இருக்க வேண்டும்.எந்த வர்ணத்துக்கு என்ன மரியாதை தர வேண்டும்,யாரிடம் கோவப்படலாம்,யாரிடம் என்ன செய்தாலும் பணிவாக இருக்க வேண்டும் என்பது தான் இந்து மதம்.இந்த அழகில் இந்து மத நம்பிக்கை கொண்ட ஒருவரை பார்த்து சுயமரியாதைக்கு இழுக்கு என்று சொன்னால் திருதிரு என்று விழிக்காமல் என்ன செய்வார்.
மாண்புமிகு துணை முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வராக முதன் முதலில் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப்பட்ட போதே இதற்கு தயார் செய்யப்பட்டவர்.அவரை யார் யார் எப்படி இழிவுபடுத்தினார்கள் என்ற முழு தகவல்களையும் அவர் சொன்னால் சசிகலா அவர்கள்,தினகரன்.திவாகரன் அவர்களின் அடுத்த தலைமுறை என அனைவரும் அமைச்சர் நிர்மலா சீதாராமனை மிஞ்சிய கதை தெரியும்
குறிப்பிட்ட பதவிகளில் இருப்பவர்கள்,தனக்கு பதவி கிடைக்க காரணமாக இருப்பவர்கள் அவர்களை உடன்பிறந்த உறவுகள்,உடன்பிறவா உறவுகள் எபப்டி வேண்டுமானாலும் தன்னை மட்டம் தட்டலாம்,உதாசீனம் செய்யயலாம்,இழிவுபடுத்தலாம் என்பதை தான் அவரின் இந்து மத நம்பிக்கை அவருக்கு கற்று தந்திருக்கிறது.அவரை பார்த்து அவரை போல இந்துமத நம்பிக்கை உள்ள மக்கள் சுயமரியாதை என்று பேசுவது தான் வியப்பாக இருக்கிறது
மத நம்பிக்கை உடைய பெண்ணிடம் சென்று மாத உத்திர போக்கு தீட்டு என்று கருதுவது,கடவுளை வழிபட அந்த நாட்களில் கோவிலுக்கு செல்வது கடவுளுக்கு கோவம் தரும்,கடவுளை அவமானப்படுத்தும் செயல் என்று எண்ணுவது தவறு என்று சொன்னால் அவருக்கு வரும் அதே கோவம் தான் காலில் விழும் அமைச்சர்கள் முதல் உதாசீனம் செய்யப்பட்ட துணை முதல்வர் வரை வரும்.
சாமிக்கு ,வரம் தரும் சாமிக்கு,சாமியின் பூசாரிகளுக்கு, கடவுளாக தங்களை பாவித்து கொண்டு பாவ மன்னிப்பு தரும் பாதிரியார்களுக்கு , விசிறி சாமியார்களுக்கு ,ஜீயர்களுக்கு , பத்வா தரும் மௌல்விகளுக்கு எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள,கோவித்து கொள்ள,தண்டிக்க உரிமை உண்டு எனும் நம்பிக்கையை தகர்க்காமல் ஆணும் பெண்ணும் சமம்,சாதி ,தீண்டாமை எல்லாம் ஒழியும் என்று நினைப்பது மூட நமபிக்கை தான்.
சுயமரியாதை என்பது சரணாகதி என்பதன் நேர் எதிர் நிலை.எந்த மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் சுயமரியாதைக்கும் சிறிது கூட தொடர்பு கிடையாது

No comments:

Post a Comment