Sunday 10 December 2017

மோடியும் சசிகலாவும்


திராவிட கழக தலைவர் வீரமணி அவர்கள் சசிகலா மற்றும் அவர் குடும்பத்தாரை போற்றும் விதமாக வெளியிட்ட அறிக்கை வியப்பையும் வேதனையும் அளிக்கிறது.இந்த நிலைப்பாடு கொண்ட ஒருவர் எப்படி மோடியை அவர் சாதியை வைத்து ஆதரிக்காமல் இருக்கிறார் என்று ஆச்சரியம் வருகிறது.
சசிகலா பிராமணர் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.அப்போதும் வீரமணி இதே நிலை தான் எடுத்திருப்பாரா அல்லது அவருக்கு எதிராக பொங்கி இருப்பாரா.
மோடிக்கும் சசிகலாவுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சசிகலா அவர்களை விலக்கி வைத்தது போல மோடி அவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்று கட்சியினர் போராட்டம் நடத்தியதால் குஜராத் அரசின் நிழல் அரசியலில் இருந்து அவர் விலக்கப்பட்டார்.மீண்டும் சசிகலா சேர்த்து கொள்ளப்பட்டது போல மோடி மீண்டும் பின்வாசல்/புழக்கடை /நிழல் அரசியலில் சேர்த்து கொள்ளப்பட்டார்.
நிழல் முதல்வராக டெல்லி துணை கொண்டு பா ஜெ க வை ஆட்டிப்படைத்து கொண்டிருந்த மோடி ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்காத மோடி நேரடியாக மக்கள் முன் முன்னிறுத்தப்பட்ட கேஷுபாய் அவர்களை முதுகில் குத்தி ,எம் எள் ஏக்களின் ஆதரவு இல்லாமல் முதல்வர் ஆனவர்.
இருவருக்கும் இடையே ஒரே வித்தியாசம் -கேசுபாய் உயிரோடு இருக்கும் போதே அவர் முதுகில் குத்தி விட்டு மோடி நேரடி முதல்வர் ஆனார். அவர் வெற்றி பெற நல்ல தொகுதியாக தேடியதில் ஹரேன் பாண்டியா அவர்கள் தொகுதி சிக்கியது.ஆனால் ஹரேன் பாண்டியா இதற்கு ஒத்து கொள்ளவில்லை. பின் வேறொரு தொகுதியில் சாம தான தாண்ட பேதங்களை பிரயோகித்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.உடன் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்றது.
ஹரேன் பாண்டியா என்னவானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.அத்வானி ஹரேன் பாண்ட்யாவுக்கு போட்டியிட வாய்ய்பு தர வேண்டும் என்று சொன்னதற்கு கோவித்து கொண்டு மருத்துவமனையில் படுத்து கொண்டவர் மோடி.விடாப்பிடியாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு தர மறுத்தவர்.அதே போல வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிக்க மருத்துவமனையை பயன்படுத்தி கொண்டவர் சசிகலா
தமிழகத்தின் மோடியாக சசிகலா உருவானால் ஹரேன் பாண்டியா யாராக இருக்கும் என்ற சுவாரசியம் மிகுந்த கேள்வி எழுகிறது..மோடி தன்னை ஆதரித்த அனைவரையும் நடுக்காட்டில் தான் நிறுத்தி விட்டிருக்கிறார்.அதே நிலை தான் இங்கும் நடைபெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
மாநிலம் தழுவிய மத கலவரம் மட்டும் இல்லை என்றால் மோடி ஒரு ஆண்டு முதல்வராக தூக்கி எறியப்பட்டிருப்பார். அவர் அரசியல் வாழ்வுக்கு மிக முக்கிய காரணம் மத கலவரம்.தமிழ்நாட்டின் மோடியாக இங்கு உருவாக நினைப்பவர்கள் அதே போல சாதிக்கலவரங்களை தூண்டி விடுவார்களோ என்ற பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
அ தி மு க வின் 135 எம் எல் ஏக்களில் அதிகம் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் தான்-31 பேர்.இப்போது வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி சேர்ந்து கவுண்டர்கள் 24 பேர் .ஹிந்து பத்திரிக்கை கூட தவறாக 28 பேர் என்று எழுதுவது வருத்தம் தரும் ஒன்று.அடுத்து முக்குலத்தோர் 19 பேர்.வன்னியர் 17 பேர்,முத்தரையர் 6 பேர் ,நாடார்கள் 4
சென்ற முறை மத்திய அரசில் தமிழ்நாட்டில் இருந்து 12 அமைச்சர்கள்.இந்த முறை ஒரே ஒருவர்.பா ஜெ க வென்றது ஒன்று தான்.மக்களாட்சி என்பதே எண்ணிக்கையை வைத்து தான்.எம் எல் ஏ க்கள் இதை மனதில் வைத்து கொண்டு கூட்டாக கட்சிக்கு உள்ளும்,வெளியிலும் போராடினால் தான் சதவீதத்துக்கு ஏற்ற இடங்கள் கிடைக்கும்.அரசியலில் இட ஒதுக்கீடு மற்ற அணைத்து மக்கள் ஆட்சி தூண்களை விட மிக மிக முக்கியமானது. இதில் கோட்டை விட்டு விட்டால் அனைத்திலும் கோட்டை தான்.

