Saturday 17 August 2013

பால் விலக்கு

மது விலக்கு என்ற அலாஉதின் விளக்கு மறுபடியும் பலரால் ஏதாவது புதையல் கிடைக்குமா என்ற எண்ணத்தில் பலரால் தேய்க்கப்படுகிறது
பால் விலக்கு போராட்டம் ஏன் யாருக்கும் தோன்றவில்லை.பால் கறப்பதை விட கொடிய பாலியல் வன்முறை எதுவும் இருக்க முடியாது .மிருகவதை எதிர்ப்பு போராளிகளும் பசு,எருமையின் மீதான இந்த பாலியல் வன்கொடுமையை இன்று வரை எதிர்த்ததாக தெரியவில்லை .
பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளு...க்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதற்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டாயமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்
பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட/அதை வைத்து அபிஷேகம் செய்வதை எதிர்க்க வேண்டும் என்று எந்த காந்தியவாதிக்கும் தோன்றாதது ஆச்சரியம் தான்
மிருக பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகள்,பெரியவர்கள் பல லட்சம் பேர் உண்டு.மது ஒவ்வாமை எனபது மிகவும் அரிது
பால் குடிப்பதால் வரும் வியாதிகளும் ஒன்றும் குறைவு கிடையாது .ராமர் பாலத்தை விட மத ரீதியாக கொண்டாடப்படும் , இவ்வளவு பெருமை கொண்ட பசுவின்  மீது பாலியல்
வன்முறை புரிந்து கரக்கபடும் பாலை விலக்க யாரும் போராடதது ஏன் என்று விளங்கவில்லை

3 comments:

  1. பக்கத்து மாநிலமான கேரளாவில் கள் கடைகளும் அரசு மது கடைகளோடு உண்டு. அங்கு யாரும் மது கடைகளை மூடு என்று போராடுவது/பூட்டுவது ,உண்ணாவிரதம் இருப்பது என்று நாடகமாடுவது கிடையாது
    அங்கு PER CAPITA குடி நம் மாநிலத்தை விட அதிகம்.கேரளாவில் தான் மக்கள் அதிக நாள் உயிர் வாழ்கிறார்கள்.விவசாயத்தில் நல்ல வளர்ச்சியை அடைந்து செழுமையான விவசாயிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்திலும் மக்கள் நம் மக்களை விட அதிகம் குடிப்பவர்கள் தான்.அங்கு அரசு வருவாயை சீர்படுத்தாததால் மது மூலம் வரும் வருவாய் குறைவு. இங்கு அரசு மது விறபனையை சீர்படுத்தியதால் கிடைக்கும் அதிக வருவாய் பலர் கண்ணை உறுத்துகிறது.தனியார் கடைகள் இருந்து இருந்தால் இப்போது வரும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கு கூட வராது.மது எதிர்ப்பு போராளிகளும் அவரவர் வேலையை பார்த்து கொண்டு இருப்பார்கள்
    மதுவோ,மாத்திரையோ,பாலோ,மாட்டு கறியோ அதிகமாக உண்பதால்/குடிப்பதால் வரும் தீமைகளை விளக்கினால் சரி.மாறாக தடை செய்ய வேண்டும் என்று போராடும் உரிமை சரியான ஒன்றா
    உலகிலேயே மக்கள் வாழ பயப்படும்,மகிழ்ச்சியாக வாழ தகுதி இல்லாத இடங்களாக கருதப்படும் ஆப்காஅநிச்டான்.பாகிஸ்தான்,அரபு நாடுகளில் தான் மது விலக்கு உண்டு. அந்த நிலையை தமிழகம் அடைய வேண்டும் எனபது தான் மது எதிர்ப்பாளர்களின் நோக்கமா

    ReplyDelete
  2. வேறு கிரக வாசிகள் நம் உலகத்தை பிடித்து பெண்களை தெய்வமாக ஆக்கி,வழிபட்டு ,அவர்களை கட்டி போட்டு அவர்களின் குழந்தைகளுக்காக,அவர்களின் உணவுக்காக,அவர்களின் வழிப்பாட்டு முறைகளுக்காக தினமும் பால் கறந்தால் ஆஹா பெண்களை தெய்வமாக வணங்கும் அற்புதமான மக்கள் என்போமா

    நாம் மாட்டின் மீது செய்வதும் அதே வன்முறை தான்.

    அப்படி மனிதர்கள் பிடிபட்டு பல ஆண்டுகள் தினமும் வன்முறைக்கு உடபடுத்தபட்டு ,பெண்கள் தான் பெற்ற குழந்தைகளின் கண் எதிரே அவர்களின் கதறலை பார்த்து கொண்டே ,தன்னை விட சக்தி வாய்ந்த ஜீவராசி தன்னை தங்கள் விருப்பம் போல வன்முறைக்கு உட்படுத்துவதை தடுக்க முடியாத நிலையை அவர்களை தெய்வம் என்று அழைப்பதால் அவர்களுக்கு மிகவும் உன்னதமான நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கூற்றை ஏற்று கொள்வோமா

    ReplyDelete
  3. நம்மை விட வலிமையான உயிரினம் நம்மை பிடித்தால் அதனால் கொல்லப்பட்டு அதற்கு உணவாவதா அல்லது அதனால் கைப்பற்றப்பட்டு பெண்களை தெய்வம் என்று அந்த உயிரினம் வணங்கி பெண்களை அவர்களுக்கு பால்தரும் இயந்திரங்களாக/ஆண்களை பொலிகாளைகளாக,சுமை இழுக்கும் மிருகங்களாக பல வருடம் பயன்படுதபடுவதை ஏற்று கொள்வீர்களா என்றால் பெரும்பாலோர் எதை ஏற்று கொள்வோம்
    உலகின் பெரும்பாலான மக்கள் மாட்டு கறி உண்பவர்கள் தான்.ஹிந்து கோவில்களிலும் இன்றும் எருமை மாடுகளை ஆயிரக்கணக்கில் பலி கொடுத்து,அதனை பிரசாதமாக உண்ணும் வழக்கங்களும் உண்டு. பன்றி கறியை பற்றி பொய் செய்திகளை முல்லாக்கள் பரப்புவது போல மாட்டுகரியை பற்றிய பொய் செய்திகளை ஹிந்துத்வா போராளிகள் பரப்புகிறார்கள்.மருத்துவ ரீதியாக நன்கு சமைக்கப்பட்ட பன்றி/மாட்டு மாமிசத்தில் எந்த உயிரினங்களால் பரவும் நோய்களும் வராது.

    ReplyDelete