Tuesday 19 December 2017

இரு பெண்களின் கதை




 கல்லூரியில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இருவது வயதை கடந்த மேஜர் ஆன பெண்,தன்னுடன் தங்கி வந்த தோழிகளின் மத நம்பிக்கைகளை கண்டு ஈர்க்கப்பட்டு அதன் பால் செல்கிறார்.விடுமுறையில் ஊருக்கு சென்றவர் தன் தந்தையின் குடும்பம் சார்ந்த மதரீதியான முயற்சிகளில் ஈடுபட மறுக்கிறார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட்  என்று சொல்லி கொள்ளும் இந்து தந்தை மேஜர் ஆன தன் மகளை அவள் விருப்பத்துக்கு மாறாக  இந்துவாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கிறார்.வழக்கு தொடுக்கிறார்.நீதிபதிகளும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மேஜர் ஆன ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்ட கணவனிடம் இருந்து பிரிக்கிறார்கள்.

 இதற்கு ஆதரவாக பல முதல்வர்கள்,கட்சி தலைவர்கள் ,மதவாதிகள்,கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ,முற்போக்காளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் என்று பெருங்கூட்டம் இருக்கிறது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மிகவும் சிந்திக்க வைக்கும்  வழக்கு என்கிறார்.திருமணம் செல்லாது , திருமணமான மேஜர் பெண் கணவனோடு  சேர்ந்து வசிக்க கூடாது,கல்லூரி தாளாளரே கார்டியன் என்று எல்லாம் அற்புத தீர்ப்புகள் அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருக்கின்றன

  சற்றே பின்னோக்கி எண்பது ஆண்டுகள் பின்னே சென்று இன்னொரு பெண்ணின் கதையை பார்ப்போம்.பாடகியான தாய் தேவதாசியாக வாழ்ந்தவர்.தன் மகளையும் பாடகியாக்க சிறுவயது முதல் பயிற்சிகள்,கடும் முயற்சிகள் எடுக்கிறார்.20 வயது மகள் தன் தாயாரோடு வாழ பிடிக்காமல் அவருக்கு தெரிந்த ஒரு காங்கிரஸ்க்காரரை சந்திக்க சென்னை வருகிறார்.அவர் உதவி கேட்டு வந்த காங்கிரஸ்க்காரர் குடும்பம் தேவதாசியின் மகளை கண்டு கோவம் கொண்டதால் இன்னொரு காங்கிரஸ் தியாகியிடம் சென்று உதவுமாறு இந்த காங்கிரஸ் தியாகி கேட்கிறார்.

 இரண்டாவது காங்கிரஸ் தியாகி இரு பெண் குழந்தைகளுக்கு தந்தை.பிரசவத்துக்கு சென்ற மனைவி தாய் வீட்டில் இருந்ததால் காங்கிரஸ் தியாகி வீட்டில் தங்க துவங்குகிறார் பாடகி.அவளை தேடி அவர் சகோதரர் காங்கிரஸ் தியாகி வீட்டுக்கு வருகிறார். தங்கள் வீட்டுக்கு வருமாறு பாடகியை அழைக்கிறார்.ஒழுக்க சீலர் காங்கிரஸ் தியாகி பாடகியின் சகோதரர் சக்திவேலை துரத்தி விடுகிறார்.

 தியாக சீலர் காங்கிரஸ் தியாகி பாடகிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைகிறார் என்று அவர் புகழ் பாடுபவர்கள் இன்று புத்தகங்கள் எழுதுகிறார்கள்.தூய்மையான காங்கிரஸ் தியாகி வீட்டில் தங்கி பாடகி சினிமாவில் நடிக்கிறார்.காங்கிரஸ் தியாகியின் மனைவி திடீர் என்று இறந்து விடுகிறார்.தியாகி உடனே அவர்வீட்டில் வாழ்ந்து வந்த பாடகியை துணைவியாக ஏற்று கொள்கிறார். அவர் தாய்,சகோதரர்,உறவுகள் அனைத்தோடும் எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று அளவுகடந்த அன்பு,பாசம்,காதலோடு உத்தரவிடுகிறார்.

 அடுத்ததாக தன் குழந்தைகளுக்கும் ,தனக்கும் சூத்திர பணியாளாக  பாடகியின் குடும்ப தொழிலை பார்க்கும் அற்புத பணியை தியாக உள்ளதோடு தருகிறார். விதுரரின் தாய் போல் மனமுவந்து அந்த பாடகி அவருக்கு தியாகி தந்த பணியை வாழ்நாள் முழுவதும் செய்கிறாள்.பாடகியை  உச்சநீதிமன்ற நீதிபதிகள்,பிரதமர்கள்,முதல்வர்கள் என அனைவரும் புகழ்கிறார்கள்.

  அவரின் கதையை,அவர் குடும்பத்தில் இருந்து பிரிக்கப்பட்டதை எழுதுவதை,சுட்டி காட்டுவதை கூட பெரும் குற்றமாக பார்க்கும் கூட்டம் 2016 இல் அகிலாவாக தந்தையால் பெயர் சூட்டப்பட்டு தன் சுயவிருப்பத்தால் மேஜர் ஆன பின்பு ஹதியாவான பெண்ணை 24  வயது பெண்ணை (முதலில் சுட்டி காட்டப்பட்ட ) லவ் ஜிஹாத்,மூளை சலவை என்று பேசும் போது எங்கு சென்று முட்டி கொள்வது என்றே தெரியவில்லை.

  யார் பாடகி(இரண்டாவதாக சுட்டி காட்டப்படுபவர் ) என்று எளிதில் ஊகிக்க முடியும் தான். அவர் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 

No comments:

Post a Comment