Friday 16 August 2013

சரியான முடிவு எடுக்க ஏற்ற வயது எது

இன கவர்ச்சி,முதிர்ச்சியடையா வயது,இரண்டும் கெட்டான் பருவம் என்று 18,20 வயது பெண்களை பார்த்து பல கேள்விகள் ,கணைகள் தொடுக்கபடுகிறது.
இதற்கு மருத்துவ ரீதியான ஆதாரங்கள் உள்ளதா.பலர் சிக்மண்ட் ப்ராஐட் சிஷ்யர்கள் போல அவர்களின் ஆராய்சிகளின் முடிவால் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பேசுவது போல காம காதல்,21 வயதிற்கு பிறகு வருவது தான் உண்மை காதல்,புனித காதல் என்று தூள் கிளப்பி கொண்டு இருக்கிறார்கள்
...ிருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டதற்கான காரணங்களில் முக்கியமானது குழந்தை பிறப்பை கட்டுபடுத்தும் எனபது.ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் வயது 15 ஆக இருந்தது. இன்று 16 வயதிற்கு குறைவாக எடுக்க கூடாது என்ற சர்வதேச தீர்மானத்தில் இந்தியாவும் ஒத்து கொண்டு கையெழுத்து இட்டிருப்பதால் 16 வயதில் ராணுவ வீரருக்கான பயிற்சிக்கு ஒருவர் சேர்த்து கொள்ள படுகிறார். .
18 வயதில் துப்பாக்கியால் தீவிரவாதிகளை/போரில் எதிரி நாட்டு வீரகளை /ஊரடங்கு உத்தரவின் போது வெளியில் தென்படுபவர்களை,சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் போது நிற்காமல் ஓடுபவரை சுட்டு கொல்லவும் அவருக்கு அனுமதி உண்டு.அந்த மனமுதிர்ச்சி வந்து விட்டது என்று பயிற்சி பெற்ற ஆண்,பெண் காவலர்கள்,துணை ராணுவ படை வீரர்களுக்கு அந்த அனுமதி வழங்கப்படுகிறது
ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு வயதில் மனமுதிர்ச்சி வரும் என்ற எந்த மருத்துவமுறை சொல்கிறது-அல்லோபதியா,உனானியா,சித்தாவா.ஆயுர்வேதமா
அதே வயதை சார்ந்த ஆண் மிகுந்த அறிவோடு ,குயுக்தி புத்தியோடு காதல் என்ற நாடகம் ஆடி ஏமாற்றுவான்,ஆனால் அதே வயதை உடைய பெண் ஒன்றும் தெரியாதவள்,ஏமாளி என்று எந்த மருத்துவ புத்தகங்கள் கூறுகின்றன
குடிகாரன்.தொடுப்பு வைத்திருப்பவன்,பல பெண்களோடு பழகி கை கழுவியவன் எல்லாருக்கும் பெற்றோர் ,உற்றார் பார்த்து திருமணம் செய்து வைக்க வாய்ப்பே கிடையாது.அவர்களின் ஒரே வழி காதல் நாடகம் தான் என்கிறார்களே -இது உண்மையா

2 comments:

  1. 20 வயதிற்கு பிறகு இன கவர்ச்சி குறைகிறதா

    காபரே நடனங்கள்,கள்ள தொடர்புகள்,பாலியல் தொழிலாளர்களுக்காக தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள்,இரண்டாவது,மூன்றாவது துணை தேடுபவர்கள்,அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழ் பணிபுரிபவர்களை,உதவிக்காக தன்னை தேடி வருபவர்களை அடைய முயற்சிப்பவர்கள் எல்லாம் 99 சதவீதம் 30 வயதை கடந்தவர்கள் தான்




    பாலியலுக்காக காதலிக்க /அல்லது அவனை/அவளை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்க என்றுமே அவசியம் கிடையாது.அதனால் ஆதாரம் இல்லாமல் இன கவர்ச்சி,பாலியல் வெறி என்று அநியாயமாக பழி போட கூடாது என்று கூறுவதில் தவறு உள்ளதா

    ReplyDelete
  2. 18 வயதான ஆண்/பெண் தன நண்பனுக்கு,அவன் குடும்பத்திற்கு கிட்னியை தரபோகிறேன் என்று முடிவு எடுத்தால் அதை பெற்றோர் தடுக்க முடியுமா
    சட்டப்படி 18 வயதில் வந்த தாத்தாவின் சொத்தை சாய்பாபாவிற்கு எழுதி வைத்தால் அதை தடுக்க முடியுமா.இல்லை தந்தை சொல்லும் கட்சிக்கு தான் வோட்டு போட வேண்டுமா
    18 இற்கும் 21இர்க்கும் என்ன வித்தியாசம்.சொந்த காலில் நிற்கும் போது தான் திருமணம் என்றால் சரி.ஆனால் இன கவர்ச்சி ,18இல் மன முதிர்ச்சி கிடையாது.முடிவுகள் எடுக்க உரிமை கிடையாது என்று மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் கூற முடியுமா

    ReplyDelete