Thursday 1 October 2015

பாசிசம் என்றால் என்ன

பாசிசம் என்றால் என்ன என்று இதுவரை இருந்து வரும் அர்த்தத்திற்கு நேர்மாறான ஒரு அர்த்தத்தை தரும் கட்டுரையை எழுதி உள்ளது வியப்பை தருகிறது
1930 களில் யார் யாருக்கு வோட்டுரிமை இருந்தது,வோட்டுரிமை பெற அடிப்படை தகுதிகள் எவை ,வோட்டு போடும் உரிமை பெற்றவர்கள் எத்தனை சதவீதம் என்பதை விளக்கி இருந்தால் பல உண்மைகள் விளங்குமே.மக்கள் தொகையில் மிக குறைந்த மக்களுக்கே வோட்டுரிமை இருந்த காலகட்டம் அது. உலகெங்கும் வோட்டுரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை வெகு குறைவு.வோட்டுரிமைக்கு தகுதி இல்லாதவர்கள் தான் மிக பெரும்பான்மை.பெண் என்பதால்,சொத்து இல்லாததால்,குறிப்பிட்ட பகுதி,கூட்டத்தை சார்ந்தவர்கள்,குற்ற பரம்பரையினர்,பழங்குடிகள் என்று வோட்டுரிமை மறுக்கப்பட்டவர்கள் தான் அதிகம்.
வோட்டுரிமையை பெரும்பான்மை மக்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை திரித்து அன்று இருந்த சிறுபான்மை மக்களுக்கு மட்டுமான வோட்டுரிமையை உண்மையான மக்கள் ஆட்சி,அனைத்து மக்களுக்குமான ஒன்று போல எழுதுவது நியாயமான செயலா.அனைவருக்கும் வோட்டுரிமை இருப்பது போலவும் அதை மாற்ற வேண்டும் என்று பெரியார் கூறியதற்கு வெள்ளைகார துரை நியாயமற்ற கோரிக்கை என்று மறுத்தார் என்று எழுதுவது நல்ல நகைச்சுவை
பெரியார் பெரும்பான்மை மக்கள் நம்பிய பல விஷயங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தவர்.இன்றும் சாதி கடந்த திருமணம்,பெண்களுக்கு சொத்துரிமை ,ஒரே கோத்திர திருமணம் ,ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம்,எளிதான மணவிலக்கு மதம் மாறும் உரிமை வேண்டுமா வேண்டாமா என்றால் பெரும்பான்மையினர் வேண்டாம் என்று தான் முடிவு எடுப்பார். அப்படி அவர்கள் முடிவு எடுத்தால் அது சரி என்று ஆகி விடுமா
இன தூய்மைக்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தவருக்கு எதிராக எவ்வளவு வன்மம்.இதை அவர் சொன்னவற்றிற்கு எதிரானவன் என்பவர் செய்தால் புரிந்து கொள்ளலாம்.ஆனால் இட ஒதுக்கீடு,பெண் விடுதலை,மதம் மாறும் உரிமை,சாதி கடந்த திருமணங்கள் ,மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்று சொல்லி கொள்ளும் கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவர் செய்வதை தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
பெரியார் வெள்ளையர்களிடம் இருந்து ஆட்சி மத வெறியர்களிடம் செல்வது பெரும்பான்மையான ஏழை,எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் என்று நம்பினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார் . நீங்களும் பெரியார் வழியில் தமிழ் தேசியம்,தனி தமிழ்நாடு என்பது ஏழை எளிய மக்களுக்கு தீங்காக தான் இருக்கும் என்று நம்புவது போல.
பெரும்பான்மையான நாக இன மக்களோ,கஷ்மீரிகளோ ,தமிழர்களோ தங்கள் இன தூய்மையை பாதுகாக்க வெளியாட்களை வெளியேற்ற வேண்டும் எனு பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தீர்மானம் இயற்றினால் அதை எதிர்ப்பவர்கள் மக்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள் ,பாசிஸ்ட்கள் என்பீர்களா . நீங்கள் இன்று இந்தியாவோடு இருப்பது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள,ஏற்று கொள்ள முடிகிறது.அதே தான் மத வெறியர்களின் கையில் ஆட்சி சிக்குவதை விட neutral umpire வெள்ளையன் மேல் என்று பெரியார் எண்ணியதன் பின் உள்ள நியாயமும் என்பதை உங்களால் தான் புரிந்து கொள்ள முடியவில்லை
தனி மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று எழுதிய பாரதியை உலகையே அழிக்க எண்ணிய கொலைக்காரன், ஒரு வேலை உணவு கிடைக்கவில்லை என்பதற்காக அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பாடியவன் என்று வசைபாடுவதற்கும் நீங்கள் பெரியார் மீது பொழியும் வசைகளுக்கும் வித்தியாசம் கிடையாது.
Ananthakrishnan Pakshirajan
சொல்வனம் கட்டுரை. பிடித்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்
http://solvanam.com/?p=41831

No comments:

Post a Comment