Saturday 17 August 2013

மது விலக்கு தேவையா/சாத்தியமா

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதை தான் மத/சாதி அடிப்படைவாதிகளும் கூறுகிறார்கள்
addiction எனபது வியாதி. மது இல்லை என்றால் மாத்திரை/பக்தி,சாதி வெறி(முக்கால்வாசி வெறி பிடித்தவர்கள்,காந்தியை கொலை செய்ய துணியும் கோட்சேக்கள் எந்த பழக்கமும் இல்லாதவர்கள் தான் )
மதுவிலக்கு இருக்கும் மாநிலங்களில் வாழ்ந்தவன்... என்ற முறையில் கூறுகிறேன்.அது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று.முட்டாள்தனமான கொள்கை
மணிப்பூரில் ஒவ்வொரு வீட்டிலும் அரிசியில் இருந்து சாராயம் காய்ச்சுவார்கள்.அதில் போதையை அதிகமாக்க என்ன சேர்க்க வேண்டும் என்பதில் தான் வேறுபாடு
பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தல்/அங்கு இருக்கும் ராணுவ வீரர்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கி விற்றல் போன்றவை மிக அதிகம்
போக்குவரத்து வசதிகள்/சாலைகள் பெருகிய இந்நாளில் அண்டை மாநிலங்களுக்கு செல்ல அதிக நேரம் எடுக்கும் ஊர் எதுவும் தமிழகத்தில் கிடையாது.புதுவை/ஆந்திரம்,கேரளம்,கர்நாடகம் என்று மற்ற மாநிலங்களில் சென்று மது அருந்துவதோ,அங்கிருந்து ரகசியமாக வாங்கி வந்து விற்பதோ மிகவும் எளிதான ஒன்று.விலை குறைவு என்று பாண்டியில் இருந்து வாங்கி வரும் சரக்கில் நூற்றில் ஒரு பங்கு கூட பிடிபடுவதில்லை.பிடிபட்டாலும் போலிசுக்கு அதிக வருமானம்.அவ்வளவு தான்
2500 க்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் இருந்தால் அங்கு மருத்துவ உதவி நிலையம் அவர்களுக்காக ஆரம்பிக்க வேண்டும் என்று விதி.அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதை விட அதிக எண்ணிகையில் தான் முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர்.அவர்கள் மது வாங்குவதை மாநில அரசின் மதுவிலக்கு தடை செய்ய முடியாது.ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மாசம் வாங்கும் பாட்டில்கள் மூன்று லட்சத்திற்கும் அதிகம்.மது விலக்கு வந்தால் இப்போது கிடைக்கும் விலையை விட இரண்டு மூன்று மடங்கு அதிக விலை கிடைக்கும்.அவர்களுக்கு அதிக வருமானம்.குஜராத்தில் இப்படி பெரும்பணம் சம்பாதித்தவர் பலர்.
பணக்காரர்களுக்கு லைசென்ஸ் ,ஐந்து நட்சத்திர விடுதிகளில் அனுமதி இருக்கும்.நடுத்தர வர்க்கத்தினர் நூறு கிலோமீட்டர் தள்ளி போய் பக்கத்து மாநிலத்தில் குடித்து விட்டு விழுந்து கிடப்பர்.போதைக்கு அடிமையாக விரும்புபவர்கள் இருமல் மருந்துகளில் மாத்திரைகளை கலந்து பாட்டில் பாட்டில் ஆக முழுங்குவர்
கள்ள சாராயம் பல கொலை/திடீர் பணக்காரர்களை உருவாக்கும் .
இணையத்தின் மூலம் சாராயம் எப்படி தயாரிக்கலாம் என்பதை எளிதில் யார் வேண்டுமானாலும் கற்று கொள்ள முடியும்.
மனிதன் அரிசியை முதலில் பயிர் செய்ய துவங்கியதே சாராயத்திற்காக தான் என்று பல ஆராய்ச்சியாளர்கள் இப்போது கருதுகின்றனர்.கிடைக்கின்ற அனைத்து உணவு பொருட்களில் இருந்தும் சாராயம் தயாரிக்கும் முயற்சி ஆதி மனிதன் தொட்டு இன்று வரை நடைபெற்று வருவது
திருமணமான பெண்களுக்கு திருமணம் ஆகாத பெண்களை விட கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம்.அதனால் திருமணத்தை தடை செய்யலாம் என்று எண்ணுவதற்கும் மது விலக்கு போதையை அழித்து விடும் என்று எண்ணுவதற்கும் வித்தியாசம் கிடையாது

