Thursday 14 December 2017

காதல்


இதில் என்ன தவறு என்றே விளங்கவில்லை .பள்ளி,கல்லூரி ,பணி என அனைத்து இடங்களிலும் காதலித்திருக்கிறேன்.சிலரின் பள்ளி காதல் திருமணத்தில் முடிந்தது.அதை விட அதிக சதவீதம் கல்லூரியில் நடந்தது.நான் பணி புரிந்த ராணுவம் மற்றும் விமான கம்பெனியில் அதிகாரிகளில் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் தான் அதிகம்.பிறந்து வளர்ந்த சென்னையிலும் அதிகம் தான்.
விமான பணிப்பெண்களுக்கு instructor பணியில் இருந்தேன். 18 வயது பெண் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு விமான பணிப்பெண்ணாக தேர்வு பெற்று பயிற்சியில் இருந்தார்.படிப்பை முடித்து விட்டு வர வேண்டியது தானே என்று கேட்ட போது ,பணிக்கு சேர்ந்து எனக்கு பிடித்த படிப்பை என் காசில் படிப்பேன் என்கிறார்.பெண்கள் வெகுவாக மாறி விட்டார்கள்.பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்று சுற்றும் ஆண்களுக்கு திருமணம் வெகு வெகு கடினம் தான் என்பதையும் சொல்லி வைக்கிறேன்
காதலை குற்றமாக பார்க்கும் நாட்டுப்புறத்தான் கூட்டம் தான் சென்னையை நோக்கி,ஐரோப்பாவை நோக்கி ஓடி வருகிறது.மாற வேண்டியது இவர்கள் தானே தவிர நாங்கள் அல்ல
அழகை பார்த்து,சொத்தை பார்த்து,படிப்பு,பணியை பார்த்து, கவர்ச்சியால் காதலிக்கிறார்கள் ,காதலை சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டே விந்தையாக இருக்கிறது.எதை பார்த்து சொன்னாலும் அதில் தவறு,குற்றம் எங்கே வருகிறது ?
தாம்பரத்தில் எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த இரு பெண்களும் காதல் திருமணம் ,பெரிய பெண் இந்துவை திருமணம் செய்து கொண்டார். சின்னவர் இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார்..தாய் சிறிய மகளுடன் தான் வசிக்கிறார். தினமும் கோவிலுக்கு வருவார்.நகர் கோவிலுக்கு லட்சக்கணக்கில் கட்டிடம் கட்ட பணம் கொடுத்தார்.இஸ்லாமிய மருமகன் தன மாமியாருக்கு வீட்டின் கீழ் போர்ஷனை கொடுத்து விட்டார் .
எதிர் வீட்டில் இருந்த கிருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு மூன்று மகன்கள் .மூவரும் வேறு சாதி,மதத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.மூவரும் படிப்பை சரியாக முடிக்கவில்லை.ஆனால் நல்ல விளையாட்டு வீரர்கள்,இசை கலைஞர்கள்.மனைவிகள் நல்ல பணியில் இருக்கிறார்கள்.இவர்கள் ஜாலியாக விளையாட்டு,கலை என்று சுற்றி கொண்டு இருக்கிறார்கள் .பின் வீட்டின் தோழர் அவர் எதிர் வீட்டு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
எங்கள் வீட்டிலும் இதே கதை தான். எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களும் இதே கதை தான்.காதலை எந்த வயதில் வந்தாலும் காதலை பெருங்குற்றமாக பார்க்கும் மனநிலை விந்தையாக இருக்கிறது..
பெத்து வளர்த்த பெற்றோருக்கு தெரியாதா என்ற கேள்வியின் முட்டாள்தனம் புரியாத பெருங்கூட்டம் இருவத்தி ஆறாம் நூற்றாண்டிலும் இருப்பது மிகவும் வருத்தம் தான்.
