Friday 16 August 2013

அவன் நிலையில் நீ இருந்தால் என்ன செய்வாய்

முகநூலில்/வலைப்பூவில்  எழுதும் பழக்கம் டைரி எழுதுவதை போல.ஏன் டைரி எழுதுகிறாய் என்று யாரும் கேட்டது கிடையாது.ஆனால் நீ என்ன பெரிய பருப்பா ,எல்லா விஷயங்களையும் அலசி ஆராய,ஏன் வெட்டியாக நேரத்தை கழிக்கிறாய் என்ற கேள்வி எனக்கு நியாயமாக படவில்லை
அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதுவது,அலசுவது நம்மை மாற்றும் என்றும் திடமாக நம்புகிறேன் நாம் அறுக்கப்பட்ட செங்கல்களாக இருந்தாலும் கூட

    உன் வீட்டில் நடந்தால் என்ன செய்து இருப்பாய் என்ற கேள்வி இப்போது எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் முகத்தில் வீசப்படுகிறது. இந்த கேள்வியில் எந்த ஞாயம் இருப்பதாகவும் எனக்கு படவில்லை.நம் உறவுகள் ஆராய்ந்துபார்க்கும் தன்மையை கடந்தவை.
பிழைக்கும் வாய்ப்பே இல்லை,வேறு பிழைக்க கூடிய வாய்ப்புள்ள நோயாளிக்கு தான் ஹெலிகாப்ட்டர் evacuation/அறுவை சிகிச்சை /ventilator முதலில் என்று கூறும் உரிமை எனக்கு எப்போதும் உண்டு. உன் தாயாக/குழந்தையாக இருந்தால் இப்படி சொல்வாயா என்ற கேள்விக்கு கண்டிப்பாக சொல்ல மாட்டேன் என்று தான் கூறுவேன்.அதனால் தான் மருத்துவர்கள் தங்கள் உறவுகளுக்கு தாங்களே வைத்தியம் பார்க்க கூடாது,நீதிபதிகள் தங்கள் உறவுகளின் வழக்குக்கு தாங்களே தீர்ப்பு கூற கூடாது என்ற நடைமுறைகளும்
பிழைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் திருமணமாகாத உயர் பதவியில் இருந்த பெண் மருத்துவர் தன ஒரே துணையாக இருந்த பாட்டிக்கு பல லட்சம் செலவு செய்து சில வாரங்கள் ஆயுளை நீட்டித்து கொண்டிருந்தார். பல நோயாளிகளுக்கு /அவர்களின் உறவினர்களுக்கு தெளிவான அறிவுரை வழங்கிய அவர் தன ஒரே உறவு என்று வரும் போது அதற்க்கு நேர்மாறாக நடந்து கொண்டார். இதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை .

உறவுகள் பகுத்தறிவை கடந்தவை.அதனால் அவரை பார்த்து அன்று  அப்படி சொன்னே ஹி ஹி ஹி பார்த்தியா என்று சிரிப்பது அறியாமை

No comments:

Post a Comment