2 comments:

  1. மதுவை வெறியோடு எதிர்ப்பவர்களில் 100 க்கு 99 பேர் மத /சாதி வெறியர்கள் தான்.
    மத ரீதியாக மதுவை எதிர்ப்பவர்கள் எதிர்க்கும் பலவற்றில் மதுவும் ஒன்று .மனித உரிமை என்பதை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் தான் அவர்கள்.அவர்கள் மத குருக்கள்,மத புத்தகங்கள் எதிர்க்கும் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்,தடையை மீறி தடை செய்யப்பட்ட செயலை செய்பவனை கொலை செய்தாலும் சரி என்று தலை ஆட்டுபவர்கள் தான் அவர்கள்.
    இந்த மத /சாதி வெறி இல்லாத சிலரும் மதுவை வெறியோடு எதிர்ப்பது,அதை தடை செய்தே தீர வேண்டும் என்று துடிப்பது எதனால்.அதிகம் எடுத்து கொள்வதால் வரும் தீமைகளை விளக்குவது சரியா அல்லது அதை ஒழிக்க வேண்டும் எனபது சரியா.
    பாலியல் வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுவதால் ஆண்களின் பாலியல் உறுப்புகளை அழித்து விட்டு இப்போது மாடுகளுக்கு பெரும்பாலும் செய்யபடும் செயற்கை கருத்தரிப்பு போல மக்களுக்கும் செயற்கை கருத்தரிப்பு/க்ளோனிங் மூலம் குழந்தைகள் என்பதை நடைமுறைபடுத்தி விட வேண்டும் என்று கோருவதற்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கோருவதற்கும் வித்தியாசம் கிடையாது.
    மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் மதுவிற்கு முக்கிய பங்கு உண்டு. மதுவை தேடும் முயற்சியில் தான் அரிசியை கண்டுபிடித்தான்.முதல் மருந்தும் மது தான்

    ReplyDelete
  2. மேலே பாலியல் வன்முறை பற்றி நான் கூறி இருப்பதில் உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறது.
    குடித்து விட்டு வண்டி ஓட்டுவதை தடுப்பதை/அப்படி ஓட்டுபவர்களை தண்டிப்பவர்களை யாராவது தவறு என்கிறார்களா
    முட்டாள்தனமாக மதுவிலக்கு வந்தால் வாகன விபத்துக்கள்/குற்றங்கள் பல மடங்கு தான் ஆகும்.தமிழகத்தின் பெரும்பான்மை பகுதிகளில் இருந்து அண்டை மாநிலங்கள் ஆன புதுசேரி,கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் 10 நிமிடத்தில் இருந்து 3 மணி நேரம் தான். வண்டி எடுத்து சென்று அங்கு குடித்து விட்டு வருவதை தான் மது விலக்கு சாதிக்கும்.
    அங்கிருந்து வரும் ஒவ்வொரு வாகனமும் கடத்தல் வாகனம் தான்.
    தம்மாதூண்டு புதுச்சேரியில் பல செக்போஸ்ட் இருந்தாலும் பலமுறை அங்கிருந்து சரக்கை எடுத்து வந்த சாதனை புரிந்தவர்களில் அடியேனும் ஒருவன்.மொத்த தமிழகமும் செக்க்போஸ்ட் ஆனாலும் IMFL சரக்கு குடிக்க வேண்டும் என்பவனை அடுத்த மாநிலம் சென்று குடிப்பதையும் தடுக்க முடியாது,அங்கிருந்து சரக்கு எடுத்து கொண்டு வருவதையும் தடை செய்ய முடியாது

    கள்ள சாராயம் என்ற அரசியல்வாதிகள்,காவல்துறையினருக்கு உருவாகும் தங்க சுரங்கத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்

    ReplyDelete