பெற்றோர் சரியான முடிவு எடுப்பர் என்பதே மூட நம்பிக்கை தான்.தாய்மாமன் மகன் படிக்கவில்லை என்று பள்ளிப்படிப்போடு தன மகளின் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்தவர்களை என்னால் பட்டியல் இட முடியும்.நீ ஒன்னும் வெளியூர் சென்று படிக்க வேண்டாம் என்று படிப்பை நிறுத்திய பெற்றோர் தான் பல ஆயிரம்.
நானும் என் குடும்பத்தினரும் செல்லும் ராணுவ கிளப்களுக்கு நூற்றுக்கணக்கில் பத்தாவது ,பதினொன்றாவது சிறுவர் சிறுமியர் எல்லாம் பாய் friend ,கேர்ள் friend ஓடு தான் வருவார்கள்.
இவர்களில் ஒருவரை கூட காதலினால் வாழ்க்கை பாழானது என்று கேள்விப்படவில்லை, பார்க்கவில்லை,யாரும் சொன்னதும் இல்லை. சிறுவயது காதல் திருமணத்தில் முடிந்ததும் உண்டு.பல பிரிந்ததும் நடந்தது.அது அவரவர் வாழ்க்கை
முள்ளு மேல் சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் என்று பேசும் ஊர்நாட்டான் கூட்டம் திடீர் என்று காதல் பெருங்குற்றம் என்று அட்டூழியம் செய்வது எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை
இயக்குனர் சேரன் அவர் மகள் காதலை எதிர்த்த நிகழ்வை வைத்து கொக்கரிக்கும் அவலம் ஆச்சரியம் தருகிறது.தோனியை மகள் காதலித்திருந்தால் எதிர்த்திருக்க மாட்டார்.சாமான்யனை காதலித்தால் எதிர்த்தார் என்பது அவர் முடிவு. மேஜர் ஆன மகள்,மகன் தன சொத்து என்ற எண்ணம் அவ்வளவு எளிதில் நாட்டுப்புறத்தான்களுக்கு போய் விடுமா என்ன ?
சேரன் பாரதிராஜா எல்லாம் நாட்டுப்புறத்தான்கள் தானே.அவர்களுக்கு புரட்சி ,காதல் எல்லாமே ஆணாதிக்கம் சார்ந்த ஒன்று தான்.
அடுத்து நாடக காதல்,பஞ்சாயத்து எனும் கதைகள் அடித்து விடப்படுகின்றன.
நாடக காதல் எனும் பொய் திருப்பி திருப்பி சொல்லப்படுவது விளங்கவில்லை.அப்படி ஒன்று இருந்தால் அது அதிகம் நடக்கும் ஊராக சென்னை தான் இருக்க வேண்டும். இங்கு தான் பணக்காரர்களும்,சொத்து வைத்திருக்கிறவர்களும் அதிகம்.வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் இளைஞர்களும் அதிகம்.சாதி,மதம் தாண்டிய காதலும் அதிகம்.
திருமணம் ஆன ஒரே நாளில் பிரிந்து அந்த பஞ்சாயத்து நடக்கும் பெற்றோர் பார்த்து வாய்க்கும் திருமணங்கள் பல ஆயிரம் உண்டு. திருமண செலவை திருப்பி கொடு,போட்ட நகையை திருப்பி கொடு என்று பஞ்சாயத்து நடப்பது காதலை பிரிக்க நடப்பதை விட பல நூறு மடங்கு.
கவுண்டர் ,வன்னியர்,முக்குலத்தோர் மூர்க்கமாக எண்ணிக்கை ஆதிக்கம் காரணமாக ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் இருந்து மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுவதை கொஞ்சம் சிந்தித்தாலும் எளிதில் விளங்கி கொள்ளலாம்.
ஆங்கிலோ இந்தியர்கள் என்ற சமூகம் உண்டு. எங்கள் ஊரில் நிறைய பேர் இருந்தார்கள்.அவர்கள் இடையே மிக பெரும்பான்மை காதல் திருமணங்கள் தான்.அவர்களை போல தான் சென்னையின் மற்ற சமூகங்களை சார்ந்த மக்களும் மாறி வந்தார்கள்.வேலை இருக்கிறவனோ ,இல்லாதவனோ பிடித்தவனை திருமணம் செய்து கொண்டால் விட்டு விடுவார்கள்.பட்டிகாட்டங்கள் படித்து,பணி கிடைத்து சென்னை,சிங்கப்பூர் ,அமெரிக்கா என்று வந்து விட்டாலும் கிராமத்து வெறித்தனத்தை தூக்கி கொண்டு அலைவதும் அதனை அனைவர் மீதும் திணிப்பதும் தான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம்

No comments:

Post a Comment