Saturday 17 August 2013

தாய்மொழி வெறி

பள்ளி கல்வியால் அனைவரையும் அறிவாளியாக .சிறந்த படிப்பாளியாக ஆக்க முடியும் என்ற நம்பிக்கை ஆச்சரியத்தை தருகிறது.
குறிப்பிட்ட மொழியில்,தாய்மொழியில் கற்றால் அனைவரும் அறிவாளியாகி விடுவர்,உலகில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நூயுடன்களும் ,போசெகளும் ஓடி விளையாடுவார்கள் என்ற எண்ணம் சரியானது தானா
பள்ளி கல்வியின் முக்கியமான நோக்கம் சிறுவர்களின்,மாணவர்களின் வாழ்வை ஒழுங்கு படுத்துதல்.நேரத்திற்கு எழுந்திருத்தல்.வக...ுப்பின் போது காலைகடன்கள் வந்தால் சிரமம் என்பதால் காலைகடன் கழித்தலை எழுந்தவுடன் செய்வதற்கு உடலை பழக்குதல்
பல்வேறு குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுடன் பழகுதல்,ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்,பகிர்தல்,நட்பு பாராட்டுதல்,நண்பர்களை பெறுதல்.ஆசிரியர் என்பவரை மதித்தல்,பல்வேறு துறைகளை பற்றி அறிதல் ,ஒன்றாக விளையாடுதல்,ஒன்றாக பயணம் செய்தல் போன்றவற்றோடு சில விஷயங்களை புத்தகங்களின் வாயிலாக,ஆசிரியரின் வாயிலாக தெரிந்து கொள்ளுதல்.
பள்ளிகளை கிரிக்கெட்,கால்பந்து அகாடமி போல எண்ணுதல் சரியான ஒன்றா.அகாடேமிகள் தோனியை,ரூணியை,செரெனாவை உருவாக்காது.அவர்கள் அவர்களை செம்மை படுத்தி கொள்ள வழியை அவர்களே தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.
படிப்பும் அதே தான்.குறிப்பிட்ட பள்ளி,குறிப்பிட்ட வகை பயிற்சிமுறை,தாய்மொழி கல்வி பல அறிவாளிகளை உருவாக்கும் என்ற கூற்றில் உண்மை குறைவு.அனைவருக்கும் அடிப்படை அறிவு தருவது தான் பள்ளியின் கடமை.

தாய் மொழி தான் நல்லது என்பதற்கும் தாய்மதம் தான் நல்லது/தந்தை தொழில் என்ற குல தொழில் தான் நல்லது என்ற வெறிக்கும்வித்தியாசம் கிடையாது.இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் மொழிகள்
அதில் பெரும்பான்மை மொழிகள் வெறும்பேச்சு மொழிகள் தான் எழுத்துக்கள் கிடையாது
எழுத்து இருக்கும் மொழிகளும் வேறு மொழியின் லிபியை கடன்வாங்கியவை தான்
அதிகம் பேசப்படும் மொழிகள் பல மொழிகளை அழித்து,உள்வாங்கியதால் தான் அதிக மக்களால் பேசப்படுகின்றன
தாய்மொழி கல்வி தான் சிறந்தது என்று கூறுவதன் காரணம் அவர்கள் வசிக்கும் பகுதியில் பயன்படுத்தும் வார்த்தைகளை ,வீட்டில்பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கற்று கொள்வது எளிது என்பதால் தான்
தமிழை தாய்மொழியாக கொண்ட வெளிநாட்டில்,வெளிமாநிலத்தில் பிறந்த குழந்தை அவளை தவிர மற்ற அனைத்து குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்கும் போது இவள் மட்டும் தமிழில் படித்தால் தான் கல்வியில்சிறந்து விளங்குவாள் என்ற வாதம் ஒரு புரட்டு தான்
மொழிகளின் ஆயுளும் வெகு குறைவு தான்.பல ஆயிரம் மொழிகள் அழிந்து விட்டன.இப்போது நாம் தாய்மொழி என்று சொல்லி கொள்ளும் மொழிகளும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தாய்மொழியாக இல்லாமல் இருந்திருக்கும்.வசிக்கும் இடங்களில் உள்ள பெரும்பான்மை மொழி மற்ற மொழி பேசுபவர்களை சிறிது சிறிதாக உள்வாங்கி விடும்.
மொழிகளை பாதுகாக்க வேண்டும் எனபது சரி.ஆனால் எந்த மதம் வேண்டும்,எந்த மொழியில் படிக்க வேண்டும்,எந்த இடத்தில வேலை செய்ய வேண்டும் எனபது எல்லாம் தனி மனித முடிவுகள்.அவனவனுக்கு பிடித்த மொழி அவனவனுக்கு
தமிழில் அனைத்து அறிவியியல்,மருத்துவம்,பொறியியல் புத்தகங்கள் மிகுந்தால் சீனாகாரன் கூட தமிழை அவர்கள் ஊரில் கட்டாயம் ஆக்குவான்.அப்படி இல்லாமல் ஒருவன் இங்கு பிறந்ததால்,அதுவும் அரசை நம்பி அது நடத்தும் பள்ளி,கல்லூரியில் படித்தால் அரசு அவன் மேல் பெரும்பான்மை மொழியை திணிக்கும் என்பதில் என்ன ஞாயம் இருக்கிறது

