Saturday 17 August 2013

கொலைவெறியோடு அலையும் ஊடகங்களும் அதன் ஹீரோக்களும்

நன்றி இல்லாத அரசுகளும் வெறி ஏற்றும் ஊடகங்களும்

சரப்ஜித் சிங்கின் உடல் இந்தியா வந்து விட்டது.25 ஆண்டுகளை சிறையில் கழித்து அதன் முடிவாக அடித்து கொல்லப்பட்ட வீரனுக்காக அனைவரும் வருந்தும் நிலை ,அவர்களை பற்றி அறியும் நிலை உருவானது ஒன்று தான் இந்த நிகழ்வில் நடந்த ஒரே நல்ல விஷயம்

எல்லா நாடுகளின் அடிப்படை கோட்பாடே "செவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் "என்ற தத்துவத்தில் அடங்கியிருக்கும் வரை இவைகளுக்கு... முடிவு இருக்காது

நாட்டு பற்றினால் அல்லது ஏழ்மையில் இருந்து தப்பிக்க பணத்திற்காக உளவு பார்க்க செல்லும் அனைவரும் யோசித்து பார்க்க வேண்டிய தருணம் இது.எத்தனை ஆண்டுகள் சிறையில் வாடினாலும் ,மாட்டி கொண்டவனை கை கழுவி விடுவதற்கு,யார் என்றே தெரியாது என்று சொல்லாத அரசுகள் ஒன்று கூட தேறாது

எங்கள் நாட்டு உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று முடிவு செய்து மரணதண்டனை கொடுத்தால் அது நியாயத்தின் தீர்ப்பு,அதை நிறைவேற்றாதே என்பவர்கள் அந்நிய கைகூலிகள்,போலி மனித உரிமை வாதிகள்,தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்று கூறுபவர்களையும் சேர்த்து தண்டிக்க
வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்கள் அண்டை நாட்டு உச்ச நீதிமன்றம் தீவிரவாத செயல்களை புரிந்ததற்காக மரண தண்டனை வழங்கிய குற்றவாளியை நிரபராதி,தவறாக வழங்கப்பட்ட தீர்ப்பு,தண்டனையை நிறைவேற்ற கூடாது என்று கூச்சல் இடுவார்கள்.செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்,தவறா தீர்ப்பு வழங்க மாட்டான் எனபது தானே கடவுளின் வார்த்தை

இங்கு தீவிரவாத செயல்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்ற படாமல் இருக்கும் கைதிகளுக்காக அரசை குறை கூறும்,தூற்றும்,மரண தண்டனை வேண்டாம் என்பவர்களின் மீது புழுதி வாரி வீசும் கோச்வாமிகள் ,சு ஸ்வாமிகள் அண்டை நாட்டில் இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க முயற்சிகள் எடுக்கவில்லை என்று அரசை ஏசுவார்கள்.

நாட்டிற்காக பணி செய்ய சென்றவர்களை எப்படி காப்பாற்றுவது,இங்கு இருக்கும் குற்றவாளிகளை துருப்பு சீட்டாக வைத்து எப்படி அங்கு இருப்பவர்களை விடுவிப்பது என்று செயல்பட வேண்டிய அரசுகள் ,அவர்களின் உயிரை துச்சமென மதித்து ,இங்கு வெறி ஏற்றுபவர்களின் நோக்கத்தால் தேர்தலில் வோட்டுக்கள் குறையும் என்பதால் இங்குள்ள தீவிரவாத குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கில் போட்டு விட்டு பெரிய சாதனை செய்தது போல சிரித்து கொண்டு பேட்டி கொடுத்து அங்கு இருக்கும் கைதிகளை கை கழுவி விட்டது.இந்த அரசின் உச்சபட்ச கேவலம் இந்த செயல்
பலரை கொன்ற எதிர் நாட்டு வீரர்களை போருக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பரம் விடுவிப்பார்கள்.இரு நாடுகளின் சிறையிலும் பல நூறு கைதிகள் இப்படி பல ஆண்டுகளாக அடைபட்டு கிடக்கும் அவலத்தை,
அவர்களை எப்படி விடுவிப்பது எனபது பற்றி எந்த கோஸ்வாமியும் சிந்திப்பது கிடையாது.

வெறி ஏற்றும் ஊடகங்கள் ஒரு நாட்டிற்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன.நன்றி இல்லாத அரசோடு வெறி ஊட்டும் ஊடகங்களும் சேர்ந்தால் அவர்களுக்கு தீனியாக கொல்லப்பட்ட உடல்களுக்காக அலையும் நிலை தான் உருவாகும்.

No comments:

Post a Comment