Saturday 17 August 2013

பாலியல் என்றால் என்ன



இதற்கான விடையை ஆண் பல ஆயிரம் ஆண்டுகளாக தேடி கொண்டு இருக்கிறான்.

எது அவனுக்கு இன்பம் தருகிறது
எதனால் அவனுக்கு இன்பம் வருகிறது.
இதை அவன் எளிதாக உணர்ந்து கொண்டான்
ஆனால் அதை தரும் துணையை சரியான முறையில் /சரியான வயதில் தேடி கொள்வதால் அவனுக்கு இன்பம் அதிகமாகுமே தவிர குறையாது என்பதை புரிந்து கொள்ளவில்லை.
அடுத்தவரை வன்முறைக்கு ஆட்படுத்தி அதனால் தான் இன்பம் வரும் என்ற மனநிலை இர...ுப்பது குரூரம்,குற்றம் ,அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சிக்குள் அவன் இன்னும் இறங்கவே இல்லை
பேருந்தில் தொடர்பே இல்லாத பெண்ணோடு உரசி இன்பம் பெறுவதை விட ,தனக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுத்து ,அவள் சம்மதத்தோடு கடற்கரைகளில்,சினிமா திரை அரங்குகளில் உரசுவது,முத்தம் தருவது தவறல்ல என்பதை அவனும் ,சமூகமும் புரிந்து கொண்டால் குற்றங்கள் குறையும்
என் இள வயதில்/கல்லூரி பருவத்தில் கூட்டமான பேருந்தாக பார்த்து ஏறி கொண்டிருந்தவன் என்ற முறையில் கூட்டத்தில் உரசுபவர்கள்  பற்றிய என் தோழியின் பதிவு அதில் உள்ள தவறை இப்போது தான் புரிய வைக்கிறது
ஹோலி என்ற பெயரில் பெண்களின் மேல் வண்ணம் தெளிப்பது என்ற சாக்கில் பாலியல் சுகம் பெற உரசும் அருவெறுப்பான செயல்கள்  மகிழ்ச்சியாக முழுமனதோடு இசையும் துணையோடு கூடிய பிறகு தானே
பாலியலுக்கு தொடொர்பில்லாத  வக்கிரங்கள்    எனபது  உரைக்கிறது
 
இது தவறு என்ற எண்ணமே ஏற்படாத நிலையை இப்போது நினைத்தால் கூசுகிறது

முரட்டுத்தனமாக குடித்து விட்டு வந்து மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை உடனே வா என்று அடித்து இழுத்து சென்ற உறவினரை/உறவினர்களை ,நினைத்தால் மனைவியை விளாசி எடுத்தவர்களை,சந்தேகப்பட்டு வண்டை வண்டையாக திட்டியவர்களை தவறாக பார்க்காத நிலை வருந்த வைக்கிறது

பாலியல் குற்றவாளிகள் அனைவரும் மனநோயாளிகள்.அதை குற்றம் நிகழ்த்துவதற்கு முன்பே அவன் உணர்ந்து அதை தடுக்க முயற்சிகள் எடுக்காதவரை குற்றங்கள் குறைவது கடினம்

பாலியல் வன்முறை புரிந்தவர்கள் மனநோயாளியாக பார்க்கப்பட்டு தண்டனையோடு பல ஆண்டுகள் அவர்களுக்கு மருத்துவமும் செய்யபட்டால்,அதை பார்த்து அதே எண்ணம் இருப்பவர்களும் அதை தவிர்க்க மருத்துவம் செய்து கொள்ள முன் வருவர்.
இதன் மூலம் பாலியல் குற்றங்களை குறைக்கலாம்.வன்முறை எண்ணம் உள்ள நம் குடும்பத்தில்,நட்பில் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு உட்படுத்தினாலும் குற்றங்கள் குறையலாம்
பாலியல் கல்வி ,பாலியல் என்றால் என்ன எனபது புரிந்து கொள்ளாமல் தான் பெரும்பான்மையானோர் இருக்கும் நிலையை மாற்றினாலும் பாலியல் வன்முறைகள் குறையலாம்
கன்னிகளோடு உறவு கொண்டால்,வயது வராத சிறுமிகளோடு உறவு கொண்டால் பாலியல் நோய் போய் விடும்/வராது,ஆண்மை கூடும் போன்ற மூட நம்பிக்கைகளை உடைத்து எறிந்தால் குற்றங்கள் குறையும்
கிரிக்கெட்,கால்பந்து,பாலே நடனம் போல தான்
பாலியலும்.பொறுமை,பயிற்சி,அன்னியோனியம்,கூட்டு முயற்சி இருந்தால் தான் அது சுவைக்கும் என்ற உண்மையே பலருக்கு தெரியாது என்ற நிலையை மாற்ற வேண்டும்.
சுயஇன்பம் மிக தவறு என்று எண்ணுபவர்களை,கனவுகளில் விந்து வெளியாவது ஆரோக்கியத்தை கெடுக்கும்,பாலியல் தொழிலாளர்களிடம் சென்றால் உடல் சூடு குறையும்,விந்து தன்னால் வெளியாவது ஆண்மைக்கு இழுக்கு ,அது ஒரு உடலில் தான் வெளியாக வேண்டும் என்ற நம்பிக்கை வைத்திருப்பவர்களிடம் அது தவறான மூடநம்பிக்கை என்பதை புரிய வைக்க வேண்டும்
ஊடகங்கள் இல்லாத காலத்திலும்,பெண்களை பூட்டியே வைத்திருக்கும் சமூகங்களிலும் பாலியல் குற்றங்கள் மிகுந்து தான் இருக்கின்றன என்பதை பார்த்தால் ஊடகங்களின் மேல் வைக்கும் குற்றசாட்டின் சாரம் இல்லாதது புரியும்

No comments:

Post a Comment