2 comments:

  1. http://www.mkgandhi.org/towrds_edu/chap15.htm

    Endeavouring to think in terms of all-India I suggested to my friends that, whilst it was proper for them to strengthen the Uriya language among the Uriya-speaking people, the children of this tribe should be taught Hindi and naturally the script should be Devanagari. A spirit that is so exclusive and narrow as to want every form of speech to be perpetuated and developed, is anti-national and anti-universal. All undeveloped and unwritten dialects should, in my humble opinion, be sacrificed and merged in the great Hindustani stream. It would be a sacrifice only to be nobler, not a suicide. If we are to have a common language for cultured India, we must arrest the growth of any process of disintegration or multiplication of languages and scripts. We must promote a common language. The beginning must naturally be made with the script, and until the Hindu-Muslim question is solved, confined perhaps to Hindu India. If I could have my way, I would make the learning of Devanagari script and Urdu script, in addition to the established provincial script, compulsory in all the provinces and I would print in Devanagari chief books

    காந்தி தாத்தா சொன்னதை தான் சொல்கிறார்.நேரடியாக தேவநகரி என்று நேரடியாக விருப்பத்தை சொல்லும் சூழல் இல்லாததால் ஆங்கிலம் என்று போட்டு பார்க்கிறார்.
    தேவநாகரியில் அனைத்து மொழிகளும் எழுதப்பட வேண்டும் என்று

    pioneer பத்திரிக்கை சில ஆண்டுகள் முன் பல வாரங்களுக்கு முன்னணி இந்தி எழுத்தாளர்கள்,கல்வியாளர்களை வைத்து அனைத்து மொழிகளிலும் தேவநாகரியை பயன்படுத்தினால் விளையும் நன்மைகள் பற்றி கட்டுரைகளை வெளியிட்டது.

    ReplyDelete
  2. தமிழில் வரும் புததகங்கள் விற்பதை விட ஆங்கிலத்தில் வரும் புததகங்கள் பல மடங்கு அதிகம் விற்பதால் ஆங்கில எழுத்துக்களை கொண்டு தமிழ் புத்தகங்களை வெளியிடலாமா என்ற கோரிக்கை ஞாயம்.
    அதை எழுதும் உரிமை, அப்படி ஆங்கில எழுத்துக்களை கொண்டு எழுதப்பட்ட தமிழ் புத்தகத்தை பதிப்பிக்கும் உரிமையை யாரவது தடுப்பது சரியானது அல்ல

    இப்படி பதிப்புக்கள் வந்து அவை நன்கு விற்றால் மொத்த கூட்டமும் அப்படி பதிப்பிக்க தாவி விடும்
    நாம் தான்
    ஆரிய கூத்தாடினாலும் தாண்டவ கோனே
    காசு காரியத்தில் கண் வைய்யடா தாண்டவ கோனே கூட்டமாயிற்றே

    ஆனால் அனைவரும் தமிழ் எழுத்துக்களை விட்டு விட்டு ஆங்கில எழுத்துக்களை வைத்து தமிழ் படித்தால் என்ன என்ற கேள்வி சரியானது தானா.இப்படி ஒரு கூட்டம் படிக்கட்டும்.அப்படி ஒரு கூட்டம் உருவாகட்டும்,குறிப்பாக வெளிநாட்டில்,வெளி மாநிலங்களில் வாழும்,தமிழ் படிக்க வசதியில்லாத வாய்ப்பில்லாதவர்கள்.

    பள்ளிகளில் இப்போது இருக்கும் எழுத்துக்களை புறக்கணித்து விட்டு புது எழுத்துமுறை எனபது தான் இந்தி/இந்துத்வா திணிப்பு போல தெரிகிறது.பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள அனைவரும்,அனைத்து மொழிகளும் தேவநாகரி எழுத்துருக்களை பயன்படுத்த வேண்டும் என்ற முழக்கம் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது

    http://www.indianexpress.com/.../611785/

    ReplyDelete