திரு ஓ பி எஸ் அவர்கள் முதல் முறை,இரண்டாம் இப்போது மூன்றாம் முறை முதல்வராக பதவி ஏற்க ஒரே காரணம் தான்-சாதி .முக்குலத்தோர் சமூகத்தில் இருந்து மட்டும் 9 அமைச்சர்கள் இருக்க ஒரே காரணம் சாதி தான்.வன்னியர்,முக்குலத்தோர்,கவுண்டர் என்ற மூன்று சாதிகளுமே அவர்களின் சதவீதத்துக்கு அதிகமான இடங்களை தான் கட்சி,ஆட்சி,சட்டசபையில் கடந்த பல தேர்தலுக்காக பெற்று வருகின்றன. வெள்ளையர் காலத்தில் நடந்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சட்டநாதன் கமிஷன் அறிக்கைபடி பார்த்தல் இந்த சாதிகளின் மக்கள் தொகையை பற்றி ஓரளவுக்கு அறிய முடியும்.
தி மு க வில் இந்த நிலை கிடையாது. எந்த சாதியும் 3 ,4 அமைச்சர்களுக்கு மேல் பெற்றது கிடையாது.கம்ம்யூனிஸ்ட் பௌத்ததேப் அவர்கள் அமைச்சரவையில் 33 பேரில் 16 பேர் பிராமணர்கள்.அதே போன்ற நிலை இங்கு ஓ பி எஸ் அல்லது சசிகலா அவர்கள் தலைமையில் நடக்க தான் வாய்ப்புகள் அதிகம்.எண்ணிக்கை அதிகம் இருக்கின்ற எந்த சாதி தலைமைக்கு வந்தாலும் சாதி வெறியாட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.தமிழ்நாடு ஓரளவுக்கு சாதி,மத கலவரங்கள் குறைவாக உள்ள மாநிலமாக இருக்க இதுவரை இருந்த எண்ணிக்கை குறைவாக இருக்கும் சமூகங்களை சார்ந்த ,ஓரளவுக்கு சாதியை கடந்த தலைமைகள் காரணம்.
இது தொடர வேண்டுமானால் , சபாநாயகர் தனபால் அல்லது முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் அவர்கள் முதல்வர் மற்றும் பொது செயலாளராக பதவி ஏற்றால் ,எந்த சாதியையும் அளவுக்கு அதிகமான அமைச்சர்களை கொண்ட நிலை இல்லாத அமைச்சரவை உருவானால் தான் சாத்தியம். இதை கேட்கும் உரிமை கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் உண்டு.
எம் ஜி ஆர் முதல் முறை ஆட்சி அமைத்த 1977 தேர்தலில் எம் எல் ஏ வாக வெற்றி பெற்றவர்.அமைச்சராக இருந்தவர், சபாநாயகர் தனபால் அவர்கள் என்பதையும் எந்த விதத்தில் ,எதனால்,எந்த அடிப்படையில் அவர் இப்போது முன்னிறுத்தப்படுபவர்களை விட குறைந்தவர் என்பதனை ஆய்ந்து அறிந்து கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று பொதுவில் வைக்கிறேன் .

No comments:

Post a Comment