Tuesday 13 August 2013

இட ஒதுக்கீடு




இட ஒதுக்கீடு பற்றி நிறைய குழப்பங்கள்,புரிதல் இல்லாத நிலை இன்றும் அதிகமாக உள்ளது.
ஓபன் கோட்டா என்று ஒன்று எதிலும் கிடையாது.எல்லா பதவி ,படிப்புக்கும் ஏதாவது ஒரு ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மக்கள் தேர்ந்தெடுக்கபடுவர்
புதுசேரியில் பல மருத்துவ கல்லூரிகள்(மாநில அரசு மருத்துவ கல்லூரி ஒன்று,மத்திய அரசு ஒன்று ,6,7 தனியார் மருத்துவ கல்லூரிகள்) அசாம் தவிர்த்த ஆறு வட கிழக்கு மாநிலங்களில் ஒரே ஒரு கல்லூரி தான் உள்ளது
பக்கத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்தவர்களுக்கு கூட தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் ஓபன் கோட்டாவில் சேருவதற்கு அனுமதி கிடையாது .இங்கு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்,குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் படித்தவர்கள் தான் ஓபன் கோட்டாவில் சேர முடியும்.மாநிலத்தை வைத்து வழங்கப்படும் இட ஒதுக்கீடு அது
நம்மை விட அதிக மக்கள் தொகை,அதிக மாணவர்கள் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் நம்மிடம் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களில் பாதி இடம் கூட கிடையாது .அவர்கள் யாரும் ஓபன் கோட்டா தானே என்று இங்கு வந்து சேர முடியாது.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நேபாளம் ,வங்காளதேசம் சேர்ந்தவர்களும் ஓபன் கோட்டா கீழ் வந்து சேர அனுமதி கோர முடியாது
மாநில ,குடியுரிமை அடிப்படையில் மொத்த இடங்களும் இந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
கோவா முதல்வர் அற்புதமாக ஆட்சி செய்து வருவாயை பெருக்கி பல ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கினால் அதனால் பலன் அவர்கள் மாநிலத்திற்கு தான்.மாநிலத்தில் யாரும் BPL கீழ் கிடையாது என்று அந்த மாநில காவல்துறை,மாநில அலுவலகங்களில் உள்ள வேலைகளை BPL மக்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கோ,நாடுகளுக்கோ வழங்க முடியுமா
மாநிலவாரி இட ஒதுக்கீடு எனபது நூறு சதவீதம் அல்லது மத்திய அரசு பொது தேர்விற்கு ஒப்பு கொண்ட மாநிலங்கள் என்றால் 85 /75 சதவீதம் .இந்த ஒதுக்கீட்டை தெரியாதது அல்லது புரியாதது போல பேசுவது வியப்பு தான்
இட ஒதுக்கீட்டால் ஒரு சில பிரிவினரே அதிகம் பலன் பெறுகிறார்கள் என்றால் பாதிக்கப்படும் மற்ற பிரிவுகள் போராடி தனி ஒதுக்கீடு,உள் ஒதுக்கீடு பெறுவதும் நாடு முழுவதும் நடந்து வரும் ஒன்று தான்.சாதி ரீதியான இட ஒதுக்கீடு பெரும் குழுக்கள் யாரும் கிரீமி லேயர் பற்றி பேசுவதில்லை .அதை பெறாதவர்கள் தான் அதை பற்றி அதிகம் கவலைப்படுவது

இட ஒதுக்கீடு எனபது ஏழைகள் முன்னேற்ற திட்டம் அல்லது ஏழைகள் மறுவாழ்வு திட்டம் அல்ல
ஆட்சியில் ,அரசில் அனைத்து துறைகளிலும் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும் ,யார் வேண்டுமானாலும் முயன்றால் வர முடியும் என்ற நிலை இருக்க வேண்டும் என்பதற்கான திட்டம் தான் அது.

ஆந்திராவில் டேலேங்கான பகுதியில் இருக்கும் கல்லூரிகளில் 85 சதவீதத்தினர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு தான்.மீதி பதினைந்து தான் கரையோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவிர்க்கு .அதே நிலை தான் ராயலசீமாவில் இருக்கும் கல்லூரிகளில் அங்கு இருக்கும் மாணவர்களுக்கு


இதில் எல்லாம் கிரீமி லேயர் நுழையுமா.
மாற்று திறநாளிகள் இட ஒதுக்கீட்டில் படிப்பவர்,வேலை கிடைப்பது முக்கால் வாசி சோ called கிரீமி லேயரக்கு தான்.அது தவறா.


முன்னாள் ராணுவத்தினர் இட ஒதுக்கீட்டில் பெருமளவில் சேருபவர் அதிகாரிகளின் பிள்ளைகளா ,ஜவான்களின் பிள்ளைகளா


தாய் தந்தை பட்டதாரி இல்லை என்றால் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் ஊக்க மதிப்பெண் கிடைக்கும் கலைஞர் திட்டத்தை அடித்தது நீதிமன்றங்கள் தான்
அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டையும் அடித்தது நீதிமன்றங்கள் தான்.

