Monday 5 August 2013

சில பழக்கங்கள்,பிரட்சினைகள் தொடர்பான மருத்துவ ரீதியான கேள்விகள் 
 
 
 கடும்  வெயில் இருக்கும் மாதத்தில் குழந்தை பிறந்தால்  பிரசவிக்கும் பெண் மிகவும் கஷ்டப்படுவாள் என்பதால் தான் ஆடி மாதம் பெண் கணவனை பிரிந்து தாய் வீடு செல்கிறாள் எனபது மருத்துவ ரீதியாக உண்மையா என்று ஆராய்ந்தால் வடிகட்டிய  பொய் என்று புலனாகிறது.
 

கல்யாணம் ஆன முதல் வருடம் மட்டும் தான் ஆடி மாதம் பெண் தன தாய் வீட்டிற்கு செல்வாள்.சரி முதல் குழந்தை/பிரசவம் தான் பயமுறுத்தும் ஒன்று என்பதை வாதத்திற்காக ஏற்று கொண்டாலும் குழந்தையின் பிறப்பை கணக்கிடும் போது ஆடிக்கும் சித்திரைக்கும் உள்ள தொடர்பும் வெகு குறைவு.

சித்திரை பொதுவாக ஏப்ரல் 14 முதல் மே 14 வரை தான்.அந்த நாட்களில் மட்டும் பிரசவம் இருந்தால் மிகவும் கடினம் என்பதற்கு எந்தவித மருத்துவ ஆதாரங்கள் கிடையாது.அந்த நாட்களில் குழந்தை பிறக்க வேண்டுமானால் கரு உருவாகி இருக்க வேண்டிய நாட்கள் (மூன்று மாதங்களை கூட்டி ஏழு நாட்களும் குறைக்க வேண்டும்.அதற்க்கு முன் பின் 14 நாட்களில் பிறந்தாலும் குறை பிரசவம் கிடையாது )ஜூலை 07 முதல் ஆகுஸ்ட் 07 வரை உள்ள நாட்களில் கடைசி menstrual cycle தினம் விழுந்தால் இந்த சித்திரை பிட்டை பேச முடியும்.ஆனால் ஆடிக்கு வீட்டிற்கு செல்லும் பெண்கள் aug 15 மறுபடியும் கணவன் வீடு திரும்புவார்கள்.அவர்களின் கடைசி menstrual cycle ஜூலை 25,26 27 எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் .aug 16 கரு உருவானாலும் நாள்கணக்கு ஆடியை வைத்து தான். குழந்தையும் சித்திரையில் தான் பிறக்கும்
 
திருமணதிற்கு பிறகு தன கணவனோடு தன வீட்டிலேயே வாழும் பெண் ஆடிக்கு எங்கு செல்வாள்.
 ஆந்திராவில் திருமணமான முதல் ஆடி மாதத்தில் மாமியாரும் மருமகளும் பார்த்து கொள்ள கூடாது எனபது தான் கதை. கழுத்தை சுற்றி தொப்புள் கொடியோடு குழந்தை பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்று கிருஷ்ணர் கம்சன் கதையை வைத்து உருவான  நம்பிக்கையை போல ஒன்று தான் ஆடி

  அதற்க்கு மருத்துவ முலாம்கள் பூச முற்படுவது சரியா 


திருமணமான உடன் கருத்தரிக்கும் பெண்களின் கடைசி menstrual cycle தினம் திருமணதிற்கு முந்தைய தேதியில் வரும்.அடுத்து வரும் menstrual cycle க்கு 14 நாட்கள் முன்னே கரு உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.அந்த தேதியை மருத்துவ சீட்டுகளில் எழுதும் போது ஒரு பெண்ணின் தாயார் என்னிடம் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்.அந்த தேதியை எழுதாதீர்கள் அது திருமணதிற்கு முந்தைய தேதி என்று .எவ்வளவு விளக்கியும் அவர் ஒத்து கொள்ளவில்லை.last menstrual period LMP எழுதாமல் வெறும் EDD (expected date of delivery)மட்டும் எழுதி அனுப்பினேன்.
 
  அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் தொடர்பை ஏற்படுத்த நடக்கும் முயற்சிகள் தேவையானது தானா 
    

2 comments:

  1. Well said Doctor...! அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் தொடர்பை ஏற்படுத்த நடக்கும் அபத்தங்களை அவ்வப்பொழுது எழுதுங்கள் டாக்டர் .

    Very good Post...

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்.என் முதல் பதிவு. என் பெயரில் வேறு ஒருவர் கீழ்த்தரமாக பதிவு இட்டதை தடுக்க ப்ளாக் துவங்கினால் அப்படி செய்ய முடியாது என்பதற்க்காக துவங்கப்பட்ட blogspot முகவரியை நண்பர்களிடம் கூட தர தயக்கமாக/வெட்கமாக இருந்தது.
    உங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது

    ReplyDelete