Saturday 17 August 2013

மரண தண்டனை எனும் நரபலி

தூக்கு தண்டனை ஆதரவு எனபது நரபலி ஆதரவு போல

நரபலி கொடுத்தால் பல நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்ததற்கும் இப்போது மரண தண்டனை தந்தால் குற்றங்கள் அழிந்து விடும்,குறைந்து விடும் என்ற நம்பிக்கைக்கும் துளி கூட வித்தியாசம் கிடையாது
நரபலி தருவதை பார்ப்பவர்கள்,கேட்டவர்கள் சாமி வந்து ஆடுவது போல இங்கு சிலர் மரண தண்டனைக்கு ஆதரவாக குதிப்பது வேதனையான ஒன்று.
தன உறவினரை கடித்து உரிரழக்க வைத்த பா...ம்பை,சிறுத்தையை பிடித்த பிறகு அதை வெட்டி கொன்றால் தான் மனம் ஆறும் என்று சொல்வதற்கும் ,பிடிபட்ட குற்றவாளியை கொல்வதற்கும் வித்தியாசம் எதுவும் கிடையாது

வருடத்திற்கு பல ஆயிரம் பேர் நம் நாட்டில் வெறி நாய் கடியால் ஏற்படும் நோய்க்கு பலி ஆகிறார்கள்.அதை தடுக்க தெரு நாய்களை ஒழிப்பதை ,அப்படி செய்வது பாவம் என்று எதிர்க்கிறவர்களை கூட இப்படி யாரும் திட்டுவது கிடையாது,நக்கல்
செய்வது கிடையாது.மாறாக மேனகா காந்திகளின் தாளங்களுக்கு தான் பெரும்பான்மை அரசுகள் ஆட்டம் போடுகின்றன.ஆனால் பிடிபட்ட குற்றவாளியை கொல்லாதே என்று கூறினால் கூறுபவனை வெட்ட வேண்டும்,தேச துரோஹி என்று கூறுவது சாடிசம் மன நோயின் கீழ் வருமா

நான் மார்க்கெட்டிற்கு ,ரயில் நிலையத்திற்கு செல்லும் போது வழியில் குடித்து விட்டு வண்டி ஒட்டி ஒருவன் ஏற்றி இறந்து விட்டால்,அல்லது மெட்ரோ பாலத்தை கட்டும் பணியில் தவறான பொருட்களின்/தவறான அணுகுமுறையின் காரணமாக பாலம் சரிந்து அதனடியில் மாட்டி கொண்டால்,சிக்னலை மதிக்காமல் ஒரு வாகனம் ஏற்றி கொன்று விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கோவம் வராதா,கொலைக்கு காரணமானவனை தூக்கில் போட வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாதா
அந்த உரிமை யாராவது அதே மார்கெட்டில் குண்டு வைத்தாலோ,இல்லை துப்பாகியால் சுட்டு கொல்லப்பட்டால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வருமா
குறிப்பிட்ட வகையில் இறந்தால் மட்டும் தான் பாதிக்கப்பட்ட குடும்பம் நம் கண் முன் வருமா,உன் குடும்பம் பாதிக்கபட்டால் இப்படி பேச மாட்டாய் என்ற நக்கல் வருமா
விபத்துகளில் நெருங்கிய உறவினர்களை இழக்காதவர்கள் இல்லாத குடும்பங்களே இருக்காது. அதனால் அதனை குறைக்க சாலை விபத்துக்கு காரணமாக இருப்பவர்களை தூக்கில் போட வேண்டும் என்று யாரும் குதிக்கவில்லையே .தீவிரவாதம் காரணமாக இறப்பவர்களை விட விபத்துக்கள் காரணமாக இறப்பவர்கள் ஆயிரம் மடங்கு .ஆனால் யாரும் குற்றங்கள் குறைய தூக்கில் போடுங்கள் என்று பொங்குவது இல்லையே .பாதிக்கப்பட்ட பல லட்சம் குடும்பங்கள் கண்ணுக்கு முன் வருவதில்லையே

No comments:

Post a Comment