பள்ளி,பெற்றோரின் கல்வி தகுதியை வைத்து வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களால் இட ஒதுக்கீட்டின் கீழ் முதல் தலைமுறையினருக்கு முன்னுரிமை தருவது எளிது தான்.நீதிமன்றங்கள் தான் அப்படி முன்னுரிமை தரும் திட்டங்களை தடுத்து வருகின்றன

2 comments:

  1. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் அதிக இடங்கள் செல்கிறது,பணம் படைத்தவர்கள் மட்டும் பலன் பெறுகிறார்கள் என்றால் உள் ஒதுக்கீடு ,தாய் தந்தை படிப்பு,படித்த பள்ளி போன்றவற்றை வைத்து ஊக்க மதிப்பெண்கள் முன்னுரிமை எனபது தானே வழி.அதை கெடுப்பது நீதிமன்றங்கள் தானே
    சாதி வழி இட ஒதுக்கீடு இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில்,வேலைகளில், அனைத்து இடங்களும் பணக்கார வாரிசுகளுக்கு செல்லும் போது நாம் கவலைபடவில்லையே
    பணம் வைத்திருப்பவர் தன வாரிசுகளுக்கு பணம் கொடுத்து இடம் வாங்காமல் இருந்தால் அந்த இடம் ஏழைகளுக்கு சென்றிருக்கும் என்று கூட வாதாடலாம்
    பெண் என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைத்தால் ஏழை பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு என்று எண்ணி அதையும் விட வேண்டுமா(தமிழகத்தில் 1989 முதல் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு உண்டு )

    ஒதுக்கீடு உள்ள வேலைகளில் 90 சதவீதம் குரூப் 4 வேலைகள் தான்.எந்த கிரீமி லேயரும் அதற்கு போட்டி போடுவதில்லை.அதிகாரி வேலைகளில் இன்றும் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பணியிடங்கள் எந்த பிரிவினருக்கும் நிரப்பப்படவில்லை.carry ஓவர் ஆகி backlog இடங்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடந்து வருவது தான் இன்றைய நிலை
    கிரீமி லேயர் எத்தனை இடங்களை பிடித்துள்ளன என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது ஒரு பத்து சதவீதம் கூட தாண்டாது.
    பாஸ்வானின் மகனையோ,சரத் யாதவின் மகளையோ அவர்கள் குழுவை சார்ந்தவர்கள் வர கூடாது என்று நினைப்பதில்லையே.தங்களில் ஒருவராக தானே பார்க்கிறார்கள்.

    ReplyDelete
  2. இருப்பது குழுக்களுக்கு ஆன இட ஒதுக்கீடு. கிரீமி லேயரின் நரி குறவர் அல்லது கேப்மாரி சாதியை சார்ந்தவருக்கு கிடைத்த இடம் அவரின் பொருளாதார நிலையால் அவருக்கு தரப்படாமல் வன்னியருக்கோ,கள்ளருக்கோ செல்வதால் என்ன பயன்.இது அருந்ததியருக்கும் ,பில் பழங்குடியினர் என அனைவருக்கும் பொருந்தும்.
    தாய் தந்தையின் படிப்பு,படித்த பள்ளி இரண்டுக்கும் தலைக்கு பத்து ஊக்க மதிப்பெண் இருந்தால் தன்னால் 170 ,190 ஆக மாறி இடத்தை பிடிக்க போகிறது.அப்படி இருந்த திட்டத்தை அடித்தது நீதிமன்றங்கள் தான் .கலைஞரின் அரசு 1990 இல் பட்டபடிப்பு படிக்காத பெற்றோரின் வாரிசுக்கு ஐந்து மதிப்பெண் ஊக்க மதிப்பெண் வழங்கியது.இது அனைத்து சாதிகளுக்கும் வழங்கப்பட்டது.
    படித்த பள்ளியை வைத்து 15 சதவீத இட ஒதுக்கீடு
    கலைஞர் அரசால் ஆரம்பிக்கப்பட்டு ,அதிமுக அரசால் 25 சதவீதம் என்று அதிகரிக்கப்பட்டது.அதையும் அடித்தது நீதிமன்றங்கள்

    http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road

    A 2005 graduate from St Stephen's College in Delhi, Armstrong Pame is the sub-divisional magistrate of Tamenglong, his home district, and the first IAS officer from the Zeme tribe. He has, of his own volition, begun the construction of a 100-km road that would link Manipur with Nagaland and Assam

    சில வருடம் கழித்து படித்து அவர்கள் குழுவில் முதலிடங்களில் வந்தாலும் இவர் மகனுக்கு இதே வேலை கிடைக்க கூடாது என்று சொல்வது சரியா.இவர் பிறந்த பழங்குடியிலிருந்து முதலில் வந்த அதிகாரி இவர்.நாளை இவர் மகன்/மகள் விட்டு கொடுத்தால்/ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கப்பட்டால் அந்த இடம் பழங்குடியினரில் அதிக இடங்களை பெரும் மீனா இனத்தவருக்கு செல்லாது எனபது என்ன நிச்சயம்.பெரும்பாலும் அது தான் நடக்கும்
    நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்த மருத்துவரின் ,அதிகாரியின் மகனை ஒதுக்கினால் இவர் வாரிசுக்கு கிடைத்திருக்க வேண்டிய அந்த இடம் MBC பிரிவினரில் வரும் வன்னியருக்கு செல்வதால் நரிகுறவருக்கு என்ன பயன்.

    ReplyDelete